Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப் 4 போட்டி தேர்வு! 10,000 பத்தாது! 25,000 காலிபணியிடங்களை நிரப்பணும்! கொங்கு ஈஸ்வரன் டிமாண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 போட்டித்தேர்வு மூலம் 25,000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

காலிப்பணியிடங்கள் தான் அரசு அலுவலகங்களில் பல பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதற்கு காரணமே என அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை வருமாறு;

Eswaran has insisted that the government should fill up at least 15000 vacancies through Tnpsc

ஒவ்வொரு முறை குரூப் தேர்வு நடைபெறும் போது சில ஆயிரம் காலி பணியிடங்களுக்கு பல லட்சக்கணக்கானவர்கள் போட்டித் தேர்வு எழுதுவது நாம் கண்கூடாக பார்ப்பது ஒன்று. பல ஆண்டுகளாக ஒரே குறிக்கோளுடன் அரசு பணியில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் பலரும் போட்டித் தேர்வுகளில் பயிற்சி மேற்கொண்டும், போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டும் வருகின்றனர்.

அரசு ஒவ்வொரு போட்டி தேர்வு நடத்துவதற்கு முன்னரும் பின்னரும் பல முன்னேற்பாடுகளை செய்து பல கட்டங்களை தாண்டி காலி பணியிடத்தை நிரப்ப வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை போட்டி தேர்வு நடத்துவதற்கும் தனித்தனியாக நிதி செலவும், தனித்தனியான நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டி உள்ளது.

தற்பொழுது வெளிவந்துள்ள குருப் 4 போட்டி தேர்வு முடிவு இருக்கும் காலியிடங்களை பார்க்கும் போது மிகவும் சொற்பமான அளவே உள்ளது. இந்தப் போட்டி தேர்வு அறிவிப்பு செய்த போது இருந்த சூழலுக்கும் தற்பொழுது உள்ள சூழலுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளது கொரோனா தொற்றுக்குப் பிறகு மற்றும் அந்த கொரோனா காலத்தில் இறந்த அரசு பணியாளர்கள், பணி ஓய்வு பெற்றவர்கள், இடைநீக்கம் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள், பதவி உயர்வு பெற்றவர்களால் பல காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளது.

இதுவே அரசு நிர்வாகத்தில் பல அலுவலகங்களில் பணிகள் மிகவும் மெதுவாக நடைபெறுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது. இப்போது காலி பணி இடங்கள் கணக்கீடு செய்து கூடுதல் பணி இடங்கள் நிரப்பபடாமல் விட்டுவிட்டு அரசு மீண்டும் ஒருமுறை போட்டி தேர்வு அறிவிப்பு செய்து அதை நடைமுறைப்படுத்தி தேர்வு வினாத்தாள் தாயாரிப்பு, விடைத்தாள்கள் மதிப்பீடு, தேர்வு முடிவுகள் அறிவிப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தி மீண்டும் ஒருமுறை பணியாளர் தேர்வு செய்வதற்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கூட ஆகலாம்.

Eswaran has insisted that the government should fill up at least 15000 vacancies through Tnpsc

அதுவரை தற்போது இருக்கும் காலி பணியிடங்கள் தொடர்வதற்கு அரசு எந்த விதத்திலும் அனுமதிக்க கூடாது. அவ்வாறு காலிப் பணியிடங்கள் அதிகமாக இருப்பதை அரசு அனுமதித்தால் அரசு மக்களுக்கு கொண்டு செல்லும் பல நல திட்டங்கள் மக்களுக்கு உரிய நேரத்தில் சென்று சேராமல் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

தற்போது உள்ள கூடுதல் காலிப் பணியிடங்களை மீண்டும் கணக்கீடு செய்து கூடுதல் பணியிடங்கள் சுமார் 25,000 ஏற்படுத்தியும், இனிவரும் காலத்தில் அரசு பணியாளர்கள் பணி சுமையை குறைக்க தேர்வு நடத்தி தேர்வு முடிவு வெளியிடும்போதே குறிப்பிட்ட சதவீதத்தினரை ரிசர்வ் பணியிடங்கள் ஏற்படுத்தி வைக்கவும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+