Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எத்தியோப்பியா எரிமலை சாம்பல் இந்தியாவிற்கு வந்தது எப்படி.. சீனாவை தாண்டி எங்கே சென்றது

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தியோப்பியாவில் இருந்து கிளம்பிய ஒரு எரிமலைச் சாம்பல் மேகம், செங்கடல் மற்றும் அரபிக்கடல் மேல் பயணித்து இந்தியாவின் வான்வெளியைத் தொட்டது ஆச்சரியமான நிகழ்வாக இயற்கை ஆர்வலர்களாக பார்க்கப்படுகிறது. பல ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து இந்த சாம்பல் மேகங்கள் இந்தியாவை தொட்டு சென்றது ஏன்.. இது குறித்த தகவல்கள் மற்றும் அறிவியல் பின்னணி பற்றி இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

எத்தியோப்பியாவில் உள்ள அபார் பகுதியின் ஹெய்லி குபி எரிமலை சுமார் 12,000 ஆண்டுகளாக அமைதியாக இருந்தது. பின் ஏன் திடீரென அது சீறியது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். வெடித்து சிதறிய இந்த அபார் பகுதி என்பது பூமித்தட்டுகள் விலகிச் செல்லும் ஒரு முக்கியமான புவியியல் பகுதியாகும். இங்கு நிலத்தடி மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். இந்த மாற்றங்களின் விளைவாக, பூமியின் ஆழத்தில் உள்ள பாறைகள் மெதுவாக வெப்பமடைந்து, உருகி 'மாம்பெயிர்'எனப்படும் திரவக் கலவையாக மாறின.

Ethiopia s Volcanic Ash Cloud Touches India The Long Journey and Why It Happened

எரிமலை வெடிப்பின் மர்மம்

இந்த மாம்பெயிர் என்பது வெறும் உருகிய கல் மட்டும் அல்ல; அதில் உருகிய உலோகங்கள், வாயுக்கள், மற்றும் கனிமங்களும் கலந்து இருக்கும். பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த அழுத்தம் மிக்க மாம்பெயிர் எரிமலையின் அடிப்பகுதியில் சேர ஆரம்பித்துவிட்டது. இறுதியில், இந்த அழுத்தம் தாங்க முடியாத நிலைக்கு வந்தபோது, இப்பகுதியில் ஏற்பட்ட சில சிறிய நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. அதனால், திரவ நிலையில் நீண்ட காலமாக காத்திருந்த மாம்பெயிர், சாம்பல், மற்றும் வெப்ப வாயுக்கள் விண்ணைப் பிளந்து வெளியேறியது. அதனால் தான் நாம் இப்போது வானத்தில் சாம்பல் மேகம்த்தை பார்க்கிறோம்.

இந்தியாவைத் தொட்ட நெடும் பயணம்

எரிமலை வெடிப்பின் மூலம் கிளம்பிய அந்த சாம்பல் மேகம், செங்கடல் பகுதி வழியாக நகர்ந்து, ஏமன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளைக் கடந்து, அரபிக்கடல் மேல் பயணித்து இந்திய வான்பகுதிக்குள் நுழைந்தது. இந்திய வானிலை மையம் அளித்த தகவலின்படி, இந்த சாம்பல் மேகம் இந்தியப் பகுதிகளுக்குள் மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்தது. பாதை: குஜராத், ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப், அரியானா மற்றும் மகாராஷ்டிராவின் மேற்குப் பகுதிகள் வழியாக இந்த சாம்பல் மேகம் சென்றது.

உயரம்: சாம்பல் மேகம் பொதுவாக இந்தியாவின் மேற்பரப்பில் சராசரியாக 14 கி.மீ உயரத்தில் நகர்ந்தாலும், சில பகுதிகளில் விமானப் போக்குவரத்து நடைபெறும் உயரமான 25,000 முதல் 45,000 அடி வரைக்கும் சென்றது. இந்த சாம்பல் மேகத்தால், நம் நாட்டிற்கு பெரிய அளவில் காற்று மாசு பாதிப்பு இல்லை என்றும், குறிப்பாக காற்று மாசு அதிகம் உள்ள டெல்லி போன்ற நகரங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.


என்ன நடந்தது? எங்கு செல்கிறது?

சாம்பல் மேகத்தின் வான்வழிப் பயணத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இந்திய விமானங்கள் இயக்கப்படவில்லை மேலும், சில விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. சில முக்கியமான விமானங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது. அபாயம் எதுவும் இல்லை. எனினும் விமானங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகளை இந்திய விமான ஆணையம் இந்த மாற்று நடவடிக்கைகளை உடனடியாக மேற்கண்டது. இந்த சாம்பல் மேகம் நேற்று இரவு 7.30 மணியளவில் இந்திய எல்லையைத் தாண்டி, சீனாவை நோக்கி நகர்ந்தது.

எத்தியோப்பியா எரிமலை சாம்பல் மேகம் இப்போது நகரும் வேகத்தைப் பார்த்தால், அது இறுதியில் இரண்டு வழிகளில் முடிவடையலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இந்த சாம்பல் துகள்கள் மேல்மட்ட காற்றில் வேகமாகப் பயணிப்பதால், சில நாட்களில் அவை சின்ன சின்ன துண்டுகளாக உடைந்து, காற்றில் கலந்து சிதறக்கூடும்.

பசிபிக் கடலில் கலப்பு

இந்தியாவை கடந்துவிட்ட நிலையில், சீனாவைத் தாண்டி, கொரியா, ஜப்பான் வழியாகப் பசிபிக் கடலை நோக்கிச் செல்லும் இந்தப் சாம்பல் மேகம், மெல்ல காற்றில் கலந்து மறைந்துவிடும். இதன் சில துகள்கள் கடலுக்குள் சிறிய அளவில் இறங்கவும் வாய்ப்பு இருக்கிறது.

எதிர்காலத்தில் என்னாகும்.

எரிமலை வெடிப்புகள் புவியியல் செயல்பாட்டின் ஒரு பகுதியாகும். அபார் போன்ற பூமித்தட்டு பிரியும் பகுதிகளில் ஏற்படும் நிலத்தடி மாற்றங்கள் தொடரும் என்பதால், எதிர்காலத்தில் அத்தகைய எரிமலைகள் மீண்டும் சீறுவதற்கும், அதன் சாம்பல் மேகம் மீண்டும் உலகின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணிப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+