எனக்கும் ஒரு காதல் இருந்தது.. எதிர்நீச்சல் மாரிமுத்து சொன்ன பிளாஷ் பேக்
சென்னை: மாரிமுத்து என்பதை விட எதிர்நீச்சல் ஆதிகுணசேகரன் என்றால் அனைவருக்குமே தெரியும். இந்தாம்மா ஏய் என்று அதட்டலுடன் பேசுவது இல்லத்தரசிகளுக்கு பிடித்து போனது. மாரிமுத்து இன்றைய தினம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டார். டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போதே மரணமடைந்துள்ளார் மாரிமுத்து. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
மருமகள்களைப் பார்த்து ஏம்மா ஏய் என்று அதட்டும் போதும் சரி..மதுரை மீனாட்சி என்று வணங்கும் போதும் சரி அல்டிமேட் நடிப்புதான். அவருக்குள் இருக்கும் மென்மையான காதல் பக்கங்களை வெளிப்படுத்தியது அந்த மினி பேட்டி. இன்று அவர் நம்மிடையே இல்லாவிட்டாலும் அவரது புகழ் நீண்ட காலம் நிலைத்திருக்கும்.

கடைக்குட்டி சிங்கம், கொம்பன் படங்களில் தனது சிறப்பான நடிப்பால் பலரையும் கவர்ந்தவர் நடிகர் மாரிமுத்து. எதிர்நீச்சல் டிவி சீரியலில் தனது மருமகள்களை அவர் அழைக்கும் தொனியே அலாதியானது. "இந்தாம்மா ஏய்".. என்று ஒரு அதட்டலில் எல்லோரையும் நடுங்க வைத்து விடுவார்.
நான் அடிக்கடி யூஸ் செய்யும் வார்த்தை இந்தாம்மா..தான் வேறென்ன? இந்தாம்மா ஏய் என்று சொன்னாலே சும்மா அதிருதே. கோபம்தான் என்னோட பலம், பலவீனம். புடிச்ச பாட்டு பூங்காற்று திரும்புமா? என் பாட்டை விரும்புமா..முதல் மரியாதை பட பாடல் என்று கூறியிருந்தார் மாரிமுத்து.
எனக்கு பெரிய அளவில் கடவுள் நம்பிக்கை இல்லை. அதே நேரத்தில் பெண்களை கடவுளாக மதிப்பவன் நான் என்று சொன்ன மாரிமுத்து சீரியலில் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை.. மதுரை மீனாட்சி எல்லாம் நீதான் பார்த்துக்கம்மா என்று கும்பிடுவார்.
முதன் முதலாக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்று கேட்டதற்கு, காலை முதல் மாலை வரை மண் அள்ளி போட்டு ரூ.4.50 சம்பளம் வாங்கினேன். மன நிறைவை கொடுத்தது. அந்த சம்பளத்தை முதன் முதலாக வாங்கும் போது அவ்வளவு சந்தோஷப்பட்டேன் என்று கூறியிருந்தார்.
காலையில் எழுந்த உடன் சோஷியல் மீடியாவில் நம்மைப்பற்றி ஏதாவது வந்திருக்கா என்று பார்ப்பேன் அப்போதுதான் அந்த நாள் நல்லாயிருக்கும் என்று சொன்னவர் மாரிமுத்து. இன்றைக்கு சோசியல் மீடியா முழுக்க அவரது மரணத்திற்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படங்களில் நான் செய்த கதாபாத்திரங்களில் கொம்பன், பரியேறும் பெருமாள் பட கதாபாத்திரங்கள் பிடிக்கும். எல்லாத்தையும் விட இப்போ ரொம்ப பிடிச்சது ஆதி குணசேகரன்தான் என்று சொன்ன மாரிமுத்து டப்பிங் பேசும் போதே மரணமடைந்து விட்டார்.
காதல் பற்றி பேசிய மாரிமுத்து, கல்லூரி காலத்தில் எனக்கும் ஒரு காதல் இருந்தது. எல்லோரையும் போலத்தான். காதலை கிராஸ் பண்ணாமல் யாரும் வரமுடியாது. என்னை காதலித்தவருக்கு நான் காதல் கடிதம் கொடுத்தேன். எனக்கும் அவர் காதல் கடிதம் கொடுத்திருக்கிறார். ரொம்ப நாட்கள் அந்த காதல் கடிதத்தை வைத்திருந்தேன். காலப்போக்கில் அந்த காதல் கடிதம் காணாமல் போய் விட்டது என்று வருத்தத்துடனே சொன்னார் குணசேகரன். முரட்டு இதயத்திற்குள் மென்மையான காதல் இருந்ததை வெளிப்படுத்திய மாரிமுத்து இன்றைய தினம் நம்மிடையே இல்லை என்பது வருத்தமான விசயம்தான்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications