ஸ்டாலின் அரசின் அடுத்த டார்கெட்.. "மாஜி" கட்சி மாறினாலும் விடுவதாக இல்லை.. அமைச்சர் நாசர் அதிரடி
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பாஜகவுக்கு சென்று சேர்ந்தாலும் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பது உறுதி என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுக்காக முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில், சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ரெய்டு நடத்தினர். ஒரு நாள் முழுக்க இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில்தான் மேலும் சில முன்னாள் அமைச்சர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.
கடந்த ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகள் திமுகவினரால் முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆளுநரிடமும் எதிர்க்கட்சியாக இருந்தபோது அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் வழங்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்திலும் இது எதிரொலித்தது.

வளர்மதி உதவியாளர்
இதனிடையே, முன்னாள் அமைச்சர் வளர்மதி உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விடிய விடிய சோதனை நடத்தியுள்ளனர். அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் ₹11.8 லட்சம் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனையின் போது ஏராளமான ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் கைப்பற்றியுள்ளது.

அமைச்சர் நாசர் பேட்டி
இந்த நிலையில், திருவள்ளூரில் நேரடி கொள்முதல் நிலையத்தை பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்து பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு பின்வாங்குவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறுகிறார். கண்ணிருந்தும் பார்க்காமல், காதிருந்தும் கேட்காதவராக அவர் இருக்கிறார்.

எல்.முருகன் மீது தாக்கு
சாதாரண பாமர மக்களும் திமுக அரசின் திட்டங்களை பாராட்டுகிறார்கள். எல்.முருகன் பொறாமை காரணமாக அது போன்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
அனைத்து அமைச்சர்கள் மீதும் ஆளுநரிடம் ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை தொடரும்

ராஜேந்திர பாலாஜி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாஜகவுக்கு சென்றாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், நேரடி கொள்முதல் விவசாயிகளிடம் மூட்டைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

டெல்லி சென்ற ராஜேந்திர பாலாஜி
வேலுமணி வீட்டில் ரெய்டு நடப்பதற்கு சில நாட்கள் முன்பாக ராஜேந்திர பாலாஜி, டெல்லி சென்றிருந்தார். அங்கேயே அவர் முகாமிட்டு இருந்ததால் பாஜகவில் சென்று சேரப்போகிறார் என்று வதந்திகள் பரவின. இதுகுறித்து, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ராஜேந்திர பாலாஜி அதிமுகவில்தான் இருப்பார். பாஜகவில் சேரப்போவதாக கூறுவது வதந்திதான் என்று கூறினார்.

போலீஸ் நடவடிக்கை தொடரும்
இந்த நிலையில்தான், அமைச்சர் நாசர், இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாஜி அமைச்சர்களுக்கு எதிரான நடவடிக்கையை திமுக அரசு தொடரும் என்ற சமிக்ஞையை அவர் தனது பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார். முன்னதாக சில தினங்கள் முன்பு அளித்த பேட்டியில், அமைச்சராக இருந்தபோது, ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு, கடந்த தீபாவளியின் போது, 1.5 டன் இனிப்புகள் அனுப்பப்பட்டன. அதற்கான பணத்தை அவர் செலுத்தவில்லை,' என்று, பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியிருந்தார்.
-
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு!












Click it and Unblock the Notifications