தங்கம் வாங்கும்போது பில்லில் இந்த 2 வார்த்தை இருக்கா? இல்லைனா உங்க பணம் காலி.. நகைக்கடை சீக்ரெட்
சென்னை: தங்கம் வாங்குவது என்பது நம் ஊர்களில் வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு, ஒரு சேமிப்பு மற்றும் குடும்பத்தின் கவுரவம். உழைத்து சேர்த்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யும்போது, கடையின் விளம்பரங்களையோ அல்லது கூட்டத்தையோ பார்த்து நாம் எடுக்கும் சில அவசர முடிவுகள் பின்னாளில் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடலாம்.. அதனால் தங்கம் வாங்கும்போது மக்கள் செய்யும் மிக முக்கியமான 3 தவறுகளையும், அவற்றைத் தவிர்ப்பது எப்படி என்பதையும் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
தங்கம் வாங்கும்போது பெரும்பாலானோர் தங்கத்தின் அன்றைய விலையை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால், ஒரு நகையின் விலையை நிர்ணயிப்பதில் செய்கூலி, சேதாரம் இந்த இரண்டுமே மிக மிக மெயின் மேட்டராகும்..

பல நேரங்களில் தங்கத்தின் விலையை விட இந்த கூடுதல் கட்டணங்கள்தான் நம் செலவை அதிகப்படுத்தும்.
அதிலும், அதிக வேலைப்பாடுகள் கொண்ட நகைகளுக்கு சேதாரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
தங்க நகைகள்
நீங்கள் ஒரு முதலீடாக தங்கம் வாங்குகிறீர்கள் என்றால், கற்கள் பதிக்காத எளிமையான டிசைன்களை தேர்ந்தெடுப்பதே புத்திசாலித்தனம். கற்கள் வைத்த நகைகளில், அந்த கல்லின் எடையையும் தங்கத்தின் விலையிலேயே கணக்கிடுவார்கள். ஆனால் நீங்கள் அந்த நகையை விற்க போனால்,கல்லின் எடையை கழித்துவிட்டு தங்கத்திற்கு மட்டுமே பணம் தருவார்கள். அதனால் செய்கூலி மற்றும் சேதாரம் 10 சதவீதத்திற்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்வது உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும்.
அடுத்ததாக, தரக் குறியீடுகள் அவசியம்.. நம்பிக்கையான கடை என்ற பெயரில் பல நேரங்களில் தரக் குறியீடு இல்லாத நகைகளை வாங்கிவிடுவது பெரிய தவறு என்றே சொல்லலாம்.
BIS ஹால்மார்க் முத்திரை
தங்கம் 22 காரட் தானா என்பதை உறுதிப்படுத்த BIS ஹால்மார்க் முத்திரை மிக அவசியம். இதில் தற்போது HUID எனப்படும் 6 இலக்க அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நகையின் உட்புறத்தில் பூதக்கண்ணாடி வைத்து பார்த்தால், இந்த முத்திரையை பார்க்கலாம்.. இந்த முத்திரை இல்லாத நகைகளை வாங்கும்போது, பின்னாளில் அதை வேறு கடையில் மாற்றச் சென்றால் அதன் தரம் குறைவாக இருப்பதாகக் கூறி விலையை குறைப்பார்கள். தரமான தங்கம் என்பது வாங்கும்போதும் விற்கும்போதும் ஒரே மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும். எனவே, முத்திரை இல்லாத தங்கத்தை ஒருபோதும் வாங்காதீர்கள்.
அவசரக் கொள்முதல் - தள்ளுபடி
அடுத்ததாக, திட்டமிடல் இல்லாத அவசரக் கொள்முதல் என்றே சொல்லலாம்.. அதாவது விலை குறையும் என்று காத்திருந்து, டக்னு விலை உயரும்போது பயந்து போய் தங்கம் வாங்குவது பலரது வழக்கமாக உள்ளது..
அதேபோல், தள்ளுபடி மற்றும் பரிசுப் பொருட்கள் அறிவிக்கப்படும் காலங்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தகைய நேரங்களில் நிதானமாக நகையைச் சோதிக்க நமக்கு போதிய நேரம் கிடைப்பதில்லை.
நகைக்கடை ரசீது முக்கியம்
எப்போதுமே நகை வாங்க செல்லும்போது ரசீதையும் வாங்கிவிட வேண்டும்.. அந்த ரசீதில் தங்கத்தின் எடை, அன்றைய விலை, செய்கூலி, சேதாரம் மற்றும் வரி விவரங்கள் தனித்தனியாக குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அல்லது முறையான ரசீது பெறுவது உங்கள் முதலீட்டிற்கு சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கும்.
இந்த 3 விஷயங்களில் மட்டும் நீங்கள் கவனமாக இருந்தால், உங்கள் வீட்டு பீரோவில் சேரும் தங்கம் வெறும் அலங்கார பொருளாக மட்டுமல்லாமல், அவசர காலங்களில் கைகொடுக்கும் உண்மையான சேமிப்பாகவும் இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்..!!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications