ஜெயலலிதா கூட இப்படி செய்தது இல்லை.. செங்கோட்டையன் பதவி பறிப்பு சர்வாதிகாரத்தின் உச்சம்.. ஓபிஎஸ்
சென்னை: செங்கோட்டையனின் பதவி பறிப்பு சர்வாதிகாரத்தின் உச்சம் என்றும், சர்வாதிகார உச்ச நிலைக்கு மக்கள் சரியான பாடம் புகுட்டுவார்கள் என்றும் ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். மேலும் பேசிய ஓ. பன்னீர் செல்வம், அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்மீது தான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார் என்றும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னவர்மீது ஒருபோதும் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் நடவடிக்கை எடுத்ததில்லை என்றும் கூறினார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கையை எடுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து இருந்தார். இந்த நிலையில், செங்கோட்டையனை இன்று பதவியில் இருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

எடப்பாடிக்கு 10 நாட்கள் கெடு
அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி இருந்து வருகிறார். இந்த நிலையில், 2026 தேர்தலுக்கு இன்னமும் எட்டு மாதங்களே உள்ள நிலையில், கட்சியில் நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்தால் வெற்றி பெறலாம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் பேட்டி அளித்த அவர், ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்பதை மறைமுகமாக கூறினார். மேலும், இது தொடர்பாக முடிவு எடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். இதனால் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டையன் பதவி பறிப்பு
இந்த நிலையில், இன்று செங்கோட்டையனை பதவியில் இருந்து நீக்கி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம், ஜெயலலிதா கூட அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னவர்களை நீக்கியது இல்லை என்று ஓ. பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:
ஜெயலலிதா கூட இப்படி செய்தது இல்லை
"அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் செங்கோட்டையன் கூறி வந்தார். வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்று தான் அவர் அப்படி பேசினார். ஆனால், அவர் மீதான அந்த நடவடிக்கை சர்வாதிகாரத்தின் உச்சம். இந்த சர்வாதிகாரத்தின் உச்ச நிலைக்கு மக்கள் சரியான பாடம் புகுட்டுவார்கள்.
எம்ஜிஆரும், ஜெயலலிதாவும், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நினைத்தவர்களை நீக்கியது இல்லை. அதிமுக கட்டுப்பாட்டை மீறுபவர்கள் மீதுதான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றியது எம்ஜிஆர்... அதிமுகவை மக்கள் இயக்கமாக மாற்றியது ஜெயலலிதா..." இவ்வாறு அவர் கூறினார்.
டிடிவி தினகரன் கருத்து
முன்னதாக எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து டிடிவி தினகரன் பதில் தெரிவித்தார். அவர் கூறுகையில், "செங்கோட்டையனை நீக்கியதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தனது சர்வாதிகாரப் போக்கை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார். அவர் தனது கருத்துக்கு எதிரான எந்தக் குரலையும் ஏற்பதற்கு தயாராக இல்லை. ஒரு கட்சி என்பது அனைவரது கருத்துக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஒருவரைக் கூடச் சேர்க்கத் தயாராக இல்லாத இந்தத் தலைமை, எப்படி அதிமுகவை வளர்க்கும் என்பதை தொண்டர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications