ஐசியூவில் இதயநோய்க்கு சிகிச்சை.. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமைக்ரான் தொற்று.. அமைச்சர் உறுதி
எப்படி இருக்கிறார் காங்கிரஸ் எம்எல்ஏ இளங்கோவன்?
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவர் அந்த தொகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கை சாதனை படைத்தார். 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43, 923 வாக்குகளையே பெற்றார்.

திருமகன் எம்எல்ஏ
கடந்த 2021 ஆம் ஆண்டு திருமகன் பெற்ற வாக்குகளைவிட ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக அளவு வாக்குகளை பெற்றார். மகத்தான வெற்றி பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் மார்ச் 10 ஆம் தேதி தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அலுவலகத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நெஞ்சுவலி
இந்த நிலையில் அண்மையில் நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு லேசான கொரோனா தொற்று இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் தேறி வரும் ஈவிகேஎஸ்
அவரது உடல்நலம் தேறி வருவதாகவும் மருத்துவ அறிக்கை கூறுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் இளங்கோவன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 39 ஆண்டுகளுக்கு பிறகு ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு 1984 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.

புதிய அப்டேட் என்ன
இதையடுத்து 2004 ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் எம்பியாகவும் ஈவிகேஎஸ் இளங்கோவன் இருந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு தமிழக சட்டசபையில் 177 ஆவது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு வருகை தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மா.சுப்பிரமணியன்
இதுகுறித்து மா.சுப்பிரமணியன் கூறுகையில் தமிழ்நாட்டில் 2 மாதம் முன்பு தினசரி தொற்று 2 என்ற எண்ணிக்கையில் இருந்தது. உருமாறிய ஓமைக்ரான் வகை கொரோனா தற்போது பரவி வருகிறது. புதிய வகை கொரோனாவால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது.தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நலமாக உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications