சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்ட்ரைட்டா மோடியிடமே டச்.. அதிமுக மைத்ரேயனின் அடுத்த மூவ்? பரபரப்பை ஏற்படுத்திய ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவின் இரு அணிகளிலும் மாறி மாறி கால் பதிக்கும் மைத்ரேயன் அண்மையில் பதிவு செய்த ட்வீட்டை பார்க்கும் போது அவர் மீண்டும் பாஜகவுக்கு செல்கிறாரா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    OPS எந்த அணியில் இருந்தாலும் விசுவாசமாக இருப்பார் | Kolathur Krishnamurthy

    அதிமுகவின் முன்னாள் எம்பி மைத்ரேயன் ஓபிஎஸ்ஸை விமர்சித்து அதாவது அவரது நிலைப்பாடு அடிக்கடி மாறுவதாக எம்ஜிஆர் பாடலை மேற்கோள்காட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    அதிமுகவின் இரு அணிகள் இணைந்த போதும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ட்வீட்டை போட்டு பரபரப்பை கிளப்பியவர் மைத்ரேயன். முதலில் யார் இவர் என்பதை பார்ப்போம்.

    இலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகைஇலங்கை பொருளாதார சிக்கல் -பிஞ்சு குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு அகதிகளாக இன்றும் 8 ஈழத் தமிழர்கள் வருகை

    பள்ளிப் படிப்பு

    பள்ளிப் படிப்பு

    மைத்ரேயன் சென்னையில் பள்ளி படிப்பை முடித்தவர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பட்டம் படித்தார். இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரியில் புற்றுநோய் மருத்துவத்தில் முதுகலை பட்டம் படித்தார். இதையடுத்து சிறிது காலம் புற்றுநோய் துறையில் மருத்துவராக பணியாற்றி வந்தார்.

    ஆரம்ப நாட்கள்

    ஆரம்ப நாட்கள்

    இவர் ஆரம்ப நாட்களில் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். பின்னர் 1991 ஆம் ஆண்டு பாஜகவின் தமிழக பிரிவின் செயற்குழு உறுப்பினராக இருந்தார். 1995 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை பாஜகவின் தமிழக பொதுச் செயலாளராகவும் 1997ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

    தமிழக பாஜக தலைவர்

    தமிழக பாஜக தலைவர்

    பின்னர் 1999-2000 ஆம் ஆண்டு வரை தமிழக பாஜக மாநிலத் தலைவராக பதவியேற்றார். இதையடுத்து 2000 ஆம் ஆண்டு இவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இரு முறை மாநிலங்களவை எம்பியாக இருந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக 3ஆவது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

    6 ஆண்டு பதவிக்காலம்

    6 ஆண்டு பதவிக்காலம்

    6 ஆண்டுகள் பதவிக்காலம் முடிவடைந்து 2019ஆம் ஆண்டு இவரது எம்பி பதவிக்காலம் முடிந்து ராஜ்யசபாவிலிருந்து விடை பெற்றார். அப்போது ஜெயலலிதா தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை நினைத்து கண்ணீர் விட்டார். இதையடுத்து அதிமுகவில் மீண்டும் மாநிலங்களவை எம்பி பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த அவருக்கு ஏமாற்றமே கிடைத்தது.

     பாஜகவுக்கு செல்கிறாரா

    பாஜகவுக்கு செல்கிறாரா

    அப்போதிலிருந்தே இவர் பாஜகவுக்கு செல்கிறார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனாலும் ஓபிஎஸ்ஸுடன் தொடர்ந்து ஆதரவாளராக இருந்த இவர் தற்போது எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவிவிட்டார். இந்த நிலையில் இவர் கிருஷ்ண ஜெயந்திக்கு வாழ்த்து கூறி போட்ட ட்வீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

     கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

    கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து

    அதாவது கிருஷ்ண ஜெயந்திக்கு இவரது வீட்டில் உள்ள கிருஷ்ணரின் விக்கிரகத்திற்கு நெய்வேத்தியம் செய்ய பலகாரங்களை வைத்திருந்த புகைப்படம், கிருஷ்ணரின் சிலைக்கு அணிவிக்கப்பட்ட புதிய வஸ்திரத்தின் போட்டோ, மாக்கோலத்தில் கண்ணனின் கால்கள் பதிப்பு போட்டோ உள்ளிட்டவற்றை ஷேர் செய்துள்ளார். அவ்வாறு ஷேர் செய்த அவர் இந்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித்ஷா, பி எல் சந்தோஷ், பாஜக தலைமை ஆகிய 4 ட்விட்டர் ஹேண்டில்களுக்கு டேக் செய்துள்ளார். கிருஷ்ண ஜெயந்திர வாழ்த்து செய்தியில் குறைந்தபட்சம் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் ஹேண்டிலை கூட மைத்ரேயன் டேக் செய்துள்ளதால் அதிமுகவினரிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    பாஜகவில் மீண்டும் இணைகிறாரா மைத்ரேயன்?

    பாஜகவில் மீண்டும் இணைகிறாரா மைத்ரேயன்?

    அது மட்டுமல்லாமல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழள்த்துகளை கூறிய ட்வீட்டிலும் நிர்மலா சீதாராமன் ட்விட்டர் ஹேண்டிலுடன் நரேந்திர மோடி, பாஜக தலைமை அலுவலகம் ஆகியவற்றின் ட்விட்டர் ஹேண்டிலையும் ஷேர் செய்துள்ளார். அது போல் சுதந்திர தின வாழ்த்துகளையும் தனது வீட்டில் தேசியக் கொடி ஏற்றிய புகைப்படத்தையும் பிரதமர், அமித்ஷா, ஜேபி நட்டா, பி.எல். சந்தோஷ் ஆகியோரின் ட்விட்டர் ஹேண்டிலுக்கு டேக் செய்துள்ளார். அதிமுகவில் எம்பி பதவியும் கட்சி பதவியும் கிடைக்காதபட்சத்தில் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் மைத்ரேயன் மீண்டும் பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    AIADMK EX MP Maithreyan tags Krishna Jayanti wishes and Independence day wishes to PM Modi, Amitshah, J.P.Nadda's twitter handles.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X