சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை விரட்ட.. 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள்.. பீலா ராஜேஷ் பொறுப்பில் கிருஷ்ணகிரி

Google Oneindia Tamil News

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 33 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ஜெ ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து சில நாட்கள் கழித்து தமிழகத்தில் நாள்தோறும் 1500-க்கு மேல் கொரோனா கேஸ்கள் வந்தன.

இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷிற்கு பதிலாக அத்துறை செயலாளராக ஜெ ராதாகிருஷ்ணனே மீண்டும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பீலா ராஜேஷ் வணிக வரித் துறை செயலாளராக மாற்றப்பட்டார்.

கொரோனாவை கட்டுப்படுத்தி அசத்தல்.. பிற நகரங்களுக்கு வழிகாட்டி.. பெங்களூர் சாதித்தது எப்படி? கொரோனாவை கட்டுப்படுத்தி அசத்தல்.. பிற நகரங்களுக்கு வழிகாட்டி.. பெங்களூர் சாதித்தது எப்படி?

4 மாவட்டங்கள்

4 மாவட்டங்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில் நாளை முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்கெனவே செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனாவை தடுக்க 33 மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.

அரியலூர்

அரியலூர்

கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா சிறப்பு அதிகாரியாக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அதுபோல் அரியலூர் மாவட்ட அதிகாரியாக சரவணவேல்ராஜ், பெரம்பலூருக்கு அனில் மேஷ்ராம், கோவை மாவட்ட சிறப்பு அதிகாரியாக ஹர்மந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்ட அதிகாரியாக சுப்ரியா சாஹூ, கடலூர் மாவட்ட அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி, தருமபுரிக்கு சந்தோஷ்பாபு நியமிக்கப்பட்டுள்ளனர்.

கரூர்

கரூர்

திண்டுக்கல் மாவட்ட அதிகாரியாக மன்கத் ராம்சர்மா, ஈரோடு மாவட்ட அதிகாரியாக உஷா, குமரி மாவட்ட அதிகாரியாக ஜோதி, கரூர் மாவட்ட அதிகாரியாக விஜயராஜ் குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். திருச்ச மாவட்ட அதிகாரியாக ரீட்டா ஹரீஷ் தாக்கர், மதுரை மாவட்ட அதிகாரியாக தர்மேந்திர பிரதாப் யாதவ், புதுக்கோட்டை ஷம்பு கல்லோலிகர், தஞ்சை மாவட்ட அதிகாரியாக பிரதீப் யாதவ், நாமக்கல் மாவட்ட அதிகாரியாக தயானந்த் கட்டாரியா, சேலம்- நஜிமுதீன், விருதுநகர் மாவட்ட அதிகாரியாக மதுமதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

திருவாரூர்

திருவாரூர்

தூத்துக்குடி மாவட்ட அதிகாரியாக குமார் ஜெயந்த், நாகை மாவட்ட அதிகாரியாக முனியநாதன், ராமநாதபுரம் மாவட்ட அதிகாரியாக சந்திரமோகன், சிவகங்கை மாவட்ட அதிகாரியாக மகேஷ், திருவாரூர் மாவட்ட அதிகாரியாக மணிவாசன், தேனி மாவட்ட அதிகாரியாக கார்த்திக், திருவண்ணாமலை மாவட்ட அதிகாரியாக தீரஜ்குமார், நெல்லை மாவட்ட அதிகாரியாக செல்வி அபூர்வா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

திருப்பூர் மாவட்ட அதிகாரியாக கோபால், வேலூர் மாவட்ட அதிகாரியாக ராஜேஷ் லக்கானி, விழுப்புரம் மாவட்ட அதிகிராயாக முருகானந்தம், கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரியாக நாகராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குழுவுக்கு மேல் குழு அமைக்கப்பட்டது குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில் மீண்டும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Ex Health Secretary Beela Rajesh is appointed as Special Corona Nodal officer for Krishnagiri District. Goverment has appointed nodal officers for 33 districts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X