"வளைகாப்பு தியாகராஜன்" .. டோஸ் விட்ட ஜெயக்குமார்.. கையோடு வைத்த விமர்சனம்
சென்னை: நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சர் நிதியமைச்சர் தியாகராஜனை கட்டுப்படுத்தவில்லை என சாடினார்.

மேலும் அதிமுக ஆட்சியில் இருந்த போது வியாபாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தி ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் நிறைவேற்றியது. இதனால் வியாபாரிகள் மற்றும் வர்த்தகர்கள் எந்த வித போராட்டமும் நடத்தவில்லை. மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்திய அரசிடம் வலியுறுத்தி பெற்றதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி எந்தவொரு விவரமும் தெரியாமல் பழனிவேல் தியாகராஜன் பேசி வேறு வருவதாகவும், தான் 30க்கும் அதிகமான ஜிஎஸ்.டி கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளதாகவும் கூறிய ஜெயக்குமார், ஒரே ஒரு கூட்டத்தில் மட்டுமே தான் கலந்து கொள்ளவில்லை என்றும், அன்றைக்கு தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தேன் என்றார்.
மேலும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை "வளைகாப்பு தியாகராஜன்" என்று விமர்சித்த அவர், சொந்தக்கட்சிக்காரரான டி.கே.எஸ் இளங்கோவனையே விமர்சனம் செய்கிறார் என்றும் இது போன்ற விமர்சனங்களை யாரும் வைத்தது இல்லை என்றும் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக ஆட்சியில் ஜனநாயக படுகொலை தான் நடக்கும் என்றும், வன்முறைய கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன எனவும் தெரிவித்தார். இந்நிலையில் ஜனநாயக ரீதியில் அதிமுக நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்துவவதில் திமுக தோற்றுவிட்டது என்றும், தற்போது தமிழகம் போதை மாநிலமாக மாறிவிட்டது என்றும் குற்றஞ்சாட்டிய அவர், ரவுடிகளின் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது என்றும் எப்போது திமுக ஆட்சிக்கு வந்தாலும் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கும் என்றும் கூறினார்.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications