"அபார்ஷன் கசமுசா".. மாஜிக்கு உதவிய சிட்டிங் "புள்ளி".. யார் அவர்.. கடைசிவரை சிக்காத சீக்ரெட்..?
மாஜி அமைச்சர் மணிகண்டனுக்கு அடைக்கலம் தந்த எம்எல்ஏ யார்
சென்னை: ஒரு பரபரப்பான விஷயம் கசிந்து வருகிறது.. மாஜி அமைச்சர் மணிகண்டன் இவ்வளவு நாள் தலைமறைவாக இருந்தார் இல்லையா? அவருக்கு அடைக்கலம் தந்ததே ஒரு முக்கிய கட்சியின் சிட்டிங் எம்எல்ஏ என்று சொல்லப்பட்டது இல்லையா? அதை பற்றின செய்திதான் வெடித்து கிளம்பி உள்ளது..!
கல்யாணம் செய்து கொள்வதாக தன்னை மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாகவும், அவரை நம்பி 3 முறை அபார்ஷன் செய்து கொண்டேன் என்றும், நடிகை சாந்தினி போலீசில் புகார் தந்திருந்தார்.. அத்துடன் இது தொடர்பாக சில ஆதாரங்களையும் அளிக்கவும்தான், இந்த விஷயம் சூடுபிடித்தது.
அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை விசாரிப்பதற்குள், எஸ்கேப் ஆகிவிட்டார்.. ஆனால், கோர்ட்டிற்கு சென்று அவர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது.. எத்தனையோ முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு தரப்படவில்லை.

தனிப்படை
ஆனால், கோர்ட் கேஸ் நடந்து கொண்டிருக்கும்போதே மணிகண்டனை காணவில்லை.. முன்ஜாமீன் மனு கோர்ட்டில் டிஸ்மிஸ் ஆகும்வரை, மணிகண்டன் சீனிலேயே வரவில்லை.. அவரை அப்போதிருந்தே போலீசார் தேடி வந்தனர்.. தனிப்படைகள் சென்னைக்கும், சேலத்துக்கும், ராமநாதபுரத்துக்கும், மதுரைக்கும் தனித்தனியாக பறந்தது.. தீவிரமாகவும் தேடி வந்தது. இறுதியில் பெங்களூரில் கைது செய்துவிட்டனர்.

யார் அவர்?
எனினும் மணிகண்டன் எப்படி ஒருமாத காலத்துக்கும் தலைமறைவாக இருக்க முடியும்? இதற்கு யாரோ ஒருவர் பின்னணியில் இருந்து உதவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.. அப்போதுதான் அந்த எம்எல்ஏ குறித்த தகவல் கசிந்தது.. அவர் ஒரு சிட்டிங் எம்எல்ஏ.. முக்கிய கட்சி அதுவும் தேசிய கட்சியை சேர்ந்தவர்.. அதிலும் இவர் தென்மாவட்ட எம்எல்ஏ.. அதுவும் அவர் நெல்லையை சேர்ந்தவர்..!

முன்ஜாமீன்
இந்த விஷயத்தை கைதான மணிகண்டனே போலீசாரிடம் சொல்லி உள்ளார்.. அவர் சொன்னபிறகுதான் விஷயம், போலீசுக்கு இப்படி ஒரு அடைக்கலம் சங்கதியே தெரியவந்தது.. 10 நாட்களாகவே அந்த எம்எல்ஏவின் வீட்டிலேயே மணிகண்டன் தங்கியிருந்துள்ளார்.. அங்கிருந்தபடியே ஹைகோர்ட்டிலும் முன்ஜாமீன் தாக்கல் செய்துள்ளார்.

விசாரணை
போலீசார் எந்நேரமும் கைது செய்யக்கூடும் என்பதால், சம்பந்தப்பட்ட அந்த எம்எல்ஏ, மணிகண்டனை பெங்களூருக்கு தப்பி செல்ல உதவினாராம்.. இதை வாக்குமூலமாகவே மணிகண்டன் தெரிவித்திருப்பதால், போலீசார் அந்த எம்எல்ஏவை விசாரிக்க கூடும் என்றார்கள்..

மத்திய அரசு
ஒருவேளை அந்த தகவல் உறுதியானால் அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடும் என்றும் சொன்னார்கள்.. ஆனால், அந்த பிரமுகர் மீது கை வைத்தால் மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்தத் திட்டம் இறுதியில் கைவிடப்பட்டதாம்... அதாவது பாலியல் குற்றவாளிக்கு அடைக்கலம் தந்த அந்த எம்எல்ஏ மீது, கடைசி வரை நடவடிக்கை இல்லை என்பதே செய்தி..!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications