செந்தில்பாலாஜி முகாமில்.. எரியத் தொடங்கிய பல்பு.. சிறையில் உள்ளவருக்கு போன மெசேஜ்.. என்ன நடந்தது?
சென்னை: செந்தில்பாலாஜி முகாமில் பல்பு எரியத் தொடங்கியிருக்கிறது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வந்த ஆம் ஆத்மியின் முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இதனை அடுத்து அவர் ரிலீஸ் ஆகவிருக்கிறார். சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதுதான் செந்தில்பாலாஜி தரப்புக்கு உற்சாகத்தைத் தந்துள்ளதாம்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி அவர் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று முறையிட்டார். அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது ஜாமீன் மனு சில நாட்களுக்கு முன் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. .உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வில் செந்தில் பாலாஜி மனு விசாரணை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. ஏற்கனவே, ஆகஸ்ட் முதல்வாரத்தில் செந்தில்பாலாஜி ரிலீஸ் ஆகிவிடுவார், சுதந்திர தினம் முடிந்ததும், ஆகஸ்ட் 17-ல் அவர் மீண்டும் அமைச்சராகி விடுவார் என்று செந்தில்பாலாஜி வழக்கறிஞர்கள் தரப்பில் பரவி வந்தது. செந்தில்பாலாஜி முகாமில் பல்பு எரியத் தொடங்கியிருக்கிறது. அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வந்த ஆம் ஆத்மியின் முன்னாள் துணை முதல்வர் மணீஸ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியிருக்கிறது நீதிமன்றம். இதனை அடுத்து அவர் ரிலீஸ் ஆகவிருக்கிறார். சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப் பதுதான் செந்தில்பாலாஜி தரப்புக்கு உற்சாகத்தைத் தந்துள்ளதாம்.
உற்சாகத்தில் செந்தில் பாலாஜி: தங்களின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப மணீஸ் சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதால் செந்தில் பாலாஜிக்கும் கிடைத்து விடும் என்று உற்சாகத்தில் இருக்கிறார்கள் வழக்கறிஞர்கள். இது குறித்து வழக்கறிஞர்கள் தரப்பில் விசாரித்தபோது, ''ஆகஸ்ட் 12-ல் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வருகிறது. ஏற்கனவே, அமலாக்கத்துறையை மூன்று முறை நீதிபதிகள் கண்டித்துள்ளனர். அதாவது, செந்தில் பாலாஜி விசயத்தில் ஏன் வாய்தா மேல் வாய்தா கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்? என்றெல்லாம் நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.
இது எங்களுக்கு சாதகமான ஒரு அம்சம் தான். ஏற்கனவே அழுத்தமான வாதங்களை சீனியர் லாயர்கள் வைத்திருக்கிறார்கள். அதை நீதிமன்றம் மறுக்கவில்லை. அதனால் இனியும் செந்தில் பாலாஜியை சிறையிலேயே வைத்திருக்க வேண்டிய எந்த முகாந்திரமும் இல்லை. அதனால், 12-ந்தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்து விடும். சிசோடியாவுக்கு கிடைத்தது எங்களுக்கும் கிடைக்கும்'' என்று நம்பிக்கையுடன் சொல்கின்றனர்.
அதேசமயம், அமலாக்கத்துறை தரப்பில் விசாரித்த போது, சிசோடியோ வழக்கை செந்தில்பாலாஜி வழக்கோடு முடிச்சுப் போடாதீர்கள். இரண்டு வழக்குகளின் குற்றமும் தன்மையும் வெவ்வேறு. அதனால், செந்தில்பாலாஜி விசயத்தில் 12-ந்தேதி நல்லது நடக்க வாய்ப்பில்லை. பொறுத்திருந்திருந்து பாருங்கள்'' என்கிறார்கள். இதற்கிடையே, சிசோடியாவுக்கு ஜாமீன் கிடைத்திருப்பதை சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு தெரியப்படுத்தியதோடு, நம்பிக்கையோடு இருங்கள் என்றும் தகவல் தெரிவித்திருக்கிறார்களாம் வழக்கறிஞர்கள்.












Click it and Unblock the Notifications