ஓபனா சொல்லட்டா.. எதுக்கெடுத்தாலும் குறை.. எல்லாத்துக்கும் நான்தான்..திமுக மீது எஸ்பி வேலுமணி புகார்
திமுக அரசை விமர்சித்து பேட்டி தந்துள்ளார் எஸ்பி வேலுமணி
சென்னை: இந்த திமுக, என் மீது எத்தனை கேஸ் போட்டாலும் கவலையில்லை, ஆனால், கோவை மக்களின் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல்களில் போட்டியிட விரும்பும் அதிமுகவினருக்கான விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் இன்று துவங்கியது.
அந்த வகையில், கோவையில் முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான எஸ்பி வேலுமணியிடம் இன்று காலை முதல் கட்சியினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

பேட்டி
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி சொன்னதாவது: "எதுக்கெடுத்தாலும் குறை.. என்னையேதான் ஏதாவது பழி சொல்லிட்டே இருக்காரு.. ஓபனா சொல்லணும்னா, நாங்கள் ஆளும் கட்சியாக இருக்கும்போது பல்வேறு குற்றச்சாட்டுகளை சொன்னாங்க... அதுக்கு நான் எப்பவுமே ஒரு நியாயமான பதிலை சொல்லுவேன்.. அவர் கடுமையா என்னை பேசியிருக்கிறார்.. ஆனால், நான் அப்படி பேசியதில்லை..

அதிமுக அரசு
அதுக்கப்பறம் எடப்பாடி அண்ணன் ஆட்சியை காப்பாற்ற, 4 வருடம் தொடர்ந்து ஆட்சியை நடத்த, நானும், தங்கமணி, சிவி சண்முகம் எல்லாரும் பார்த்துக்கிட்டோம்.. அதாவது ஆட்சி மாற்றம் ஏற்படாமல் நான்தான் எடப்பாடி அண்ணனுக்கு சப்போர்ட்டா இருந்தேன்.. இதுல நான் தீவிரமா இருந்தேன்.. இதுதான் என் மேல கோபம்.. கோயம்புத்தூரில் 10-ல் 10-க்கு ஜெயிச்சிட்டோம்.. இதுக்கு காரணம் மக்களுக்கு எல்லாமே செய்து தந்தோம்.. இதுதான் திமுகவுக்கு 2வது கோபம்..

திட்டங்கள்
கோவையில் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்றதால் முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பல்வேறு திட்டங்களை வழங்கினேன்.. ஆனால், இப்போ திமுக அரசு பொறுப்பேற்றதையடுத்து, கோவையில் சாலைப்பணிகள் உட்பட 300 பணிகள் கிடப்பில் போடப்பட்டு விட்டன.. மக்கள் இதனால் சிரமப்படுகின்றனர்.

புதிய திட்டங்கள்
இந்த அரசு புதிய திட்டங்களை செயல்படுத்தாமல் முந்தைய அரசு மீது குற்றம் சாட்டி வருகிறது.. என் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.. என்னுடைய குடும்பத்தினர், நண்பர்கள் என தினமும் பலரை, விசாரணை என்ற பெயரில் போலீசாரும், அதிகாரிகளும் அலைக்கழிக்கிறார்கள்.. 60 இடங்களில் சோதனை செய்தார்கள்.. நாங்கள் ஒத்துழைப்பு தந்து கொண்டுதான் இருக்கிறோம்.. ஒரு பெண்ணை விசாரணைக்கு அழைத்து சென்று சாப்பிடகூட விடாமல் விசாரணை செய்திருக்காங்க.

மக்கள் பிரச்சனை
என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் கவலையில்லை, ஆனால் கோவையில் நிலுவையில் உள்ள மக்களின் பல்வேறு பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரச்சனைகளை உடனடியாக சீர் செய்யாவிட்டால் ஒரு வார காலத்திற்குள் தமிழக அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications