டிடிவி தினகரனுக்காக வாழை இலையை பாதியாக மடக்கிய ஓபிஎஸ்! சாம்பார் ஊத்துப்பா! திருமண பந்தியில் ருசிகரம்
தஞ்சை: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட டிடிவி தினகரனும், ஓ.பன்னீர்செல்வமும் பந்தியில் ஒன்றாக பக்கம் பக்கமாக அமர்ந்து விருந்து சாப்பிட்டனர்.
முன்னாள் அமைச்சரும், ஓ.பன்னீர்செல்வம் முகாமின் முன்னணி தளகர்த்தருமான வைத்திலிங்கம் இல்ல மண விழா தஞ்சாவூரில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஓ.பன்னீர்செல்வமும் டிடிவி தினகரனும் பக்கம் பக்கமாக அமர்ந்து நிறைய விஷயங்கள் பற்றி பேசிக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என வைத்திலிங்கம் பிடிவாதம் பிடித்ததால் வேறு வழியின்றி சாப்பிடுவதற்காக விஐபி டைனிங் ஹாலுக்கு சென்றனர். ஜே.சி.டி., பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், கு.ப.கிருஷ்ணன். செந்தமிழன், வெல்லமண்டி நடராஜன் என முக்கிய பிரமுகர்கள் ஒரே வரிசையில் சாப்பிட அமர்ந்தனர்.
அப்போது ஒவ்வொரு வாழை இலையும் பெரிது பெரிதாக இருந்ததால் டேபிளில் பாதி இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. இதனால் இடபற்றாகுறை ஏற்படும் சூழல் உருவானது. டிடிவி தினகரன் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம் தனது வாழை இலையை பாதியாக மடக்கி, அதில் சாப்பாடு வைக்கச் சொல்லி சாப்பிட்டார்.

வடை, பாயாசம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், பொறியல், கூட்டு, என மெனுவில் ஏராளமான பண்டங்கள் இடம்பெற்றிருந்தன. டிடிவி தினகரனோ கொஞ்சமாக சாதம் வாங்கி அதில் சிறிதளவு சாம்பார் ஊற்றி சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டார். அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் கொஞ்சமாக பெயருக்கு சாதம் வைக்கச் சொல்லி வேகமாக சாப்பிட்டுவிட்டு எழுந்துவிட்டார்.
இதனிடையே டிடிவி தினகரனுக்கு சாப்பாடு வைத்த பின்னர் அங்கிருந்த நிர்வாகி ஒருவர் சாம்பார் ஊத்துப்பா என பந்தி வைத்த நபர்களை விரட்டி வேலை வாங்கினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications