அதிமுகவை சீண்ட வேண்டாம்! உங்க வாய்கொழுப்பை திமுகவிடம் காட்டுங்க! சீமானுக்கு ஜெயக்குமார் வார்னிங்!
சென்னை: அதிமுகவுடன் விளையாட வேண்டாம் என்றும் அதிமுக தலைவர்களை சீண்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
Recommended Video
மேலும் சீமான் தனது வாய்கொழுப்பை திமுகவிடம் வேண்டுமானால் காட்டிக் கொள்ளட்டும் என்றும் அதிமுகவிடம் காட்டக் கூடாது எனவும் ஜெயக்குமார் ஆவேசம் காட்டினார்.
ஜெயலலிதாவுக்கு கடலில் மேக் அப் சின்னம் வைப்பீர்களா என சீமான் பேசியதாக கூறிய ஜெயக்குமார், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை சீமான் முதலில் கைவிட வேண்டும் என அறுவுரையும் வழங்கினார்.

தீரன் சின்னமலை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சூடாக பேட்டியளித்தார். சீமான் அதிமுகவுடன் விளையாட வேண்டாம் என்றும் அதிமுக தலைவர்களை சீண்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

வாய்க்கொழுப்பு
மேலும், சீமான் தனது வாய்கொழுப்பை திமுகவிடம் வேண்டுமானால் காட்டிக் கொள்ளட்டும் என்றும் அதிமுகவிடம் காட்டினால் நடப்பதே வேறு எனவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். சீமான் மீதான ஜெயக்குமாரின் இந்த திடீர் கோபத்துக்குக் காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னர் சீமான் அளித்த பேட்டி ஒன்றே காரணமாகும். எம்.ஜி.ஆருக்கு தொப்பிச் சின்னத்தையும், அண்ணாவுக்கு மூக்குப்பொடி டப்பா சின்னத்தையும், ஜெயலலிதாவுக்கு மேக் அப் சின்னத்தையும் கடலில் வைப்பீர்களா என சீமான் கேட்டிருந்தார்.

ஆமைச் சின்னம்
இந்நிலையில் தான் அதிமுக சீமானுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீமானுக்கு பிற்காலத்தில் அவரது கட்சிக்காரர்கள் ஆமைச் சின்னத்தை அமைப்பார்களா எனக் கேட்டு தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் ஜெயக்குமார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பற்றி யார் பேசினாலும் அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என கோபம் கொப்பளிக்க பேட்டியளித்தார் ஜெயக்குமார்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications