பிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையம் மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறிய ராகுல்காந்திக்கு பிரணாப் முகர்ஜியின் பேச்சு முகத்தில்விட்ட அறை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லோக்சபா தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசு தலைவரான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "ஒர் அரசு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால், இந்த நாட்டில் அரசு அமைப்புகள் முன்னரே நன்றாக செயல்பட்டு வந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம் தேர்தல்களை ஒழுங்காக நடத்திய தேர்தல் ஆணையத்தினால்தான். தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போது இருக்கும் தேர்தல் ஆணையர் வரை, அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

பிரணாப் பேச்சு

பிரணாப் பேச்சு

தேர்தல் ஆணையர்களை நாம் விமர்சிக்க முடியாது. இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன என்று கூறினார் பிரணாப் முகர்ஜி. அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி உட்பட, எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றன.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டதாகவும் விமர்சித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதேபோல் மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி உள்ளிட்ட பலரும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன.

காங். ஆட்சியில்

காங். ஆட்சியில்

இந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளார். பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். அவரே காங்கிரஸ்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தை பாராட்டி பேசினார்.

ராகுலுக்கு விடப்பட்ட அறை

பிரணாப் முகர்ஜியின் பேச்சால் காங்கிரஸ் கூட்டணி தலைவர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரணாப்பின் பேச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கொள் காட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் ராகுல்காந்தியின் கன்னத்தில் விடப்பட்ட அறை என கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+