நாங்க மாஸ்டர் மகேந்திரன் ஐ திட்டினோம்... ஏன் சி.மகேந்திரன் கோவிச்சி கிட்டு தவெகவில் சேர்ந்தார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாங்க மாஸ்டர் மகேந்திரன் ஐ திட்டினோம்... ஏன் சி.மகேந்திரன் கோவிச்சி கிட்டு தவெகவில் சேர்ந்தார்? என்று கிண்டல் செய்துள்ளார்கள் நெட்டிசன்கள். நடிகர மாஸ்டர் மகேந்திரன் அண்மையில் விஜய்யை திட்டக்கூடாது என்றும், என் வீட்டில் வேண்டுமானால் கரெண்டை எடுத்துக்கங்க என்று பேசியது பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. வார இறுதியில் தனியாக சிக்கிய மாஸ்டர் மகேந்திரனை களம் 8ல் பிளப்பது போல், எல்லாரும் மீம்ஸ் போட்டு அடித்தார்கள். இந்நிலையில் மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் எல்லாம் அளிதார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சி மகேந்திரன் தவெகவில் நேற்று இணைந்தார். இதனை கிண்டல் செய்துள்ளார் நெட்டிசன்கள்.

அண்மையில் நேர்காணல் ஒன்றி தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படுகிறதே என தொகுப்பாளர் மாஸ்டர் மகேந்திரனிடம் கேட்டார். அதற்கு கரெண்ட் போகுதா, சோலார் சிஸ்டம்னு ஒன்னு கண்டுபிடிச்சாங்களே அதை யாராவது ட்ரை பண்ணீங்களா? கரெண்ட் பிரச்சனை இல்லாம ஜாலியா இருந்துட்டீங்க, இப்போ கரெண்ட் போகுது, 6 மாசத்துக்கு யாரும் அதை பத்தி கேட்காதீங்க, என் வீட்டுல கூட கரெண்ட் எடுத்துக்கோங்க என மாஸ்டர் மகேந்திரன் சொன்னது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியது.

Mahendran tvk

முதலமைச்சர் விஜய்யை கேள்வி கேட்டா உங்க வீட்டுக்கு கரண்ட் வந்துருமா? மைக்க நீட்டி கேள்வி கேட்ட உடனே கரண்ட் வந்துருமா? கேள்வி கேட்பதை நிறுத்தினால் தான் பதிலே கிடைக்கும்" என்றும் மாஸ்டர் மகேந்திரன் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வெளுத்தெடுத்தனர். கேள்வி கேட்டால் கரெண்ட் வந்திடுமானு சம்மந்தமே இல்லாமல் பேசியதால் வார இறுதியில் விமர்சிப்பதற்கு அவல் தேடும் நெட்டிசன்களுக்க இவர் சிக்கிவிட்டார்.. பாரபட்சமே இல்லாமல் போட்டு வெளுத்தனர். நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், " எங்க போயிட்டு வர்ற, இதென்ன கட்ட பையில...

- அடிக்கடி கரெண்ட் போயிடுதா.. அதான் மாஸ்டர் மகேந்திரன் வீட்டுல போய் ரெண்டு கட்ட பை நிறைய கரெண்ட் ட தூக்கிட்டு வாரே... ஒரு ஒரு வாரத்துக்குப் பிரச்சனை இல்லை... பயங்கர கூட்டம்... நீங்களும் வேணும்னா உடனே கிளம்புங்க... பையன் ரெம்ப தங்கமான பையன்... கெளம்புறப்ப போதுமானு கேட்டான்... 2 பை தான் ப்பா கொண்டு வந்தேனு சொன்னதும் சீக்கிரம் போய் இன்னும் 2 பை எடுத்துட்டு வாங்கன்னு சொன்னான்... மனுசன்னா இப்பிடி இருக்கணும்... என்னா மனுஷன்... என்று கிண்டல் செய்துள்ளார்.

தமிழக அரசின் இடைக்கால ஓய்வூதியம்.. அரசு ஊழியர்களின் சந்தேகமும்.. பதில்களும்

* கேக்காதீங்க.. 6 மாசம் எதும் கேக்காதீங்க ..
- சண்முகம்

இது தோழர் மகேந்திரன் இல்ல.. நேத்து அடி வாங்குன மாஸ்டர் மகேந்திரன்" இவ்வாறு கூறியுள்ளார். மூன்றாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், மாஸ்டர் மகேந்திரனை டிஸ்சார்ஜ் பன்னிட்டு சி.மகேந்திரனை அட்மிட் பன்னு என்று கிண்டல் செய்துள்ளார்.

நான்காவதாக ஒரு நெட்டிசன், தவெக, GenZ க்களின் உளக் குமுரலை மட்டுமல்லாமல் வயோதிகர்களின் நீண்ட நாள் அபிலாசைகளையும் கவர்ந்த ஒரு கட்சியாக இருக்கிறது.

மஹேந்திரன் அவர்களை குறை சொல்ல ஒன்றும் இல்லை.

கம்யூனிஸ்ட் கட்சிக்குள் இருந்து கொண்டே TVK Lobby செய்வதற்கு பதிலாக அங்கேயே சேர்ந்து விட்டார்." என்று கூறியுள்ளார். ஐந்தாவதாக ஒரு நெட்டிசன் வெளியிட்ட பதிவில், இனி போட்டி இங்க மாஸ்டர் மகேந்திரனுக்கும் Vs தோழர் மகேந்திரனுக்கு மட்டும் தான் " என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+