"மாப்ளை".. பன்னீர்செல்வம் சொன்னதுமே, படக்குனு திரும்பி சிரித்த ஸ்டாலின்.. பின்னாடியே அப்பாவு "ஹைலைட்"

வேளாண் அமைச்சர் நகைச்சுவையாக பேசியதை கேட்டு, முதல்வர் ஸ்டாலினும், சபாநாயகரும் புன்னகைத்தனர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விதைப்பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, மான்ய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.. இதுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் இன்றைய பட்ஜெட் உரையில் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டபேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.. 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்தார்.. பின்னர் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

இதையடுத்து, 2-வது நாளான இன்று வேளாண்மை நிதிநிலை அறிக்கை தாக்கலாகி உள்ளது.. முன்னதாக, அமைச்சர் பன்னீர் செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிறு தானியங்கள் அடங்கிய கூடை அளித்து வாழ்த்து பெற்றார்...

 பச்சை கலர் துண்டு

பச்சை கலர் துண்டு

பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில், வேளாண் பட்ஜெட்டை வைத்து அமைச்சர் மரியாதை செலுத்தினார்.. அதற்கு பிறகு, வேளாண்மையை குறிக்கும் வகையில் பச்சை துண்டு அணிந்து, சட்டசபைக்கு வந்திருந்தார்.. காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்டம்தொடங்கியது... அப்போது, வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம், 2023-24ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.. அமைச்சர் பேசும்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

மகசூல்

மகசூல்

"தமிழகத்தில் நிலத்தடி நீர் அளவு அதிகரித்துள்ளது.. 119,97,000 மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளோம்... புன்செய் பயிர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம்.. உழவர்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. தமிழ்நாட்டில் சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரிக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.. வறட்சி, வெள்ள பாதிப்புகளை சமாளிக்கும் வகையில் புதிய பயிர் ரகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்..

 சிறுதானிய மண்டலம்

சிறுதானிய மண்டலம்

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித்திட்டத்திற்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தில் 26 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். 1.82 லட்சம் விவசாயிகளுக்கு 163.60 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டங்கள் சிறுதானிய மண்டலங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 சிறுதானிய மண்டலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கம்பு, கேழ்வரகு நேரடியாக கொள்முதல் செய்து கல்வி நிலையங்களுக்கு வழங்கப்படும்..

 வேளாண் திட்டம்

வேளாண் திட்டம்

கிராமங்கள் தன்னிறைவு பெற கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். 2504 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் இலவச பம்புசெட்டுகள், இலவச பண்ணைக்குட்டைகள் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு ஆழ்துளைக் கிணறுகள், உலர்களத்துடன் கூடிய தரம் பிரிப்புக் கூடங்கள் போன்ற வசதிகள் செய்யப்படும். விதைப்பண்ணைகளில், 200 ஏக்கர் பரப்பளவில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, மான்ய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

 லேசான புன்னகை

லேசான புன்னகை

இதுக்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.. மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டால் மாப்பிள்ளையா இருக்கலாம். தங்கம் சாம்பா சாப்பிட்டால் தங்கமாய் இருக்கலாம்.. இதெல்லாம் சாப்பிடணும்" என்றார் அமைச்சர் பன்னீர்செல்வம்... அவர் இப்படி சொன்னதுமே, முதல்வர் ஸ்டாலின் மெல்ல திரும்பி அமைச்சரை பார்த்து, லேசாக சிரித்தார். உடனே சபாநாயகர் அப்பாவு மைக்க பிடித்து, எல்லாருக்கும் கொடுங்க. சாப்பிட தயாராக இருக்காங்க என்றார் சிரித்தபடியே.. இதைக்கேட்டு அவையில் இருந்தோர், புன்னகைத்து, அமைச்சரின் கருத்தை வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+