வீடு, மனை வாங்குவோருக்கு.. பத்திரம் பதிவு செய்வதில் "ஸ்டார் 3.0".. தமிழக அரசு சர்ப்ரைஸ்.. இனி ஹேப்பி
சென்னை: வீடு, மனை பரிமாற்றம் தொடர்பான பத்திரங்களை, எந்த சார் - பதிவாளர் அலுவலகத்திலும் பதிவு செய்வது உள்ளிட்ட புதிய வசதிகளை, பதிவுத் துறை விரைவில் செயல்படுத்த உள்ளது.
நம்முடைய தமிழகத்தை பொறுத்தவரை, பத்திர ஆவணங்களை பதிவு செய்யும்போது, அது தொடர்பாக தடைகள் ஏதாவது உள்ளனவா என்பதை சார் பதிவாளர்கள் சரிபார்ப்பது அவசியமாகும்..

ஆனால், இதுபோன்ற ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும்போது, வேறு சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை எதுவும் உள்ளதா என்பதையும் டிஐஜி அலுவலகம் வாயிலாக சரிபார்க்க வேண்டும் என்பது நடைமுறையாக இருந்தது.
வசதிகள்: இதற்காகவே, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு இடையே கடித போக்குவரத்து நடத்த, அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை முறைப்படுத்தவே, ஆன்லைன் பத்திரப்பதிவுக்கான, "ஸ்டார் 2.0" சாப்ட்வேரில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
பத்திரப்பதிவு பணிகளை கணினிமயமாக்க, "ஸ்டார்" என்ற சாப்ட்வேர் கடந்த 2000ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 2ம் கட்டமாக, "ஸ்டார் 2.0" என்ற சாப்ட்வேர் உருவாக்கப்பட்டு கடந்த 2018 பிப்ரவரி முதல் அமலுக்கு வந்தது. இதனால், பத்திரப்பதிவில் பெரும்பாலான பணிகள் அனைத்துமே ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டன.
ஆன்லைன் முறை: சொத்து பரிமாற்றம் தொடர்பான விபரங்களை, ஆன்லைன் முறையில் சரிபார்த்து, பதிவுக்கு நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் வந்தால் பத்திரப்பதிவு முடித்து, சில மணி நேரத்தில் பத்திர பிரதிகளும் வழங்கப்படுகின்றன... வில்லங்க சான்றிதழ்களையும் எளிதாக பெறக்கூடிய இந்த வசதிகள் பொதுமக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டன.
இந்த திட்டம் சிறப்பாக கை கொடுக்கப்பட்ட நிலையில், பத்திரங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.. முக்கியமாக சர்வர் மேம்பாட்டு பணிகளுக்கு அவசியம் எழுந்துள்ளது..
எனவே, நடைமுறை ரீதியாக பல்வேறு மாற்றங்கள் தேவைப்படுவதை கருத்தில்கொண்டு, "ஸ்டார் 3.0" என்ற புதிய சாப்ட்வேர் தேவை தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணி விரைவில் துவங்க போவதாகவும் தகவல்கள் வெளிவந்தவாறே இருந்தன..
சட்டப்பேரவை அறிவிப்பு: இந்நிலையில், இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பதிவுத்துறை கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"கடந்த, 2023 - 24 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டபடி, "ஸ்டார் 3.0" சாப்ட்வேர் தயாரிக்க, 323.45 கோடி ரூபாய் நிதியை பயன்படுத்த அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சாப்ட்வேர் தயாரிப்பதற்கான ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பதற்கான, டெண்டர் கோரும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன்மயம்: இந்த புதிய சாப்ட்வேர் பயன்பாட்டுக்கு வந்தால், ஒரு பத்திரத்தை பதிவு செய்வதில், 95 சதவீத பணிகள் ஆன்லைன் முறைக்கு மாறி விடும்.. அதுமட்டுமல்ல, சார் - பதிவாளர் அலுவலகத்தில் தான் சொத்துக்களை பதிவு செய்ய வேண்டும் என்றில்லாமல், எங்கிருந்தும், எந்த அலுவலகத்திலும் பதிவு செய்து கொள்ளும் வசதிகள் உருவாக்கப்படும் என்றே நம்பப்படுகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications