யாருங்க இந்த ரேவதி மிஸ்?.. "இவங்களா" இப்படியா? அதுவும் எல்லார் முன்னாடியும்.. செம்ம அப்ளாஸ்.. வாவ்

புதுக்கோட்டை அரசு பள்ளி ஆசிரியையின் டான்ஸ் வீடியோ இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசு பள்ளியில் பணியாற்றும் ஒரு தமிழ் ஆசிரியையின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. யார் இவர் என்று காண்போரை எல்லாம் மலைக்க வைத்து வருகிறார் அந்த ரேவதி டீச்சர்..!!

கலைகளில் எவ்வளவுக்கு எவ்வளவு மண் சார்ந்த தன்மையை முன்னெடுத்து செல்கிறோமோ, அந்த அளவுக்கு அந்த கலைகள் அத்தனையும் உலகளாவிய தன்மையை பெற்றுவிடுகின்றன என்பதே உண்மை
இது தமிழகம், இந்தியாவில் மட்டுமல்ல.. உலகளாகவிய உண்மையாகும்.. அப்படித்தான் பல்வேறு நாடுகள் தங்கள் கலைகளை திரைப்படங்கள், ஊடகங்கள், வாயிலாக விடாமல் கொண்டு சென்று கொண்டிருக்கின்றன.

சூப்பர் டான்ஸ்

சூப்பர் டான்ஸ்

அதற்கான வாய்ப்புகள் தமிழகத்தில் குறைந்து காணப்படுவதாக சொல்லப்பட்டு வரும்நிலையில், தற்போது அந்த குறைகளும் மெல்ல மெல்ல களையப்பட்டு வருகின்றன.. அதிலும், அரசு அதிகாரிகளும், அரசு பள்ளி ஆசிரியைகளும், மக்களோடு மக்களாக, மாணவர்களோடு மாணவர்களாக கலந்து நடனமாடி வருவது அதிகரித்து வருகிறது.. பொதுவாக, அரசு அதிகாரி என்றாலே, மடிப்பு கலையாத விறைப்பான ஆடை, அதிகார தோரணை, மிடுக்கான நடை, கண்டிப்பான பார்வை, இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கட்டமைப்பு இங்கே சிலர் உருவாக்கி வைத்துவிட்டனர்..

பஞ்சுமிட்டாய்

பஞ்சுமிட்டாய்

இந்த மாயைகள் நொறுக்கப்பட்டு வருகின்றன.. சில மாதங்களுக்கு முன்பு நடந்த, பெரம்பலூர் மக்கள் சேவையின் பொது சுகாதாரத்துறையின் நூற்றாண்டு விழா நடந்தது.. பாரம்பரிய கலைகளான சிலம்பம், கரகாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்கள், அழிவின் விளிம்பில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே, நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரத்துறை இயக்குனர் கீதாராணி கலந்து கொண்டு, மாங்குயிலே பூங்குயிலே, பஞ்சுமிட்டாய் சேலை கட்ட போன்ற பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அசத்தியிருந்தார்.

ஐலேசா ஐலேசா

ஐலேசா ஐலேசா

அதேபோல, "எண்ணும் எழுத்தும்" என்ற திட்டத்தை மழலை பள்ளிகளில் அரசு நடத்தி வருகிறது.. இந்த "எண்ணும் எழுத்தும்" பயிற்சியில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் டான்ஸ் ஆடியருந்தது 2 மாதங்களுக்கு முன்பு இணையத்தில் வைரலானது.. முதலாம் வகுப்பு (1ST STD) மாணவர்களுக்கு பாடப்புத்தகத்தில் வரும் "அந்தி மல்லி பூத்திருக்கு ஐலேசா ஐலேசா" என்ற பாடலுக்கு அந்த டீச்சர் டான்ஸ் ஆடியிருந்தார்.. அந்த டீச்சருக்கு எப்படியும் கிட்டத்தட்ட 50 வயதிருக்கலாம்.. ஆனால், நளினமாகவும், மென்மையாகவும், சுறுசுறுப்பாகவும் இவர் ஆடியது பார்ப்போரை கவர்ந்திழுத்தது.

ரேவதி டீச்சர்

ரேவதி டீச்சர்

இப்போதும் மற்றொரு டீச்சரின், டான்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.. புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ராஜகோபாலபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர் ரேவதி... சமீபத்தில் நடந்து முடிந்த பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திருவிழா நடந்துள்ளது.. இந்த திருவிழாவின்போது அந்த பள்ளியில் பயிலும் மாணவிகளும் கலைத்திருவிழாவில் பங்கேற்க (ரிகர்சல்) பார்க்கப்பட்டுள்ளது... அப்போது அந்த பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்குடன் மலையாள பாடல் ஒன்றுக்கு , ரேவதி டான்ஸ் ஆடியுள்ளார்..

புல்லரிச்சிடுச்சே

புல்லரிச்சிடுச்சே

ரேவதி ஒரு தமிழ் ஆசிரியை.. வளைந்து நெளிந்து இந்த டீச்சர் ஆடியது, அங்கிருந்த மாணவிகளுக்கே புல்லரித்து விட்டது.. அதனால், ரேவதி டீச்சருடன் இணைந்து, மாணவிகளும் டான்ஸ் ஆட துவங்கி விட்டனர்.. கலை திருவிழாவில் பங்கேற்க சென்ற அரசு பள்ளி மாணவிகளை உற்சாகப்படுத்துவதற்காக, ஆசிரியர் ரேவதி நடனமாடிய வீடியோவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்... அதில், "எங்கள் அரசு பள்ளி ஆசிரியை ரேவதியின் ஒரு அழகான நிகழ்ச்சி... அவர் தன் குழந்தைகளுடன் நடனமாடும் ஆசையை அண்மையில் நடந்து முடிந்த கலை திருவிழா ஏற்படுத்தி கொடுத்துள்ளது.. நடனம் வாழ்வை அழகாக்கும்" என்று கலெக்டர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+