NO: 1.. சிங்கார சென்னை 2.0.. ரூ.24 கோடி தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு.. முதல்வர் ஸ்டாலின் கனவு நனவாகுதே
சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் புதிதாக பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலைகள், மீன் சந்தை, இறைச்சிக் கூடம், பள்ளிக்கட்டடங்கள் அமைக்க ரூ. 24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகிலுள்ள பழம்பெரும் மாநகராட்சிகளில் ஒன்றுதான் சென்னை மாநகராட்சி.. கடந்த 20 ஆண்டுகளில், மேயர் என்றாலே டக்கென நம் கண்முன் வந்து நிற்பது ஸ்டாலின் பெயர்தான்..
இதற்கு காரணம், " மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர்" என்ற பெருமையை பெற்றவர் முதல்வர் முக ஸ்டாலின் தான். அன்று மேயராக இருந்தபோது ஸ்டாலின், சென்னைக்கு செய்த சீர்திருத்தங்கள் ஏராளம்..

மேயர் ஸ்டாலின்: மேயராக அவர் பொறுப்பேற்றதுமே, சென்னையை "சிங்காரச் சென்னை"யாக மாற்றுவேன் என்று சொன்னார்.. அவர் சொன்னபடியே செய்தும்காட்டினார்.. ஸ்டாலினுக்கு அடுத்து, அன்று மேயராக இருந்த இன்றைய அமைச்சர் மா.சுப்பிரணியத்துக்கும் நாம் நன்றிகளை சொல்ல வேண்டி உள்ளது.. அன்று இவர்கள் இருவரும் மட்டும் இல்லையென்றால், இன்று சென்னையில் இத்தனை பாலங்கள், மேம்பாலங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதை அமைத்தல், சாலைப் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், கடற்கரை சீரமைப்பு இப்படி பல்வேறு பணிகள் நடந்திருக்காது என்பதை மறுக்க முடியாது. சென்னையும் பூத்து குலுங்கி இருக்காது..
ஆனால், அதோடு சரி.. 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு மொத்த திட்டமும் அப்படியே அமுங்கிவிட்டது.. மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்ததுடன், மெட்ரோ ரயில் திட்டத்தையும் சேர்த்து அமலாக்கியது.. மறுபடியும் சென்னையை யாருமே கவனிக்கவில்லை என்றும் கடந்த 10 வருட ஆட்சியில், அதிமுகவின் உட்கட்சி பிரச்சனைகளே மேலோங்கி எழுந்த நிலையில், சென்னையை கண்டுகொள்ளவே இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
சிங்கார சென்னை: இதையடுத்து, மீண்டு திமுக ஆட்சிக்கு வந்த நிலையில், மறுபடியும் "சிங்காரச் சென்னை திட்டம் 2.0" என்ற பெயரில் கையில் எடுத்தது.. சமீபத்தில், சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் 42 பணிகளை மேற்கொள்ள ரூ.98.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்...
இந்நிலையில், சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் புதிதாக 8 பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்கள், நீர்நிலை மேம்பாட்டுப் பணி, மீன் சந்தை அமைத்தல், இறைச்சிக் கூடம் நவீன மயமாக்குதல், 3 பள்ளிக்கட்டடங்கள் என மொத்தம் 14 திட்டப்பணிகளுக்கு ரூ.23 கோடி நிதி, சென்னை மாநகராட்சி பங்களிப்பு நிதி ரூ.1.34 கோடி என மொத்தம் ரூ.24.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீடு: இதன்படி, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 2 பூங்கா, கண்ணகி நகர் மற்றும் எழில் நகர் அணுகு சாலையில் 1 பூங்கா, மணலி மண்டலத்தில் பொன்னியம்மன் நகர் 3வது தெருவில் உள்ள திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, மணலி புதுநகர் 3வது தெருவில் திறந்தவெளி ஒதுக்கீடு இடத்தில் 1 பூங்கா, 35வது பகுதியில் 1 பூங்கா, வளசரவாக்கம் மண்டலத்தில் தமிழ் நகரில் நடைபாதை மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய 1 பூங்கா, குறிஞ்சி நகரில் நடைபாதை, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி வசதிகளுடன் கூடிய விளையாட்டுத் திடல் என மொத்தம் 8 பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல்கள் ரூ.4.28 கோடி மதிப்பில் அமையவுள்ளது.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு அகஸ்தீஸ்வரர் கோவில் குளத்தினை ரூ.2.99 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி, இராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் 102 கடைகள், குடிநீர் மற்றும் வடிகால் வசதிகளுடன் ரூ.2.69 கோடி மதிப்பில் மீன் சந்தை அமைக்கும் பணி, சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சிக்கூடத்தை நவீன வசதிகளுடன் சீரமைக்கும் பணிகள் ரூ.1.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை தவிர்த்து, கூடுதல் வகுப்பறைகள், ஸ்மார்ட் போர்டுகள், நூலகம், பசுமை வளாக வசதிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளுடன் திருவல்லிக்கேணி, எல்லீஸ்புரம் சென்னை நடுநிலைப்பள்ளி, பெரம்பூரில் மார்க்கெட் தெரு சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் புதிய காமராஜ் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் 3 புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்ட ரூ.12.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications