ஜெய்சங்கர் "அந்த" நடிகையிடம் காட்டிய அன்பு.. "நிஜ ஹீரோ"வின் கருணை.. மேடையை கலங்கடித்த மகா நடிகை.. செம
சென்னை: தன் இயல்பை நினைத்து, மனம்வருந்தி பகிரங்கமாக ஒப்புக்கொள்வதாகட்டும் அல்லது ஒருவர் வறுமையில் உழலும்போது, அவரை ஓடோடி சென்று தாங்கி பிடிப்பதாகட்டும், இந்த இரு குணமுமே போற்றத்தக்கது.. எத்தனையோ பெரியவர்கள் இந்த இயல்புகளை பெற்றுள்ளனர் என்றாலும், 2 பேரை மட்டும் இங்கு உதாரணம் சொல்லலாம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என பெரிய பெரிய ஜாம்பவான்கள், திரையுலகில் புயலாய் கலக்கி கொண்டிருந்தபோது, தென்றலென உள்ளே நுழைந்தவர் ஜெய்சங்கர்..
மென்மையான அணுகுமுறையாலும், மிகைப்படுத்தப்படாத நடிப்பாலும், மக்கள் கலைஞர் என்ற படத்தை மிக குறுகிய காலத்திலேயே அவரால் பெற முடிந்தது.
ஜென்டில் மேன்: குறைந்த சம்பளத்தில் நிறைவாக நடித்து தந்தவர் ஜெய்சங்கர்.. எந்தவித தொந்தரவும் தந்ததில்லை.. ஈகோ பார்த்தது இல்லை.. சம்பளத்தில் பாக்கி வைத்தால், அதையும் கேட்பதுமில்லை... "அவங்ககிட்ட இல்லேன்னுதான் நமக்கு தரமுடியாம இருக்காங்க. அவங்களுக்கு கிடைக்கும்போது தரட்டும். கிடைச்சும் தரலையா... பரவாயில்ல" என்று அனைத்தையும் எளிதாக எடுத்து கொண்டவர்..

வயது கூடிக்கொண்டே வர, வர பட வாய்ப்புகள் குறைந்தாலும், அவரது தயாள குணம் மட்டும் குறையவே இல்லை. தன் வீட்டு குடும்ப விழா, பிறந்தநாள் விழா, கல்யாணம் என அனைத்தையுமே, ஆதரவற்ற விடுதிகளில் கொண்டாடியவர்.. தனக்கு தொடர்புடைய பிரபலங்களையும், அங்கு அழைத்துப்போய் அவர்கள் கையாலேயே பரிமாற செய்தவர்.. "மெர்சிஹோம்" என்ற விஷயத்திற்குள் திரையுலகை கொண்டு சென்றவர்.
நலிந்த கலைஞர்களை ஊக்குவித்தவர்.. இந்த தயாள குணம், நடிகை சாவித்திரி வரை நீண்டது.. அடுத்தவர்களுக்கு கொடுத்து கொடுத்து உதவிய சாவித்திரி வறுமைப்பிடியில் சிக்கியபோது, அவருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும் என்று நினைத்தார்.. இதற்காகவே, தன் படமான ஜக்கம்மாவில் சாவித்திரிக்கு தேவைக்கும் அதிகமான பணத்தைக் கொடுத்து நடிக்க வாய்ப்பளித்தார். ஆனாலும் அவரது இரக்க மனம் திருப்தியளிக்கவில்லை.
சர்க்கரை நோய்: ஆதலால் மெர்சிஹோமில் ஒரு ஏற்பாடு செய்து விட்டு சாவித்திரியை அழைக்க அவர் வீட்டிற்குச் சென்றார் ஜெய்சங்கர்.. ஆனால், நலிந்த நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த சாவித்திரி, எங்குமே வெளியில் செல்லாமல் இருந்த காலம் அது.
"நான் எங்கும் வெளியே வருவதில்லைப்பா? உன்னை எனக்குப் பிடிக்கும் . ஆனாலும் நான் வரலைப்பா... தப்பா நினைக்காதே" என்றார்.
"இல்லையம்மா, எனக்காக நீங்க வரணும்" என்று கேட்டு சம்மதம் வாங்கிய ஜெய்சங்கர், குறிப்பிட்ட நாளில் அவரே வந்து நிகழ்ச்சிக்கு அழைத்தும் சென்றார்.

அந்த விழாவில் சாவித்திரி பேசியதாவது "நான் இந்த விழாவிற்கு வருவதாகவே இல்லை. எங்கும் போகக்கூடாது என்கிற மனநிலையில்தான் இருந்தேன். ஆனாலும் ஒருசில விஷயங்களை இதன் மூலம் சொல்லணும் என நினைத்து தம்பி ஜெய்சங்கர் அழைப்பை ஏற்று வந்தேன்.
ஈகோ: என் முன்கோபம், ஈகோ, துரோகம் , இழப்பு எல்லாம் என்னை மாற்றி என் வாழ்க்கையை அழித்து விட்டது. இனி யாரும் என்னைப்போல் வாழக் கூடாது என் வாழ்க்கையே ஒரு படிப்பினையாகட்டும் என்பதை சொல்லவே இங்கு வந்தேன். இயக்குநர் எஸ்பி.முத்துராமனைப்போல் எனக்கொரு அண்ணன் இருந்து என்னை நல்வழிப்படுத்தியிருந்தால் ஒருவேளை நானும் இன்று நல்லநிலையில் இருந்திருப்பேன்.
"என் அண்ணனான அவரையும், தம்பியான ஜெய்சங்கரையும் நான் என்றும் மறக்கமாட்டேன்" என்றபோது, அனைவரின் கண்களும் குளமாயின.. விழாவின் முடிவில் ஒரு குறிப்பிட்ட பெரிய தொகை பணமுடிப்பாக தரப்பட்டபோது, சாவித்திரியின் கண்களும் ஈரமாய் நனைந்தன..
தன் குணத்தை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டு, அதற்காக மனப்பூர்வமாக வருந்தி, இதன்மூலம் பிறருக்கான பாடத்தை அறிவுரைத்தது சாவித்திரியின் பெருந்தன்மை..!!
நிஜஹீரோ: எத்தனையோ பிள்ளைகளுக்கு, படிப்பும், வாழ்வும், சோறும் தந்ததுடன், திரையுலகிலும் சத்தமில்லாமல் உதவிகளை செய்து, அவர்களை தாங்கிப்பிடித்தது நிஜ ஹீரோ ஜெய்சங்கரின் கருணை.. !!
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications