"வா டியர் ராசாத்தி".. தோளில் கை போட்டு.. மெல்ல வளைத்து பிடித்து.. அட.. நம்ம ஜோதிமணியும், கனிமொழியும்
ஜோதிமணி எம்பியும், கனிமொழியும் இணைந்து எடுத்துள்ள போட்டோ ஷேர் ஆகி வருகிறது
சென்னை: திமுகவினரும், காங்கிரஸ் தொண்டர்கள் பெரும்பாலானோரும், ஜோதிமணி ட்விட்டர் பக்கத்திலேயே வட்டமடித்து கொண்டிருக்கிறார்கள்.. காரணம் என்ன தெரியுமா? இந்த ஒரு போட்டோதான்..!!
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 37 பேரில், 3 பெண் எம்பிக்களும் அடக்கம் என்பது பெருமைக்குரிய விஷயம்.
கனிமொழி, ஜோதிமணி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரே அந்த சிறப்புக்குரியவர்கள்.. திமுகவில் இத்தனை பெண்களா என்று பாஜகவே "ஆ"வென வாயை பிளந்து அப்போது பார்த்தது..

தமிழச்சி தமிழச்சி
திமுக எம்பிக்கள் அன்றைய தினம் பதவியேற்றுக் கொள்ள டெல்லி விரைந்தனர்.. அதில் அனைவரது கவனத்தையும், 3 பெண் எம்பிக்கள் அப்போது ஈர்த்திருந்தனர்.. காரணம், பச்சை, மஞ்சள், சிவப்பு கலர் புடவைகளில் கெத்தாக அவைக்குள்ளே இவர்கள் நுழைந்தார்.. இந்த 3 பேருமே திறமைசாலிகள்.. 3 பேருமே இலக்கியவாதிகள்.. பொதுவாக, இலக்கியவாதிகளுக்கு சமூக அக்கறை என்பது நிறைந்தே இருக்கும். அரசியல்வாதிகள் கொஞ்சம் அடக்கியே வாசித்தாலும்கூட, அவர்களைவிட அதிகமாகவே "பொங்குபவர்கள்தான்" இலக்கியவாதிகள்.. அது கனிமொழிக்கும், ஜோதிமணிக்கும், தமிழச்சிக்கும், அபரிமிதமாகவே நிரம்பி உள்ளது

மஞ்சள் கலர்
பதவியேற்பு தினத்தன்று, சபைக்கு வந்த இவர்கள் 3 பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்து கொண்டனர்.. வெள்ளை நிற புடவையில் கனிமொழியும், சிவப்பு நிற புடவையில் ஜோதிமணியும், மஞ்சள் நிற புடவையில் தமிழச்சி தங்கபாண்டியனம் அசத்தினார்கள்.. இவர்களுடன் சரத் பவார் மகள் சுப்ரியா சூலேவும் ஓடிவந்து கலந்து கொள்ள, அந்த போட்டோ செஷனே அமர்க்களமாக அப்போது மாறிவிட்டது.. வெற்றி பெற்று எம்பியாக பதவியேற்ற பூரிப்பில், முகமெல்லாம் மலர்ச்சியாக, சந்தோஷமாய் காணப்பட்டார்கள்.. ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து தங்கள் நேசத்தை வெளிப்படுத்தினார்கள்.. இந்த போட்டோக்களை ஜோதிமணி அப்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பச்சை நிறம்
இப்போதும் ஜோதிமணி ஒரு போட்டோவை தன்னுடைய ட்விட்டில் பதிவிட்டுள்ளார். இன்று பாரத் ஜோடா யாத்திரையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துக் கொண்டார்.. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் நிலையில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணியில் கலந்துக் கொண்டார்.. அப்போது ஜோதிமணியுடன் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்.. கனிமொழியின் தோளின்மீது கேஷூவலாக ஜோதிமணி கையை போட, அந்த கையை இறுக்கமாக பிடித்து கொள்கிறார் கனிமொழி.. இரு பெண் எம்பிக்களும் பளிச்சென சிரித்து, நட்பை இழையோட விட்டுள்ளனர்.

குஷி விரிசல்
இன்று என்னுடைய தோழி கனிமொழியுடன் என்று பெருமிதமாக கூறி, இந்த போட்டோவை பதிவிட்டுள்ளார் ஜோதிமணி. இந்த போட்டோவைதான் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.. கடந்த சில மாதங்களாகவே, ஆளும் தரப்புடன் ஜோதிமணி உறவு சுமூகமாக இல்லை.. சில போராட்டங்களை தொகுதியில் முன்னெடுத்து, அரசுக்கு தர்மசங்கடத்தை ஜோதிமணி ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.. மேலும், ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில்பாலாஜிக்குமான அழுத்தமான சகோதர பாசமும், தற்போது விரிசலடைந்து உள்ளது..

பிரகாசம்
இது காங்கிரஸ் சீனியர்களுக்கு ஒருவகையில் உள்ளூர குஷியை தந்துவந்தாலும், இன்றைய தினம் கனிமொழியுடன் ஜோதிமணி கை கோர்த்துள்ளது, பல கட்சிகளையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது... ஆக, எவ்வளவுதான் கட்சிகளுக்குள் சலசலப்புகள், முரண்பாடுகள் வந்தாலும், அரசியலையும் தாண்டி "ஆழ்நட்பு" பிரகாசித்துவிடுகிறது.. அத்துடன் எல்லாவித பிணக்குகளையும் நொறுக்கி தள்ளிவிடுகிறது என்பதற்கு இந்த "இந்திய ஒற்றுமை பயணம்" இன்னொரு உதாரணம் ஆகும்..!!












Click it and Unblock the Notifications