50 ரூபாய் தினமும் கட்டினால், ரூ.35 லட்சம் அள்ளலாம்.. போஸ்ட் ஆபீஸ் அசத்தலான திட்டம்.. குஷி விவசாயிகள்
சென்னை: கிராமப்புற மக்களுக்காக குறிப்பாக விவசாயிகளுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமான கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம் என்றால் என்ன தெரியுமா? இதன் பலன்கள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலான மக்கள் சிறுசேமிப்பு திட்டங்களை நாடி வர காரணமே, இந்த திட்டங்களில் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வுதான்.. வட்டியும் ஓரளவு அதிகமாக கூடியதாக உளளது.. அதிலும் சில வங்கிகள், நிரந்தர வைப்புக் கணக்குகளுக்கு கணிசமான வட்டியை வழங்கி வருகின்றன..

வரிச்சலுகை: இது எல்லாவற்றையும்விட, அரசு அங்கீகாரம் இருப்பதால், முதலீடு செய்பவர்களின் சேமிப்பும் பாதுகாப்பாக இருக்கும். அத்துடன் வரிச்சலுகையும் சிலவற்றுக்கு உள்ளன.. இதில் இன்னொரு வசதியும் உண்டு.. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு கால அளவீடு இல்லை.. எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். எனவேதான், பொதுமக்களின் ஆர்வம் சிறுசேமிப்பு திட்டங்களில் அதிலும், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் குவிந்து வருகிறது.
சமீபத்தில்கூட, தபால் அலுவலக சேமிப்பில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.. அதாவது, தினமும் ரூ.50 முதலீடு செய்தாலே, முதிர்வு காலத்தில் ரூ.35 லட்சம் வரை கிடைக்கும் புதிய அஞ்சலக சேமிப்பு திட்டத்தை வெளியிட்டிருக்கிறது.
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம்: குறுகிய முதலீட்டில், லாபத்தை தரக்கூடியதுதான், போஸ்ட் ஆபீஸ் கிராம் சுரக்ஷா யோஜனா திட்டம்.. இந்த திட்டத்தின் மூலமாக தினந்தோறும் ரூ.50 அதாவது மாதம் 1500 ரூபாய் வரை முதலீடு செய்து வந்தாலே முதிர்வு காலத்தில் ரூபாய் 35 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..
உதாரணத்துக்கு நீங்கள 19 வயதில் ரூ.10 லட்சம் கிராம் சுரக்ஷா யோஜனா வாங்கினால், 55 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 பிரீமியம் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், 58 வருடங்களக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,463 மற்றும் 60 ஆண்டுகளுக்கு ரூ.1,411 டெபாசிட் செய்ய வேண்டும்.
தகுதிகள்: 19 வயது முதல் 55 வயது வரையுள்ள இந்திய குடிமகன் யாராக இருந்தாலும் இந்த திட்டத்தில் இணைய முடியும்.. இந்த காப்பீட்டுத் தொகை திட்டத்தின் மூலமாக குறைந்தபட்சமாக ரூபாய் 10,000 முதல் அதிகபட்சமாக 10 லட்சம் வரைக்கும் சேமிக்கவும் முடியும். இந்த கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில், பிரீமியத்தை மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் டெபாசிட் செய்யலாம்.
கிராம் சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யும்போது உங்களுக்கு தேவையான கடன் வசதியையும் பெற்றுக்கொள்ளலாம். அதாவது 4 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கடன் வசதி கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் அதைச் சரண்டர் செய்ய விரும்பினால், பாலிசி தொடங்கிய நாளிலிருந்து 3 வருடத்துக்கு பிறகு சரண்டர் செய்யலாம். 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தத் திட்டத்தில் போனஸும் கிடைக்கும்.
விதிகள்: ரூ.35 லட்சம், 80 வயதை நிறைவு செய்யும்போது, தபால் அலுவலக கிராம் சுரக்ஷா யோஜனாவில் முதலீடு செய்யும் பயனாளியிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும். எனினும் பலர், இதற்கு முன்பே தொகையை கோருவதால், விதிகளின்படி 55 வருட முதலீட்டில் ரூ.31 லட்சத்து 60 ஆயிரமும், 58 வருட முதலீட்டில் ரூ.33 லட்சத்து 40 ஆயிரமும், 60 வருட முதிர்வு காலத்தில் ரூ.34 லட்சத்து 60 ஆயிரமும் லாபம் கிடைக்கும்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன












Click it and Unblock the Notifications