Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூபாய்க்கு ஒருபடி அரிசி டு மெட்ரோ ரயில் வரை.. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி..

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல அதிரடியான திட்டங்களை அரங்கேற்றியதில் இந்தியாவுக்கே திமுகதான் முன்னோடி. அப்படி என்ன திட்டங்களை நிறைவேற்றி விட்டது என உடனே சிலருக்குக் கேள்வி எழலாம்!

அதற்கு முதல் உதாரணம் ஒன்று உண்டு. முதலமைச்சராக பக்தவத்சலம் இருந்தபோது அரிசி பஞ்சம் தலைவிரித்தாடியது. ஏறக்குறைய விளைச்சல் வீழ்ந்து, வறுமை எல்லோர் வீட்டு வாசலையும் தட்டி நின்றது.

 Excellent schemes implemented in DMK regime

1967 தேர்தல் நேரத்தில்தான், அண்ணாதுரை 'ரூபாய்க்கு 3 படி அரசி' எனக் கவர்ச்சி தரும் திட்டத்தை அறிவித்தார். அதாவது "ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம். ஒரு படி அரிசி நிச்சயம்" என்றார்

அந்த அறிவிப்புக் குக்கிராம மக்களின் செவிகளில்கூட எல்லாம் வெள்ளம் போய் பாய்ந்தது. மக்கள் மகிழ்ச்சி பெற்று வாக்களித்தனர். அண்ணாதுரை முதலமைச்சரானார். ஆட்சிக்கு வந்ததும் சென்னையில் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின் கோயம்புத்தூருக்குத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

 Excellent schemes implemented in DMK regime

சிலர் இதை விமர்சித்த போது, அந்த விமர்சகர்களுக்குப் பதில் தரும் பொருட்டு அண்ணாதுரை அவரது அவரது 'புதிய வரலாறு' என்ற புத்தகத்தில், "சென்னையிலும் கோவையிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுகிறோம். இதைப் பார்த்துவிட்டு காங்கிரசார் 'சென்னையில் தானே ஒரு படி அரிசி? சென்னிமலைக்கு எங்கே? கோவைக்குதானே ஒருபடி அரிசி? கோவில்பட்டிக்கு எங்கே?' என்று கேட்கிறார்கள்.

நான் கூறுகிறேன். நீங்கள் செய்ததை விட நாங்கள் இந்தக் காரியத்தைத் தொடர்ந்து அமல் நடத்துவோம். ஒரு ஆண்டில் கூட அல்ல, சில மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவோம்" என்றார்.

 Excellent schemes implemented in DMK regime

அண்ணாதுரையின் இந்தத் திட்டம்தான் திமுக என்ற கட்சியின் அடிசரடு. இதைப்போல் யாருமே யோசிக்க முடியாத ஒரு திட்டத்தைக் கருணாநிதி 2006இல் அறிவித்தார். அது நாடு முழுவதும் புயலைக் கிளப்பியது. இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம்.

அன்றைக்கு கலர் டிவி என்பது ஆடம்பரமான பொருள். பலருக்கும் இது சாத்தியமில்லை. அரசு கஜானா காலியாகிவிடும். அதற்கான நிதி மாநில அரசிடம் இல்லை. இது நிறைவேற்ற முடியாத ஒரு பொய்யான அறிவிப்பு என்றனர்.

 Excellent schemes implemented in DMK regime

ஆனால், அதை எல்லாம் வாக்காளர்கள் நம்பவில்லை. அந்தத் தேர்தலில் கருணாநிதி வென்றார். ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டாக 30 ஆயிரம் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கினார். சொன்னதைச் செய்த உடன் மேல்தட்டு விமர்சகர்கள் பலர், 'இலவசத்தைக் கொடுத்து மக்களைச் சோம்பேறி ஆக்குகின்றார்கள்' என்று எழுதினர்.

முதலில் முடியாது என்றவர்கள், நிதி இல்லை என்றவர்கள் டிவியை கொடுத்ததும் மிரண்டுபோனார்கள். அதற்குப் பின்பு தொடர்ந்தது அதிரடி. ஏறக்குறைய 10 லட்சம் டிவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டன.

 Excellent schemes implemented in DMK regime

இலவசமாக டிவி கொடுத்தபோது, தவறு எனப் பேசியவர்கள் பெண்களுக்கு இலவச பட்டப்படிப்புத் திட்டத்தைக் கருணாநிதி அறிமுகம் செய்ததைப் பற்றிப் பாராட்டியதில்லை.

மு. கருணாநிதி செயல்படுத்திய இத் திட்டத்தால் பாலின சமத்துவத்தில் தமிழ்நாடு முன்னோடி மாநிலப் பட்டியலில் இடம்பிடித்தது. இதைப்போன்று 1996 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடும் வழங்கியது மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிதான்.

காமராஜர் ஆட்சிக்காலத்தில் இந்திய அளவில் 7வது இடத்திலிருந்த தொழில்துறை, திமுக ஆட்சிக்காலத்தில் 3வது இடத்துக்கு முன்னேறியது. அப்போது இந்த விமர்சகர்கள் பாராட்டியதில்லை.

 Excellent schemes implemented in DMK regime

இந்தியாவிலேயே பட்டியலின மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப்பட்டதும் திமுக ஆட்சியில்தான். 1971இல் மாபெரும் மாற்றம் திமுக ஆட்சியில் நிகழ்த்தப் பட்டது. அந்த ஆண்டு பஸ் போக்குவரத்தை முழுமையாக தேசியமயமாக்கினார் கருணாநிதி.

இவரது ஆட்சிக்காலத்தில்தான் ஜெமினி சந்திப்பில் 'அண்ணா மேம்பாலம்' கட்டப்பட்டது. அன்றைய மதிப்பீட்டில் இதற்காகச் செலவு செய்ய 49.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்தப் பாலத்திற்கு இப்போதுதான் 50 ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. திமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட ஒரு பாலம் இத்தனை ஆண்டுகளைக் கடந்து பயன்பாட்டிலிருந்து வருவது சாதனையல்லாமல் வேறு என்ன?

 Excellent schemes implemented in DMK regime

இதைப்போலவே கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் திமுகவின் தொலைநோக்கு திட்டங்களுக்கு மிகப்பெரிய சான்று. சொல்லப் போனால் 1996 முதல் 2001 வரையான திமுக ஆட்சியில் ரூ.292 கோடி செலவில் தமிழகம் முழுவதும் 247 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டன.

சென்னையில் உள்ள பெரும்பாலான மேம்பாலங்கள் அன்றைக்கு மேயராக இருந்த ஸ்டாலின் ஆட்சியில் கட்டப்பட்டவை.

நூலக வரலாற்றைப் பொறுத்தவரைக் கன்னிமாரா மட்டும்தான் அடையாளமாக இருந்தது. அது பிரிட்டிஷ் ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை. அதை முறியடிக்கும் விதமாக 'அண்ணா நூற்றாண்டு நூலக'த்தை உருவாக்கினார் கருணாநிதி. அவரைத் தொடர்ந்து இன்று முதல்வர் ஸ்டாலின், 'கலைஞர் நூற்றாண்டு நூலக'த்தை உருவாகி மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார்.

 Excellent schemes implemented in DMK regime

ஒரு கட்சித் தலைவரின் நூற்றாண்டு வெறும் விழாவாக இல்லாமல், அது மக்களின் பயன்பாடு சார்ந்து இருக்க வேண்டும் என்பதில் திமுக கவனமாக உள்ளது. ஆகவேதான் 'கலைஞர்100' வேளையில் கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ரூ. 230 கோடி செலவில் வெறும் 15 மாதங்களில் உருவாக்கித் தந்துள்ளது திமுக அரசு.

புதிய தலைமைச் செயலகம், வள்ளுவர் கோட்டம், குமரியில் வள்ளுவர் சிலை, கடல்நீரைக் குடிநீராக்கும் மையம், செம்மொழி தமிழாய்வு நிறுவனம் என திமுக ஆட்சியில் தமிழகத்திற்குக் கிடைத்த புதிய அடையாளங்கள் அதிகம்.

எல்லா திட்டங்களின் பின்பாகவும் சமூகநீதியும் சமத்துவமும் திமுகவின் இரண்டு கண்கள் இருப்பதைப் பார்க்கலாம். சர் பிட்டி தியாகராயர் நீதிக்கட்சி ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு முதல்முறையாகச் சாப்பாடு போட்டார். கலைஞர் அதில் முட்டையைச் சேர்த்தார். 100 ஆண்டுகளைக் கடந்து திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாக முதலமைச்சராக வந்துள்ள மு.க.ஸ்டாலின் 'காலை உணவுத் திட்ட'த்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்திக் காட்டி இருக்கிறார்.

 Excellent schemes implemented in DMK regime

இவை அனைத்துக்கும் மையம் சமூகநீதி. அப்படித்தான் 1990களுக்குப் பின் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட சாதிக் கலவரங்களால் சோர்ந்துபோன மு.கருணாநிதி, 1997இல் பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற ஒரு முன்னோடித் திட்டத்தைத் தொடங்கினார்.

இன்றுவரை திமுக ஆட்சியில் கருணாநிதி செய்த மாபெரும் திட்டமாக கை ரிக்சா ஒழிப்பு பேசப்பட்டு வருகிறது. இதே மாதிரி 'குடிசை இல்லாத தமிழகம்' என்ற லட்சியத்துடன் குடிசை மாற்றுவாரியாம் தொடங்கப்பட்டது திமுக ஆட்சிக்காலத்தில்தான்.

நில சீர்திருத்தச் சட்டத்தை முன்மொழிந்து நில உச்சவரம்பு என்பது ஒரு நபருக்கு 30 ஏக்கர் என இருந்ததை 15 ஏக்கர் எனக் குறைத்ததும், 1971இல் பேருந்து போக்குவரத்தை முழுமையாக தேசியமயமாக்கியதும் திமுக ஆட்சிதான்.

இப்படிப் பல திட்டங்களை வரிசையாகச் சொல்லலாம். 1966இல் ஒரு சட்டக்கல்லூரிதான் தமிழ்நாட்டிலிருந்தது. திமுக ஆட்சிக்குப் பின்னர் 8 ஆக அதன் எண்ணிக்கை உயர்ந்தது.

அதைப்போன்று ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள் 8 இருந்தன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2010 ஆண்டுக்குள் அவை 645 ஆக உயர்ந்தன.

மு.கருணாநிதியின் தலைமையிலான திமுக ஆட்சியில்தான் காவல்துறையினருக்கு என 3முறை கமிஷன் அமைக்கப்பட்டது. முதல் கமிஷன் ஊழலை ஒழிப்பதற்காக அமைக்கப்பட்டது என்பது பலரும் அறியாதது.

காங்கிரஸ் ஆட்சிக்காலமான 1966வரை தமிழ்நாட்டிலிருந்த அரசுப் பல்கலைக்கழகங்களின் மொத்த எண்ணிக்கை மூன்று. ஒரு தனியார் ஒன்று. அரசுப் பல்கலைக்கழகங்களை 24 ஆக திமுக ஆட்சி உயர்த்திக் காட்டியது. அதேபோல் தனியார் எண்ணிக்கையானது 25 ஆக உயர்ந்தது.

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், 9 அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இயங்கி வந்தன. தனியார் கல்லூரி ஒன்றே ஒன்று மட்டும் இருந்தது. திமுக ஆட்சியில்தான் 'மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி' என்ற குரல் எழுப்பப்பட்டது. அதனால் எம்.பி.பி.எஸ் கல்லூரிகளின் எண்ணிக்கை 2010இல் 17 ஆக உயர்ந்தது. பி.டி.எஸ் மற்றும் செவிலியர் போன்ற மருத்துவக் கல்லூரிகள் 33 பெருகியது.

'பராசக்தி' படத்தில் ஒரு வசனத்தைக் கருணாநிதி எழுதி இருப்பார். 'தமிழ்நாட்டில் விதவைகள் இட்லி சுட்டு விற்பதுதான் தாசில் உத்தியோகம்' என்று. அந்த வசனம் அவர்களின் சோக வாழ்வைக் கண்முன்னே காட்சிப்படுத்தியது.

அந்த நிலைமை நன்கு உணர்ந்த இவர் ஆட்சிக்கு வந்தது 'விதவைகள் மறுவாழ்வுத் திட்ட'த்தைக் கொண்டுவந்தார். இதன் மூலம் மறுமணம் செய்பவர்களுக்கு 1000 ரூபாய் அறிவித்தார். விதவைகளுக்கு இலவச பஸ் பாஸும் வழங்கப்பட்டது திமுக ஆட்சியில்தான்.

இப்படி இட்லியில் தொடங்கி, டைடல் பார்க், மெட்ரோ ரயில் வரை திமுக ஆட்சியால் தமிழ்நாடு பலபல வளர்ச்சிகளை அடைந்துள்ளது உண்மை.

காங்கிரஸ் ஆண்டபோது தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து என்ற ஒன்று இல்லை. எல்லாம் தேசிய கீதம்தான். மு.கருணாநிதிதான் தனது ஆட்சியில் மனோன்மணீயம் சுந்தரனார் எழுதிய 'நீராருங் கடலுடுத்த' பாடலை தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக அறிவித்தார்.

இதற்கு எல்லாம் மகுடமாக திமுக ஆட்சியில்தான் நம் மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' எனப் பெயர் சூட்டப்பட்டது. அதற்காக விட்டுக்கொடுக்காமல் போராடி வென்றார் அண்ணா.

இவை எல்லாம் வெறும் ட்ரெய்லர்தான் மெயின் பிக்ட்சர் இதைவிடப் பெரிசு!

DISCLAIMER:

Please note that this message and any attachments may contain confidential and proprietary material and information and are intended only for the use of the intended recipient(s). If you are not the intended recipient, you are hereby notified that any review, use, disclosure, dissemination, distribution or copying of this message and any attachments is strictly prohibited. If you have received this email in error, please immediately notify the sender and delete this e-mail , whether electronic or printed. Please also note that any views, opinions, conclusions or commitments expressed in this message are those of the individual sender and do not necessarily reflect the views of Ver sé Innovation Pvt Ltd.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+