"அது" எதுக்கு.. "பேஸ்மட்டம்" வீக்காயிட்டு.. படகில் ஜெயக்குமார் செய்த வேலை.. விக்கித்த காசிமேடு.. வாவ்

காசிமேட்டு துறைமுகத்தில் ஜெயக்குமார் படகுகளை ஆய்வு செய்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஜி அமைச்சர் ஜெயக்குமாரின் வீடியோ ஒன்று இணையத்தில் 2 நாட்களாக ஓடிக் கொண்டிருக்கிறது.. இதை அவரது ஆதரவாளர்களே ஷேர் செய்து வருகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை பொறுத்தவரை சீரியஸ் & கலகலப்பு கலந்த மனிதர்.. வெகு இயல்பாக பழகுவார்.. எப்போதுமே கேஷூவல் பேச்சுதான்.. துளியும் அவரிடம் கெத்து இருக்காது..

அதே சமயம் அரசியல் சம்பந்தமான விஷயங்கள் என்றால் பயங்கரமாக சீரியஸ் ஆகிவிடுவார்.. புள்ளி விவரத்துடன் எடுத்து வைத்து பாயின்ட் பாயின்ட்டாக பேசுவார்!

ஹைக்கூ

ஹைக்கூ

அதேபோல, எதையாவது வித்தியாசமாக செய்து கொண்டே இருப்பார்.. தீவிரமான கலைப்பிரியரும்கூட.. திடீரென மைக் பிடித்து பாடுவார்.. திடீரென்று ஹைக்கூ எழுதுவார்.. கிரிக்கெட் விளையாடி, எதிர்டீமை ஓடவிடுவார்.. சைக்கிளிங் செய்வார்.. இப்படித்தான் 4 வருஷத்துக்கு முன்பு சென்னையில், உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒரு டிரோன் டாக்சி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்ததுமே ஆர்வமுடன் ஏறி உட்கார்ந்து கொண்ட ஜெயக்குமார், அதன் கதவையும் சாத்தி கொண்டார்.. ஆனால், அவருக்கு ஓட்ட தெரியவில்லை..

 நடிகர் அஜீத்

நடிகர் அஜீத்

அந்த விமானத்தையே சுற்றுமுற்றும் பார்த்தார்.. பிறகு அந்த விமானம் தயாரிக்கப்பட்ட விதத்தை அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். அப்போதுதான் அந்த டிரோன் நடிகர் அஜீத் தயாரித்தது என்று தெரியவந்தது. உடனே ஜெயக்குமார், "அஜீத் என்ன இவ்வளவு திறமைசாலியா இருக்கிறாரே" என்று ஆச்சரியப்பட்டார். ஜெயக்குமாரின் தேர்தல் பிரச்சாரமும் வித்தியாசமாகவே இருக்கும். மக்களை கவரும் வகையில், பல்வேறு உத்திகளை செய்து வாக்கு கேட்பார்.

 கறிக்கடை

கறிக்கடை

இப்படித்தான் கடந்த தேர்தலின்போது, தன்னுடைய தொகுதியில் ஒரு கடைதெருவில் நடந்து வந்து கொண்டிருந்தார் ஜெயக்குமார்.. அங்கிருந்த ஒரு மட்டன் கடைக்குள் நுழைந்துவிட்டார். உடனே அரிவாளை எடுத்து, மட்டனை துண்டு துண்டாக வெட்டினார்.. ஆனால், அந்த மட்டன் ஏற்கனவே வெட்டப்பட்டுதான் இருந்தது என்பது வேறுவிஷயம்.. கறி வெட்ட வந்த ஜெயக்குமாருக்கு அந்த பகுதியில் உள்ள பெண்கள், ஆரத்தி எடுத்து வரவேற்று வாழ்த்தும் சொன்னார்கள்.

 ஜம்ப் ஜம்ப்

ஜம்ப் ஜம்ப்

இப்போதும் ஒரு சாகசத்தை நம்ம ஜெயக்குமார் செய்துள்ளார்.. சென்னை காசிமேடு துறைமுகத்தில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய போனார் ஜெயக்குமார்.. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உடைந்த படகுகளையும் பார்வையிட்டார்.. துறைமுக பகுதி படகுகளின் சேதாரங்களை பார்வையிட்டு, அத்தோடு திரும்பி வந்துவிடுவார் என்று பார்த்தால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு படகுகளுக்கும் திடீரென ஜம்ப் ஆனார்.. தொங்கி கொண்டிருந்த கயிறுகளை பிடித்துக்கொண்டு, ஒரு படகிலிருந்து இன்னொரு படகிற்கு தாவினார்..

 பேஸ்மட்டம் வீக்

பேஸ்மட்டம் வீக்

"இது ஸ்ட்ராங்", அது எதுக்கு? "இது பேஸ்மட்டம் வீக்கா இருக்கு" என்று கயிறுகளை பிடித்து கொண்டே, வழக்கமான துணிச்சலுடன் படகுக்கு படகு தாவினார்.. ஒவ்வொரு படகிலும் ஜெயக்குமார் ஜம்ப் அடித்ததுமே, அங்கிருந்தவர்கள் "ஹேய்" என்று கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.. யாருடைய உதவியும் இல்லாமல், கைத்தாங்கலாக யாரையுமே பிடிக்காமல், "தனி ஒருவராக", அதிலும் எம்ஜிஆரை போல "ஆயிரத்தில் ஒருவனாகவே" மாறிவிட்டார் ஜெயக்குமார். 10 நிமிஷத்துக்கு எம்ஜிஆரை போல உருவெடுத்த ஜெயக்குமாரின் இந்த வீடியோவைதான் அவரது ஆதரவாளர்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+