Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் உள்ள தங்கும் ஹோட்டல்களில் காலை இலவசமாக வழங்கப்படும் complementary breakfast வழங்கப்படுகிறதா இல்லையா, சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஈரான் போர் எதிரொலியாக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அது போல் சென்னை உள்ளிட்ட இடங்களில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என வதந்தி பரவியதை அடுத்து நேற்று இரவு முதலே பங்க்களுக்கு படையெடுத்த மக்கள் தங்கள் இருசக்கர வாகனம் , நான்கு சக்கர வாகனங்களின் டேங்கை நிரப்பி செல்கிறார்கள்.

Chennai Hotels Face LPG Shortage

பலர் 20 லிட்டர் கேன்களில் கூட வாங்கிச் செல்கிறார்கள். தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சுகள் அதிகரித்ததை அடுத்து பெட்ரோலை கேன்களில் வழங்கக் கூடாது என விதிகள் இருந்தும் 20 லிட்டர் தண்ணீர் கேன்களில் பெட்ரோலை நிரப்பிக் கொண்டு அசால்ட்டாக செல்கிறார்கள்.

மற்றவர்களுக்கு வேண்டுமே உண்மையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் அவர்கள் என்ன செய்வார்கள் என்ற யோசனை கூட இல்லாமல் தனக்கு கிடைத்தால் போதும் என்ற சுயநலமே பலருக்கு ஏற்பட்டுள்ளது.

வணிக சிலிண்டர் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. உணவுகள் குறைக்கப்பட்டுள்ளன. எல்லா வெரைட்டிகளும் வழங்கப்படுவதில்லை. 50-க்கும் மேற்பட்ட வெரைட்டி தோசைகளை வழங்கிய ஹோட்டல்கள் தற்போது இரு வகைகளை மட்டுமே தருகிறார்கள்.

அது போல் தள்ளுவண்டி உணவு கடைகளில் சிலிண்டர் கிடைக்காததால் அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலைமை எல்லாம் இன்னும் 10 நாட்களில் சரியாகும் என சொல்லப்பட்டாலும் அது வரை என்ன செய்வது என்ற கேள்வியே எழுந்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள தங்கும் ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பாக அந்தந்த ஹோட்டல் வட்டாரங்களில் ஒன் இந்தியா சார்பாக பேசினோம்.

அவர்கள் கூறிய கருத்துகளை பார்க்கலாம். ஆழ்வார்பேட்டை அருகே இருக்கும் ஒரு தங்கும் ஹோட்டலில் அந்தந்த பேக்கேஜை பொருத்துதான் காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறதாம். அதனால் தற்போது வரை எந்த சிரமமும் இல்லாமல் இருக்கிறது என்றனர்.

அது போல் கிண்டியில் உள்ள ஒரு ஹோட்டலில் கேட்ட போது அவர்கள் நீண்ட காலமாகவே பெரிய எலக்ட்ரிக் ஸ்டவ்களை பயன்படுத்துகிறார்களாம். அதனால் சிலிண்டர் தட்டுப்பாடெல்லாம் பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை என்றார்கள்.

அது போல் ஈசிஆர் சாலையில் உள்ள ஒரு தங்கும் ஹோட்டலில் கேட்டதற்கு, அவர்கள் அதுகுறித்து எந்த கருத்தையும் கூற முடியாது என தெரிவித்தனர். அது போல் கோயம்பேடு அருகே உள்ள ஒரு ஹோட்டலில் பர்னேஸ் (Furnace) எனும் ஓவனை வைத்து சமாளிக்கிறார்களாம்.

அங்கு உணவு வகைகளை குறைத்துவிட்டனராம். எதையும் அதிக நேரம் கொதிக்க வைக்காமல் அவிக்கும் வகையிலான உணவுகளை பரிமாறுகிறார்களாம். அதிலும் எண்ணெயில் பொரித்த உணவுகள் தற்போது வழங்குவது இல்லை என்கிறார்கள்.

"உணவு குறைப்பால் ஏதேனும் புக்கிங் குறைகிறதா என கேட்ட போது அதெல்லாம் கிடையாது, இன்று கூட நிறைய பேர் புக்கிங் செய்துள்ளனர். நாங்கள் பிரேக்பாஸ்டில் நிறைய மெனுக்கள் இல்லை என்பதை கூறியும் அவர்கள் உங்கள் ஓட்டலில் சேவை நன்றாக இருக்கும், அதனால் உணவு குறித்து கவலையில்லை" என கூறிவிட்டதாக அந்த ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கிறார்கள்.

அதிக மக்கள் வந்து செல்லும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள 3 ஸ்டார் ஹோட்டல்களில் கேட்ட போது காலை உணவு இலவசம் இல்லை. அதற்கு தனியாக கட்டணம் வாங்குகிறோம். எனவே உணவை குறைத்தாலும் உணவே வழங்கவில்லை என்றாலும் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+