டெல்லிக்கு போன ரிப்போர்ட்.. பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் எடப்பாடி.. இவ்வளவு நடந்துருக்கா? பின்னணி
எடப்பாடிக்கு 15 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே வாங்க முடியும் என்று டெல்லி நினைக்கிறது.
சென்னை: எடப்பாடியால் சீட் வாங்க முடியாது என்று டெல்லி நினைக்கிறது என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்து அதிமுக சார்பாக கேஎஸ் தென்னரசு போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன் போட்டியிட்டார். 66575 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி இங்கே மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதில் காங்கிரஸ் 64.6% வாக்குகளை வென்றுள்ளது. அதிமுக வெறும் 25.75% வாக்குகளை மட்டுமே வென்றுள்ளது. 1,10,556 வாக்குகளை பெற்று ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் 43,981 வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
அதிமுகவின் இந்த படுதோல்வி குறித்து மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தந்து பேட்டியில், அதிமுக தோல்வி அடைந்த அணி. அதில் நடக்க வேண்டிய பிரச்சனைகள் எல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன. எடப்பாடியின் ஒற்றை தலைமை வலுவாக இல்லை. அவர் தன்னை நிரூபிக்கவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துவிட்டது. வெள்ளாள கவுண்டர்கள், வன்னியர்கள் பூத் இருக்கும் பகுதிகளில் அதிமுக லீட் எடுக்க முடியவில்லை. ஆனால் வேறுபாடு குறைவாக உள்ளது. பிற ஜாதியினர் இருக்கும் இடங்களில் அதிமுக மிகப்பெரிய அளவில் பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இதன் அர்த்தம் பிற சாதியினர் அதிமுகவை புறக்கணித்து உள்ளனர். அவர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஒற்றை தலைமை
ஒற்றை தலைமை சரியில்லை. எடப்பாடி எங்கள் சாதிக்கு எதிரானவர். அவர் ஒரு ஜாதி தலைவர். அவர் வேண்டாம். அவர் சமூக நீதிக்கு எதிரானவர் என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. எம்ஜிஆர் காலத்தில் இருந்த அதிமுக முடிந்துவிட்டது. அந்த இரட்டை இலை முடிந்துவிட்டது. ஜெயலலிதா காலத்தில் இருந்த இரட்டை இலையும் முடிந்துவிட்டது. தற்போது இருப்பது எடப்பாடி பழனிசாமி காலத்து இரட்டை இலை. இதற்கு வலிமை இல்லை. இதற்கு மக்கள் ஆதரவு இல்லை என்பது தெரிந்துவிட்டது. ஈரோடு கிழக்கு மக்கள் இரட்டை இலையை புறக்கணித்து உள்ளனர்.

அப்செட்
டெல்லி பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருக்கிறது. எடப்பாடியால் சீட் வாங்க முடியாது என்று டெல்லி நினைக்கிறது. எடப்பாடிக்கு 15 சதவிகிதம் வாக்குகள் மட்டுமே வாங்க முடியும் என்று டெல்லி நினைக்கிறது. அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்று அண்ணாமலை இதனால்தான் கூறினார். இதற்கு பதில் அளிக்க முடியாமல் எடப்பாடி இருக்கிறார். இந்த தோல்வி எடப்பாடிக்கு பெரிய வீழ்ச்சி. அவருக்கு சாதி ரீதியான வாக்குகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இந்த ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றுள்ளது. அதாவது ஜாதி வாரியாக எடப்பாடிக்கு ஆதரவு இல்லை என்ற ரிப்போர்ட் டெல்லிக்கு சென்றுள்ளது.

மாற்று சாதியினர்
மாற்று சாதியினர் எடப்பாடிக்கு வாக்களிக்கவில்லை. கொங்கு வேளாள கவுண்டர்களிலேயே பெரும் பகுதியினர் எடப்பாடிக்கு எதிராக செந்தில் பாலாஜி ஆதரவால் திமுகவிற்கு வாக்களித்து உள்ளனர் என்று ரிப்போர்ட் சென்றுள்ளது. இப்போது பாஜக எடப்பாடி மீது அப்செட்டில் இருக்க காரணம் இதுதான். இவருக்கு பெரிய மரியாதை கொடுக்க வேண்டுமா என்று டெல்லி நினைக்கிறது. அதிமுகவில் நிர்மல் இணைந்து இருக்கலாம். ஆனாலும் எடப்பாடிக்கு பவர் இல்லை. அவரிடம் தலைமைக்கான பவர் இல்லை. இரட்டை தலைமையால் அதிமுக வரிசையாக பல தொகுதிகளில் நன்றாக போட்டியிட்டது. ஆனால் இப்போது எடப்பாடி தனியாக இருந்து பின்னடைவை சந்தித்து உள்ளார், என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications