அடிதூள்.. அப்படி போடு.. புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இப்படித்தான் இருக்குமா? மாஸ் போட்டோஸ்
சென்னை: சென்னையில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் போட்டோஸ் வெளியாகி உள்ளன. இந்த பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன.
பேருந்து நிலையத்தின் பணிகளில் 99 சதவிகிதம் முடிந்துள்ளது. விரைவில் பேருந்து மக்களுக்காக திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேருந்து நிலையத்தின் தேவை: சென்னைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் பேர் வருகிறார்கள். அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றனர்.பொதுவாக இந்த பேருந்துகள் இரண்டு - மூன்று ரூட்களை பயன்படுவது வழக்கும். பெருங்களத்தூர் வழியாக கிண்டி, வடபழனி என்று வருவது ஒரு வகை.
இரண்டாவது ஓஎம்ஆர் வழியாக கிண்டி, வடபழனி வழியாக கோயம்பேடு வருவது இன்னொரு பக்கம். கடைசியாக சில பேருந்துகள் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பெருங்களத்தூர், மதுரவாயல் வழியாக செல்லும். இதனால் வடபழனி, கிண்டி செல்ல விரும்பும் பயணிகள் நேரடியாக செல்ல முடியாமல் கோயம்பேட்டில் இறங்கி செல்ல வேண்டி இருக்கும். கோயம்பேட்டில் இறங்கி மெட்ரோவிலோ அல்லது ஆட்டோ, பஸ்ஸிலோ செல்ல வேண்டி இருக்கும்.
பயணிகள் வசதி: இந்த நிலையில் பயணிகள் எளிதாக சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இறுதிக்கட்ட பணிகளை நெருங்கி உள்ளது. அடுத்த மாதம் இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல்வேறு காரணங்களுக்காக தாமதம் ஆனது.
எடப்பாடி ஆட்சி காலத்தில் தாமதம் ஏற்பட்டது. அதன்பின் கொரோனா காரணமாக தாமதம் ஏற்பட்டது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தது இந்த பேருந்து நிலையம் முறையான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டது உறுதி செய்யபட்டது. முக்கியமாக பேருந்து நிலையம் உள்ளேயே தண்ணீர் தேங்கும் பிரச்சனைகள் இருப்பதும் கண்டுபிடிப்பட்டது.
Glimpses of the upcoming Kilambakkam Bus Terminal in Chennai. Interior looks fantastic..
— Chennai Updates (@UpdatesChennai) August 11, 2023
Govt is trying to emulate airport like experience and maintenance is likely to be outsourced to private players.. #Chennai #Infra (Via @News18TamilNadu) 😍 pic.twitter.com/fEsYmPzvg6
இந்த பேருந்து நிலையம் கொஞ்சம் கூட திட்டமிடல் இன்றி கட்டப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர் பாபுவும் சரமாரி குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் பேருந்து நிலையத்தை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
போட்டோஸ்: சென்னையில் கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் போட்டோஸ் வெளியாகி உள்ளன. இந்த பேருந்து நிலையத்தின் கட்டமான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளன. இரண்டு மாடிகள் கொண்ட இந்த பேருந்து நிலையம் விமான நிலையத்திற்கு இணையாக கட்டப்பட்டு உள்ளது.
ஆட்டோமேட்டிக் டோர், லிப்ட், நகரும் படிக்கட்டுகள், நகரும் பாதை, ஏசி என்று தரமான வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. உலக தரத்தில் கட்டப்பட்டு உள்ள இந்த பேருந்து நிலையத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
முக்கிய செய்தி: இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான முக்கியமான செய்தி ஒன்று அரசு தரப்பு வட்டாரங்கள் மூலம் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இதன் 99 சதவிகித பணிகள் முடிந்துவிட்டன. அடுத்த 2 மாதங்களுக்குள் பேருந்து நிலையம் கண்டிப்பாக திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால் அதற்கு முன் இந்த மாதமே சோதனை ஓட்டமாக 2-3 மாவட்டங்களுக்கு மட்டும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் 10 - 15 மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும். அதற்கு அடுத்த மாதம் முழுமையாக பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications