அடிக்க வந்தாங்க.. ரோகிணியில் துணிச்சலாக தட்டிக்கேட்ட "ஹீரோ".. பரபர பேட்டி.. நடந்தது என்ன? EXCLUSIVE

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை உள்ளே அனுப்ப சொல்லி போராட்டம் செய்த இளைஞர் அங்கே என்ன நடந்தது என்பதை விளக்கி உள்ளார். ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கும் அவர் இது தொடர்பாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார்.

ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்களை அனுமதிக்காத விவகாரம் தேசிய அளவில் இப்போது சர்ச்சையாகியுள்ளது. அங்கே பத்து தல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை டிக்கெட் இருந்தும் அனுமதிக்காமல் தடுத்துள்ளனர். இந்த வீடியோ சர்ச்சையானது .

இதற்கு முன்பும் கூட இதேபோல தியேட்டர் நிர்வாகம் தங்களை அனுமதிக்க மறுத்ததாக நரிக்குறவ மக்கள் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதோடு அவர்கள் மோசமாக நடத்தப்பட்டதாகவும் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு முறையும் இப்படிதான் நடக்கிறது. எங்களை மோசமாக அவர்கள் திட்டி அனுப்புகிறார்கள் என்று நரிக்குறவ மக்கள் தெரிவித்துள்ளனர்.

விளக்கம்

விளக்கம்

அங்கே இருந்த இளைஞர் ஒருவர்தான் இதை தட்டிக்கேட்டுள்ளார். அவர் பேசி, இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த பின்புதான் இந்த விவகாரம் பெரிதானது. இதையடுத்து தியேட்டரின் மேனேஜர் நிகிலேஷ் தலையிட்டு படம் தொடங்கும் முன் அவர்களை படம் பார்க்க வைத்துள்ளார். இதற்கான வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அதே சமயம் பத்து தல திரைப்படம் யு/ஏ சான்றிதழ் பெற்ற காரணத்தால் சிறுவர்களுடன் வந்தவர்களை பார்க்க அனுமதிக்கவில்லை என்று ரோகிணி தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த நிலையில் ரோகிணி தியேட்டரில் நரிக்குறவர்களை உள்ளே அனுப்ப சொல்லி போராட்டம் செய்த இளைஞர் அங்கே என்ன நடந்தது என்பதை விளக்கி உள்ளார்.

பேட்டி

பேட்டி

ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கும் அவர் இது தொடர்பாக சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் பப்ளிக் பைட் எடுக்க போனோம். அப்போதுதான் இவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். அவர்கள் டிக்கெட் காட்டிய போதும் உள்ளே விடவில்லை. மாறாக அவர்களை அடிக்க வந்தனர். நாங்கள் ஏன் ப்ரோ உள்ளே விடுவதில்லை.. உள்ளே விடுங்கள் என்று கூறினோம். ஆனால் அவர்களை அடித்து துரத்த பார்த்தார்கள். அவரிடம் கேட்ட போது உள்ளே போனால் இவர்கள் எச்சில் துப்புவார்கள், பொருட்கள் விற்பார்கள், காசு கேட்பார்கள் என்றார்கள். அதன்பின்தான் வீடியோ எடுத்தேன். அதன்பின் அந்த பெண்ணிடம்.. நீங்கள் உள்ளே போய் அப்படி செய்வீர்களா என்று கேட்டேன்.

பெண்

பெண்

அதற்கு அந்த பெண் அதெல்லாம் செய்ய மாட்டோம் பா என்றனர். உடனே அந்த செக்யுரிட்டி கோபம் அடைந்து.. நீ என்ன அந்த பொண்ணுகிட்ட கேட்குற? நீ போய் உள்ளே பார்த்துப்பியா? நீ என்ன நடக்குதுன்னு பார்பியா என்று என்னிடம் கத்தினார். அதன்பின்தான் நான் டிக்கெட் இருக்கு.. உள்ளே விடுங்க என்று கூறினேன். அதன்பின் அங்கே இருக்கும் பெரிய மீடியாக்களிடம் கூறி தட்டி கேட்க கூறினேன். அதன்பின்தான் அவர்களை உள்ளே விட்டார்கள்.

 என்ன நடந்தது?

என்ன நடந்தது?

அவர்களின் தோற்றத்தை பார்த்து உள்ளே விடவில்லை. காசுக்காக அவர்களை தடுக்கவில்லை. கேஸ்டிற்காக தடுத்துள்ளனர். சினிமா பார்க்க காசு தேவை, டிக்கெட் தேவை. அது இருக்கும் போது எப்படி தடுக்கலாம். முதல்வர் ஸ்டாலின் நரிக்குறவர்கள் வீட்டில் சென்று சாப்பிடுகிறார். அப்படி இருக்கும் போது இப்படி எல்லாம் செய்கிறார்கள். இதெல்லாம் கொடுமை. சமூகம் மாற வேண்டும். இவர்களின் மனநிலை மாற வேண்டும். அந்த தீண்டாமைக்கு இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

கொடுமை

கொடுமை

தியேட்டருக்கு உள்ளே விட்டோம் என்று கூறுகிறார்கள். அவர்கள் உள்ளே விட்டது பெரிய விஷயம் இல்லை. அவர்களை தடுத்ததற்கு மன்னிப்பு கேட்கவில்லை. அந்த தீண்டாமைக்கு மன்னிப்பு கேட்கவில்லை. அதை மாற்ற வேண்டும். இத்தனை காலமாக அவர்களை உள்ளே விடவில்லை. இப்போது வெளியே வந்து இருக்கிறது. இதற்கு மன்னிப்பும் கேட்கவில்லை. இனிமேல் இப்படி நடக்காது என்றும் அவர்கள் சொல்லவில்லை. இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் நாங்கள் உள்ளே விட்டோம் என்ற தொனியில் வீடியோ வெளியிட்டு உள்ளனர்.அதுவே பெரிய தீண்டாமைதான், என்று அந்த இளைஞர் பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+