உதயநிதியிடம் விஜய் மண்டியிட்ட கதை தெரியுமா.. திருச்சி சூர்யா திகுதிகு சிறப்பு பேட்டி!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் பேசிய பேச்சு அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. விஜய், திமுகவை நேரடியாக எதிர்க்கத் தொடங்கியுள்ள நிலையில் நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் திருச்சி சூர்யா.
சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். கட்சியின் கொடி, கொடிப்பாடலை சமீபத்தில் விஜய் வெளியிட்டார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விக்கிரவாண்டி அருகே நடைபெற்றது. தவெகவின் கொள்கைகள், அக்கட்சியின் செயல் திட்டங்கள் இந்த மாநாட்டில் விளக்கப்பட்டன. இந்த மாநாட்டில், திமுகவை தமது அரசியல் எதிரி எனக் குறிப்பிட்டார் விஜய்.

திமுகவை விமர்சித்து விஜய் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இதுபற்றி நமது ஒன் இந்தியாவுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் திமுக எம்.பி திருச்சி சிவாவின் மகனும், முன்னாள் பாஜக மாநில நிர்வாகியுமான திருச்சி சூர்யா.
திருச்சி சூர்யா பேட்டி: "புதிதாக கட்சி ஆரம்பிக்கும்போது கவனத்தை ஈர்க்க வேண்டுமென்றால் ஆளுங்கட்சியை விமர்சிக்க வேண்டும். அதற்காகவே திமுகவை விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு குடும்பம் மக்களைச் சுரண்டி ஊழல் செய்கிறது என்கிறார். அதேசமயம், அதிமுகவில் முதலமைச்சராக இருந்தவரே ஊழல் வழக்கில் சிறைக்குச் சென்றவர். எடப்பாடி பழனிசாமி உட்பட அனைத்து முன்னாள் அமைச்சர்கள் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. ஆனால், ஊழலில் அதிமுகவை தொடவே இல்லை.
விஜய் தெளிவற்ற நிலையில் இருப்பதாக எச்.ராஜா சொல்கிறார். அதுதான் உண்மையும் கூட. பெரியார் சிலைக்கு கீழேயே மாநாட்டின்போது மழை வந்துவிடக்கூடாது என வேண்டி விளக்கேற்றி வைக்கிறார்கள். இது மூடநம்பிக்கை இல்லையா? அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் என தலைவர்களை முன்வைப்பதற்கு பின்னணியிலும் சாதி அரசியல் இருக்கிறது.

ஜீரோ தான்: மாநாட்டிற்கு கூடிய கும்பலை வைத்து பார்த்தால் மாநாடு சக்சஸ் தான். ஆனால், அவர் பேச்சு, சித்தாந்தம், வந்த தொண்டர்களை எப்படி பார்த்துக்கொண்டார் என பார்த்தால் '0' தான். எஸ்.ஏ சந்திரசேகர் சார்ந்த ஜாதியை சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், தவெக பொதுச் செயலாளராக இருக்கிறார். தவெக கட்சியின் பொருளாளர், விஜய்யின் ஆடிட்டர்.
தொண்டர்களுக்கு தேவையானதை செய்தாரா விஜய்?: எல்லா மக்களுக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் எனப் பேசும் விஜய், மாநாட்டுக்கு வந்த தொண்டர்களுக்கு குடிநீரை ஒழுங்காக கொடுத்தாரா? கழிப்பறைக்கு பயன்படுத்தும் நீரை பயன்படுத்தினர். மேடைப் பேச்சுக்கு எதையாவது சும்மா பேசலாமா? விஜய், சினிமாவில் வாங்கும் சம்பளத்தில் பாதி கறுப்புப் பணம் தான். ஊழலைப் பற்றி பேச தார்மீக உரிமை இருக்கிறதா? ஆட்சி அமைத்து முதல்வர் ஆனால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என அரசியலுக்கு வந்திருக்கிறார் விஜய்.
அதிகாரத்திடம் பணிந்து காரியத்தை சாதித்துக் கொண்டார்: ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தலைவா படத்துக்கு 'Time to lead' என கேப்ஷன் போட்டதால் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கப்பட்டது. விஜய்யும், எஸ்.ஏ சந்திரசேகரும் கோடநாட்டுக்கு போய் ஜெயலலிதா முன்பாக பவ்யமாக நின்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, கொரோனா காலகட்டத்தில் 50% சீட் என்ற நிலை இருந்ததால் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தார். அதிகாரத்தில் இருந்தவர்களிடம் தனது தேவைக்காக போய் மண்டியிட்டார்.
அதன்பிறகு, உதயநிதி ஸ்டாலினிடம் போய் நின்றார். 5 மாவட்டங்களில் தனது படத்திற்கு ஸ்கிரீன் கிடைக்கவில்லை என, உதயநிதி ஸ்டாலினிடம் போய் நின்றார். தனது படம் ஓடவேண்டும், வேலை நடக்கவேண்டும் என்பதற்காகவே போய் அதிகாரத்திடம் பணிந்து நின்றார். இப்போது உதயநிதியையே விமர்சிக்கிறார்.
விஜய்க்கு பதவி ஆசை: விஜய் இத்தனை கோடி சம்பளம் வாங்கி வருகிறார். தனது பணத்தில் மக்களுக்கு உதவி செய்திருக்கிறாரா? அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் வந்தபிறகு தான் மக்களைச் சந்தித்து நலத்திட்ட உதவி செய்கிறார், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறார்? அதற்கு முன்பு அவரிடம் பணம் இல்லையா? எந்த பொது பிரச்சனைக்காவது வெளியில் வந்திருக்கிறாரா?
மக்களுக்கு உதவி செய்யவே முதலமைச்சராக வருவாராம். அவருக்கு பதவி ஆசை. மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்றால் அரசியலுக்கு வந்துதான் ஆகவேண்டுமா? எவ்வளவோ பேர் அரசியலில் இல்லாமல் மக்களுக்கு தொண்டு செய்கிறார்கள். ஆனால், இவர் உதவி செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சராக வந்துதான் செய்வேன் என்கிறார். இவ்வாறு திருச்சி சூர்யா கூறியுள்ளார்.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
இன்னும் 2 வாரங்களில் வெள்ளை அறிக்கை.. ஜூலையில் கூடும் சட்டசபை? பட்ஜெட்டில் என்ன அறிவிப்புகள் வரும்?












Click it and Unblock the Notifications