பிரான்ஸ் பற்றி எரிய நிறவெறி தாக்குதல் காரணமா? உள்நாட்டு போர் வர வாய்ப்பு! தமிழரின் களநிலவரம்
சென்னை: பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கலவரத்திற்கு என்ன காரணம் என்பதை அங்கிருந்தபடியே பிரான்ஸ் வாழ் தமிழர் ஒருவர் நமக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பிரான்ஸ் வாழ் தமிழர் ரவீந்திரன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
போதை பொருள் விற்பனை செய்யும் வேலை பார்க்கும் 17 வயது இளைஞர் வாடகை காரில் செல்லும் போது போலீஸார் அவரை நிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார்.

எனினும் போலீஸார் அவரை துரத்தி சென்று பிடித்தனர். அப்போது அந்த இளைஞர் கையில் துப்பாக்கி வைத்திருந்தார். அதற்கான லைசன்ஸை கேட்ட போது அவர் காண்பிக்கவில்லை. இதனால் அவரிடம் லைசன்ஸ் இல்லை என்பதை போலீஸார் உணர்ந்தனர். அப்போது அந்த துப்பாக்கியை காட்டி அந்த இளைஞர் தப்பியோட முயற்சித்தார்.
உடனே போலீஸார் பாதுகாப்புக்காக அந்த நபரை சுட்டனர். மற்றபடி இதில் நிறவெறி தாக்குதல் எல்லாம் இல்லை. இது தான் சாக்கு என கருதிய மக்கள் இதை நிறவெறி தாக்குதலாகவே சித்தரித்துவிட்டனர். இந்திய மீடியாக்களும் யூடியூப்களும் இதை நிறவெறி தாக்குதல் என்றே கூறின. இதனால் கலவரம் வெடித்த நிலையில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் தெரியுமா?
பெரிய பெரிய கடைகள் சூறையாடப்பட்டன. கொள்ளையடிக்கப்பட்டன. புதிய கார்களை உடைத்து நாசம் செய்துள்ளனர். இது போன்ற கலவரம் வேறு நாட்டில் நடந்திருந்தால் போலீஸார் துப்பாக்கிச் சூடு கொண்டு ஒடுக்கியிருப்பர். ஆனால் பிரான்ஸ் போலீஸாரோ அமைதியான முறையில் இந்த கலவரத்தை ஒடுக்கலாம் என நினைக்கிறார்கள்.
144 உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆனால் இந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டை இனவாதம் என திசை திருப்பியதால்தான் நான் உங்களுக்கு தெளிவுப்படுத்த வந்துள்ளேன். பிரான்ஸில் நிறைய பாலிடிக்ஸ் இருக்கிறது. போதை பொருள் விற்பனை செய்த இளைஞர் வேறு நாட்டவர் இல்லை, பிரான்ஸ்தான், அவருடைய மூதாதையர்கள் வேறு நாடாக இருக்கலாம். ஆனால் அவருடைய ஜாதி, அவரது நாடு உள்ளிட்டவைகளை வைத்து இதை சிலர் அரசியலாக்குகிறார்கள்.
அந்த 17 வயது பையனுக்கு தந்தை இல்லை, தாய் மட்டுமே இருக்கிறார். அந்த தாய்க்கு இந்த பையன் ஒரு போதை பொருள் விற்பனையாளர் என்பது தெரியும். அவர் மீது நிறைய வழக்குகள் இருப்பதும் தெரியும். இந்த சிறுவனை விட வயதில் பெரியவர்கள் எல்லாம் போதை பொருட்களை கடத்துகிறார்கள். ஆனால் அன்றைய தினம் அந்த இளைஞர் போலீஸிடம் சிக்கியுள்ளார்.

அதற்காக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு சரி என்றும் சொல்ல முடியாது. பிரான்ஸில் இந்த விஷயம் அரசியலாக்கப்படுவதால் அந்த நாடே பற்றி எரியும் அளவுக்கு செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் 13 வயது முதலே போதை பொருளை பயன்படுத்துவார்கள். இறந்த இளைஞருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் நிறுத்தி கொள்ளாமல் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போதை பொருள் சாப்பிடுவோர் எல்லாம் கலவரம் செய்து கொள்ளையடித்து வருகிறார்கள்.
இந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ்காரர் சிறையில் இருக்கிறார். அதனால் போலீஸாரும் கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள். பிரான்ஸ் அரசு ஆணை பிறப்பித்தால்தான் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள். ஏற்கெனவே ஒரு விஷயம் பெரிதாக்கி பிரச்சினையாகிவிட்டது. எனவே அவ்வளவு எளிதில் ஆர்டர் கொடுக்க மாட்டார்கள்.
ஏற்கெனவே பிரான்ஸில் நிறவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் இந்த போராட்டம் ஏற்படவில்லை. இது திசை திருப்பப்பட்டுள்ளது. பாரீஸில் 70 சதவீதம் அனைத்து நாடுகளை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். பிரான்ஸில் நிறவெறி தாக்குதல் நடக்கலாம் . நான் இல்லை என சொல்ல மாட்டேன். ஆனால் இந்த குறிப்பிட்ட விஷயம் நிறவெறித் தாக்குதல் இல்லை. மக்களுக்கு என்ன கோபம் என்றால் பேருந்தை கொளுத்தி போராட்டம் நடத்துகிறார்கள், அவர்கள் மீது எந்த ஆக்ஷனும் எடுக்கவில்லையே என்பதுதான்.
மாநகராட்சி அலுவலகம், மேயர் வீடு ஆகியவற்றையும் கொளுத்திவிட்டார்கள். ஆட்சியாளருக்கு தைரியம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கலவரத்தின் போது அவர்களை ஒடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பயந்தால் இது போல் மீண்டும் மீண்டும் கலவரம் நடக்கத்தான் செய்யும். இவர்களின் கலவரத்தால் நிறைய மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள்.
பிரான்ஸிலேயே பிறந்து வளர்ந்தவர்களின் கடைகள், வீடுகளை இறந்த இளைஞரின் குடும்பத்தினர் சூறையாடுகிறார்கள். அப்போது இது நிறவெறித் தாக்குதல் இல்லையா? இதனால் உள்நாட்டு போர் நடக்க வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. தற்போது பிரான்ஸில் 144 போட்டுள்ளதால் போராட்டம் ஓரளவு கட்டுக்குள் இருக்கிறது. அரசுக்கு நிறைய இழப்பு ஏற்பட்டுள்ளது. பிரான்ஸில் நிறவெறித் தாக்குதல் நடப்பதால் யாரும் பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications