Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்னை விவசாயிகள் கவனத்திற்கு! கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செப்.30 வரை நீட்டிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்னை விவசாயிகளின் நலனுக்காக கொப்பரைத் தேங்காய் கொள்முதலை செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, பந்து கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ 110-க்கும், அரவை கொப்பரைத் தேங்காய் கிலோ ரூ.105.90க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

லாபகரமான விலை

லாபகரமான விலை

தமிழ்நாட்டில் விவசாயிகள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்காக மாநில அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென்னை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் பந்து கொப்பரை, அரவை கொப்பரைகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்திட, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்தது.

கொள்முதல் விபரம்

கொள்முதல் விபரம்

நடப்பு ஆண்டில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சூலை 31 ஆம் தேதி வரை கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாமக்கல், தருமபுரி, திருவாரூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், சிவகங்கை போன்ற 21 மாவட்டங்களில் 12,300 தென்னை விவசாயிகளிடமிருந்து நேரடியாக 14,800 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டது.

காலம் நீட்டிப்பு

காலம் நீட்டிப்பு

விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ், ஆறு மாதங்களுக்கு மட்டுமே கொள்முதல் மேற்கொள்ளப்பட்டதால், சூலை 31 ஆம் தேதிக்குப்பின் வெளிமார்க்கெட்டில் கொப்பரைத் தேங்காயின் விலை கணிசமாகக் குறைந்தது. தமிழக தென்னை விவசாயிகளுக்கு இலாபகரமான விலை கிடைக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான கால அளவினை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசிற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்தது.

கொப்பரைத் தேங்காய்

கொப்பரைத் தேங்காய்

தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று, 26.08.2022 அன்று, ஒன்றிய அரசு கொப்பரைத் தேங்காய் கொள்முதலை எதிர்வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டித்து, ஆணை வழங்கியுள்ளது. உடனடியாக, மேற்காணும் 21 மாவட்டங்களிலுள்ள 46 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொப்பரைத் தேங்காயினை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதலைத் தொடர்வதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு மேற்காணும் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

என்னென்ன தேவை?

என்னென்ன தேவை?

கொப்பரைத் தேங்காய் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை மற்றும் வங்கிக் கணக்குப் புத்தக நகல்களுடன் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து, அரசு நிர்ணயித்துள்ள தரத்திற்கேற்ப, நன்கு உலர வைத்து, சுத்தமான கொப்பரைகளை தரம்பிரித்து கொள்முதலுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

என்ன விலை?

என்ன விலை?

ஒன்றிய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின்படி, பந்து கொப்பரைத் தேங்காய் கிலோவுக்கு ரூ 110/-க்கும், அரவை கொப்பரைத் தேங்காய் கிலோவுக்கு ரூ.105.90/-க்கும் கொள்முதல் செய்யப்படும். கொப்பரைத் தேங்காய்க்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மூலம் அனுப்பி வைக்கப்படும். தற்போது, வெளிச் சந்தையில் கொப்பரைத் தேங்காய்க்கும், தேங்காய்க்குமான விலை குறைந்துள்ளதால், தென்னை விவசாயிகள் அனைவரும் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+