அமாவாசை முடிந்து வளர்பிறை சுபமுகூர்த்தம்! நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள்
சென்னை: ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த நாளான நாளை பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும் என்பதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுபமுகூர்த்த தினங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் புதிய முன்பதிவுகள் அதிகம் நடைபெறும். அந்த வகையில் புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாத சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஐப்பசி மாத முகூர்த்த நாட்கள் வரும் 24 ஆம் தேதி (நாளை) மற்றும் 27ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் என்பதால் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் நிலையில் தற்போது 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அது போல் 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் அதிக பத்திரப்பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு கூடுதலாக சாதாரண மற்றும் தட்கல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை பதிவுத் துறை செயலாளர் தினேஷ் பொன்ராஜ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications