அமாவாசைக்கு பிறகு வரும் 3ஆவது முகூர்த்த நாள்! பத்திரப் பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
சென்னை: முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கான பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதும் ஆன்லைன் முறையில் உட்செலுத்த வேண்டும். இதில் ஆரம்ப கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் பதிவுக்கான நேரம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

அந்த நேரத்துடன் வரிசை எண் அடங்கிய டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி 100 டோக்கன்களும் அதிக பத்திரங்கள் பதிவாகும் இடங்களில் 200 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
முகூர்த்த நாட்களில் மக்கள் அதிக எண்ணிக்கை பத்திரப் பதிவுக்கு வருகை தருவர் என்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயமாகும். இதை கருத்தில் கொண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் கூடுதலாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில் இன்று முகூர்த்த தினம் என்பதால் கூடுதலாக டோக்கன்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சார் பதிவாளர் இருக்கும் அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்களை விநியோகம் செய்ய வேண்டும். அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போல் 12 தட்கல் முன் பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும். இதற்கான உத்தரவை பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.
கடந்த முறை ஆடி 18 இன் போதும் டோக்கன்கள் அதிக அளவு வழங்கப்பட்டது. அன்று செய்யும் காரியங்கள் பெருகும் என்பதால் மக்கள் இது போன்று ஒரு நல்ல நாட்களில் புது விஷயங்களை செய்து வருகிறார்கள். அது போல் ஆவணி மாதத்திலும் முகூர்த்த தினத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அது போல் இந்த கார்த்திகை மாதத்தில் இன்று 2 ஆவது முகூர்த்த நாள், அமாவாசைக்கு பிறகு 3 ஆவது முகூர்த்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications