வந்தாச்சு புது திட்டம்.. தமிழக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்க கண் கருவிழி பதிவு.. சிறப்பம்சம் என்ன?
சென்னை: கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் அட்டைதாரரை அடையாளம் காணும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. கண் கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி, உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தனர்.
ஆதார் காட்டுடன் ரேசன் கடைகள் இணைக்கப்பட்ட பின்னர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சில பல சிக்கல் ஏற்பட்டு வரும் காரணத்தால், மற்ற மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் கருவிழி பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ரேசன் கடைகள்
தமிழகத்தில் மானிய விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. சில நேரங்களில் ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படும் குற்றச்சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போலி ரேசன்கார்டுகள்
இந்த பொது விநியோகம் கணினி மயமாக்கப்பட்ட பிறகு, முன்பிருந்த பேப்பர் குடும்ப அட்டைகள் மாற்றப்பட்டு அனைவருக்கும் ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து, நியாய விலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தின் உதவியோடு முதற்கட்ட நடவடிக்கையாக பயோமெட்ரிக் முறை அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்பட்டது

பயோடெட்ரிக் முறை
இந்த பயோமெட்ரிக் முறையில் உணவு பொருட்கள் அனைத்தையும் ரேஷன் கார்டுதாரர்கள் கைரேகை பதிவு செய்த பிறகு தான் விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோகம் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.

தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள்
இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு சென்று சேருவது உறுதி செய்யப்படுகிறது.அதே நேரத்தில் இந்த முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதுடன் தேவையற்ற சிக்கல் உருவாகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கண் கருவிழி பதிவு
பல நாட்களாக விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இதைப் பலமுறை சரி செய்தும் இந்தக் பிரச்சனை தீரவில்லை. எனவே, விரல் ரேகை மின்னணு பதிவேட்டிற்கு பதிலாக கருவிழி பதிவு மூலம் ரேஷன் பொருட்களைப் பெறும் முறை தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் திருவல்லிக்கேணி ரேஷன் கடைகளில் முதல் முறையாக இன்று கருவிழி அடையாள முறை மூலம் பொருள்கள் விநியோகம் தொடங்கப்பட்டது. சோதனை முயற்சியாக இந்த திட்டத்தை அமைச்சர் சக்கரபாணி மற்றும் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இன்று தொடக்கி வைத்தனர்.

ஆதார் உடன் ரேசன் கார்டு இணைப்பு
ஸ்மார்ட் குடும்ப அட்டையுடன் ஆதார் இணைப்பு இருப்பதால், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இது ஏற்கனவே அமல்படுத்தபட்டுள்ளது. இதற்காக தனியாக கண் கருவிழி பதிவு புதுப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் சக்கரபாணி கூறியுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்று ஏற்பாடு
மாற்றுத் திறனாளிகள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் போன்ற ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வர முடியாதவர்களுக்கு பதிலாக சம்பந்தப்பட்ட நபர் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்களை பொருட்கள் வாங்கச்செய்ய, அந்த நபரின் பெயரை ரேஷன் கடையில் அதற்கென உள்ள படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications