மெட்ரோ ரயிலில் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம்.. ரயில் நிலையங்களில் நுழையவும் மாஸ்க் கட்டாயம்
சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
சென்னை: மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம் அணிந்து வர வேண்டும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக உயர்ந்து வருகிறது... அந்தவகையில் நேற்றைய தினம், ஒருநாள் கொரோனா பாதிப்பு 2,662ல் இருந்து 2,743 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 16,765 லிருந்து 17,717ஆக உயர்ந்துள்ளது... சென்னையில் ஒருநாள் கொரோனா தொற்று பாதிப்பு 1,060ல் இருந்து 1,062 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 38 ஆயிரத்து 27 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

மாஸ்க் கட்டாயம்
எனவே தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அதன்படி, பொதுமக்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.. குறிப்பாக, சென்னையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.. நேற்று, சென்னை மாநகராட்சி வெளியிட்டிருந்த உத்தரவில், பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவித்தது...

தடுப்பூசி
பேருந்துகளில் பயணிகள் முகக்கவசம் அணிவதை நடத்துனர் உறுதி செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. மேலும், சென்னை மாநகராட்சி பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளும் இன்று முதல் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளது..

மாஸ்க் கட்டாயம்
அந்த அறிக்கை இதுதான்: "சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் இன்று முதல் முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டும். எனவே சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும்.

ஒத்துழைப்பு
கொரோனா தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் சரியாக முகக்கவசம் அணிந்து பயணம் செய்து சென்னை மெட்ரோ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications