பஹல்காம் தாக்குதல்.. அடப் பாவிகளா! இதுலயும் கூடவா மோசடி பண்ணுவீங்க.. உஷாரா இருங்க மக்களே!
சென்னை: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக ராணுவத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உதவ வேண்டும் என ஒரு சில வங்கிக் கணக்கு விவரங்களுடன் மோசடி நபர்கள் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உள்ளூர் நபர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும்பணி நடைபெற்று வரும் நிலையில் இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது.
தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழலும் உருவாகி இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க ராணுவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உதவ வேண்டும் என ஒரு சில நபர்கள் சமூக வலைதளங்களில் போலி செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

நடிகர் அக்ஷய் குமார் இதனை பரிந்துரைத்ததாகவும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டதாக கூறி சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது," நடிகர் அக்ஷய் குமார் பரிந்துரைத்த மோடி அரசின் மற்றொரு நல்ல முடிவு: ஒரு நாளைக்கு ஒரு ரூபாய், அதுவும் இந்திய ராணுவத்துக்கு. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், இந்திய ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் போர் பகுதியில் காயம் அல்லது வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு வங்கிக் கணக்கை மோடி அரசு துவக்கியது. இதில் ஒவ்வொரு இந்தியரும் அவரவர் விருப்பப்படி எந்த தொகையையும் பங்களிக்கலாம். இது ரூ.1ல் தொடங்குகிறது மற்றும் வரம்பற்றது.
இந்தப் பணம் ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்கவும் பயன்படுத்தப்படும். புதுடில்லி, *மன் கி பாத், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸ்அப்பில் மக்கள் பரிந்துரைத்தபடி, இன்றைய எரியும் சூழ்நிலையில் மோடி அரசு இறுதியாக ஒரு முடிவெடுத்து, ***** வங்கியில் ராணுவ நல நிதி போர் விபத்து நிதிக் கணக்கைத் திறந்தது.
இது திரைப்பட நடிகர் அக்ஷய் குமாரின் மாஸ்டர் ஸ்ட்ரோக். இந்தியா வல்லரசாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது. இந்தியாவின் 130 கோடி மக்கள் தொகையில் 70% பேர் கூட இந்த நிதியில் தினமும் ஒரு ரூபாயை முதலீடு செய்தால், அந்த ஒரு ரூபாய் ஒரு நாளைக்கு 100 கோடியாக மாறும். 30 நாட்களில் 3000 கோடிகள், ஒரு வருடத்தில் 36000 கோடிகள். பாகிஸ்தானின் ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.36,000 கோடி கூட இல்லை. தேவையில்லாத வேலைக்கு தினமும் 100, 1000 ரூபாய் செலவழிக்கிறோம், ஆனால் ராணுவத்திற்கு ஒரு ரூபாய் கொடுத்தால் நிச்சயம் இந்தியா வல்லரசாகும்.
உங்கள் பணம் நேரடியாக ராணுவ உதவி மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் போர் விபத்து நிதியில் டெபாசிட் செய்யப்படும். இராணுவ உபகரணங்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த பிரச்சாரத்தில் இணைந்து ராணுவத்திற்கு நேரடியாக உதவுங்கள்.
மற்ற நாடுகளை பற்றி கெட்ட வார்த்தைகளால் திட்டி, சாலைகளை மறித்து அறிக்கை விடுவதால் எதையும் சாதிக்க முடியாது.
நாட்டு மக்களின் எண்ணங்களை செயல்படுத்தி உங்கள் நாட்டு ராணுவத்தை பலப்படுத்துங்கள். எனவே எந்த நாட்டின் உதவியுமின்றி தங்கள் நிலையை காட்ட முடியும் வங்கி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வங்கி விவரங்கள்: ****** வங்கி, A/C பெயர்: ராணுவ நல நிதியம் போரில் உயிரிழந்தவர்கள், A/C எண்: 90557812271235, குறியீடு: ****0000262" என பரப்பப்பட்டு வருகிறது.
உண்மையில் போரில் உயிர் இழந்தவர்களின் ராணுவ நலநிதி என்ற உண்மையான வங்கிக் கணக்கு இருக்கிறது. அது டெல்லி தெற்கு பாதுகாப்பு தலைமையகத்தில் சிண்டிகேட் வங்கி மூலம் அந்த வங்கி கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த அதிகாரப்பூர்வ வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். ஆனால் தற்போது காஷ்மீர் தாக்குதலில் ராணுவ வீரர்களுக்கு எந்த சேதமும் ஏற்படாத நிலையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்பது போல இந்த செய்தி பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications