வாடகை வீடு.. லீஸுக்கு பணமும் தரல.. பெருகும் போலி ஆவணம், மோசடி பத்திரம்.. யாரிந்த வக்கீல்? கோர்ட் நச்
சென்னை: போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கும் சொத்துக்கள் குறித்து நீதிமன்றங்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில் மோசடி வழக்கு ஒன்றில் முக்கிய உத்தரவினை ஹைகோர்ட் இன்று பிறப்பித்திருக்கிறது.
வீட்டு மனை, நிலம் வாங்கும்போது தாய்ப்பத்திரம், ஒரிஜினல் இருக்கிறதா என்பதையெல்லாம் சரியாக கவனித்து வாங்க வேண்டியிருக்கிறது.. காலி மனையாக இருப்பின், அந்த காலி மனைக்கு சிஎம்டிஏவின் Approval இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.. சின்ன சந்தேகங்கள் எழுந்தாலும், உங்கள் ஊரிலுள்ள கிராம நிர்வாகியின் ஆலோசனையையும் பெற்றே செய்ய வேண்டியிருக்கிறது.

இவ்வளவ பார்த்து பார்த்து சொத்தை வாங்கினாலும் முறைகேடுகள் ஏதாவது ஒரு ரூபத்தில் நடந்துவிடுகின்றன.. தமிழக பத்திரப்பதிவு துறையானது, இந்த முறைகேடுகளை களைய பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
காலி மனை பத்திரம்: எனினும், போலி பத்திரங்களை பயன்படுத்தி, மோசடிகள் நடப்பது அதிகரித்து வருகிறது. இதற்காகவே, பத்திரப்பதிவில் இணையதள வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.. காலி மனை பத்திரங்கள் பதிய நில புகைப்படம் கட்டாயம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது..பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள், பணத்தை பெற்றுக் கொண்டு, போலி ஆணம் தயாரிக்கும் ஆவண எழுத்தர்கள் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைது நடவடிக்கையும் பாய்ந்து வருகிறது.
இவை அனைத்தையும்விட, போலியான ஆவணங்கள் தயாரித்து அபகரிக்கும் சொத்துக்கள் குறித்து நீதிமன்றங்கள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்தவகையில், இபபோதும்கூட வழக்கு ஒன்றில், முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சென்னையை சேர்ந்த மாதவன் என்பவர், சென்னை ஹைகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தார்..
பார் கவுன்சில்: அந்த மனுவில், "நந்தனம் சிஐடி நகரில் தன்னுடைய அடுக்குமாடி குடியிருப்பில் அமர்நாத் என்ற வழக்கறிஞர், வீடு குத்தகைக்கு ஒப்பந்தம் செய்து குடியிருந்து வந்தார். இந்நிலையில் ஒப்பந்த காலம் முடிந்த பின் வீட்டை காலி செய்து கொடுக்காமல் மற்ற வீடுகளையும் அபகரித்து வாடகை எதுவும் கொடுக்காமல் இருந்து வந்தார். இது தொடர்பாக பார் கவுன்சில் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு பார் கவுன்சிலில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இது வரை எடுக்கப்படவில்லை" என்று மனுவில் தெரிவித்தார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சிவஞானம் அமர்வு, "வழக்கறிஞர் அமர்நாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வீடு குத்தகைகான ஆவணங்களின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சைதாப்பேட்டை உதவி ஆணையருக்கும், தடய அறிவியல் துறைக்கும் உத்தரவிட்டிருந்தது.
ஒப்பந்த காலம்: இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் ஆஜராகி, ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகு வாடகை ஏதும் கொடுக்காமல் மாதவனின் வீட்டை வழக்கறிஞர் அமர்நாத் அபகரித்து வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதே போல், வழக்கறிஞர் அமர்நாத், நீதிமன்றத்தில் வழங்கிய வீடு குத்தகை எடுத்ததற்கான ஆவணம், அதில் இருந்த கையெழுத்து என அனைத்தும் போலியானது என தெரிய வந்ததாக தடய அறிவியல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
24 மணி நேரம் டைம்: இதனை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கறிஞர் அமர்நாத் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு, தமிழ்நாடு பார் கவுன்சிலும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். மேலும் வீட்டை 48 மணி நேரத்தில் அமர்நாத்திடம் இருந்து மீட்டு வீட்டின் உரிமையாளர் மாதவன் வசம் ஒப்படைக்க காவல்துறைக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications