போலி பட்டா.. அதைவிடுங்க.. "ஒப்புகை முத்திரை" இருக்கா? பதிவுத்துறை அதிரடி.. தமிழக அரசு சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொது மக்களின் புகார்கள், வழக்கு தொடர்பான தபால்களை அலட்சியமாக கையாளும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கும் வகையில், பதிவுத்துறை புதிய கட்டுப்பாடுகளை பிறப்பித்துள்ளது....

பத்திரப்பதிவு துறையில் பல்வேறு அதிரடிகளை தமிழக அரசு செய்து வருகிறது. அதேபோல, நிறைய முறைகேடுகள் நடப்பதால், அதை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக, போலி பத்திரங்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

Fake Patta and Important Order issued by the TN Government Registration Dept to the DIGs

ஆள் மாறாட்டம்: அதனால்தான், ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், பத்திரப்பதிவுத் தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தாக்கல் செய்திருந்தது.

அந்தவகையில், போலி ஆவண மோசடியில் சிக்குபவர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், இன்னொரு அதிரடியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது..

அதாவது, பத்திரப்பதிவில் தவறுகள் ஏதாவது நடந்தால், பாதிக்கப்பட்ட மக்கள், மாவட்ட பதிவாளர்கள், டிஐஜிக்களிடம் புகார்களை தந்து வருகிறார்கள்.. இப்படி தரப்படும் புகார்களை, முறையாக பதிவு செய்து விசாரிக்க வேண்டும்.. ஆனால், பொதுக்களின் புகார்களை, அதிகாரிகள் அலட்சியப்படுத்துவதாக தெரிகிறது.

புதிய உத்தரவு: மேலும், நீதிமன்ற உத்தரவுகளையும், நோட்டீஸ்களையும் கிடப்பில் போட்டுவிடுவதாகவும் புகார் கிளம்பி உள்ளது.. அதனால்தான், பதிவுத்துறை தற்போது உத்தரவினை பிறப்பித்துள்ளது.. அந்த உத்தரவில் உள்ளதாவது:

- புகார்கள், வழக்குகள் தொடர்பான கடிதங்கள் கிடப்பில் போடப்படுவதால், துறைக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிக்கல்கள் ஏற்படுகின்றன.

- வழக்குகள் தொடர்பான குறிப்புகளை அனுப்பும் அதிகாரிகள், மிக கவனமாக செயல்பட வேண்டும்..

- குறிப்பு ஆவணங்களில், அதை அனுப்பும் அதிகாரியின் விபரங்கள் முறையாக இடம் பெற வேண்டும்.

- வழக்கு தொடர்பான தபால்களின் ஒப்புகை சீட்டு வந்தால், அதில் முறையாக ஒப்புகை முத்திரை, தேதியை குறிப்பிட்டு அனுப்ப அனுப்ப வேண்டும்..

- புகார்கள், வழக்கு கடிதங்களில், டிஐஜிக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

- அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை பாயும்" என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஐஜிக்களுக்கு பதிவுத்துறை பிறப்பித்துள்ள இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு நம்பிக்கையை தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+