Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காலில் விழுறேன்..ரசிகர்களாக இருங்க ஆனா குடும்பத்தை பாருங்க..உயிரிழந்த அஜித் ரசிகரின் சித்தி கண்ணீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ரோகிணி தியேட்டர் முன்பு துணிவு பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்க சென்ற போது அஜித் ரசிகர் பரத்குமார் என்பவர் லாரியில் இருந்து கிழே விழுந்து பலியானார். இந்நிலையில், அவரது சித்தி ஆரோக்கியம் என்பவர், "ரசிகர்களாக இருங்க ஆனா குடும்பத்தை பாருங்க.. குடும்பத்தை விட ரசிகர் ஒன்றும் முக்கியம் கிடையாது. ரசிகர் வந்து சோறு போட போவது கிடையாது. உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்" என்று உருக்கமாக பேசியுள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படமும், விஜய் நடிப்பில் வாரிசு படமும் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது கடந்த 7 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். இதனால் இருவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

படம் வெளியான திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், வெடி வெடித்தும் கொண்டாடினர்.

கல்லூரி மாணவர் பரத் குமார்

கல்லூரி மாணவர் பரத் குமார்

அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிலும் நேற்று நள்ளிரவு 1 மணிக்கே துணிவு படத்தை பார்க்க அஜித் ரசிகர்கள் திரண்டனர். அஜித் ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டதால் அங்கு கடும் கூட்ட நெரிசல் நிலவியது. அஜித் ரசிகர்கள் பலரும் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர் பரத்குமாரும் துணிவு படத்தை பார்ப்பதற்காக ரோகிணி தியேட்டருக்கு வந்து இருந்தார்.

ஆர்வமிகுதியில் லாரி மீது ஏறி ஆட்டம்

ஆர்வமிகுதியில் லாரி மீது ஏறி ஆட்டம்

துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 3 ஆம் ஆண்டு படித்து வந்த பரத் குமார் (வயது 19) குடும்பத்தின் ஏழ்மை நிலை காரணமாக ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பகுதி நேர வேலையும் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அஜித் ரசிகர்கள் ஆட்டம் போட்டு கொண்டு இருக்க அவர்களுடன் இணைந்து பரத்குமாரும் ஆட்டம் பாட்டம் என ஜாலியாக இருந்துள்ளார். அப்போது ஆர்வ மிகுதியால் பரத்குமார் மற்றும் அவரது நண்பர்கள், அந்த வழியாக மெதுவாக சென்ற கன்டெய்னர் லாரி மீது ஏறி நின்று ஆட்டம் போட்டனர்.

ரசிகர்களும் அதிர்ச்சி

ரசிகர்களும் அதிர்ச்சி

இதில் நிலை தடுமாறி பரத்குமார் கீழே விழுந்து விட்டார். சாலையில் விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்துபோனதால் வலியால் துடித்த பரத்குமாரை அருகில் உள்ள மருத்துவமனையில் அங்கு இருந்த நண்பர்கள் சேர்த்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரத்குமார், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். படம் பார்க்க சென்ற மகன் இறந்து போய்விட்ட செய்தி அறிந்து பெற்றோர்கள் கதறி அழுதனர். அஜித்தின் தீவிர ரசிகரான பரத்குமார் 'துணிவு' படத்தை முதல் காட்சியே பார்த்துவிட வேண்டும் என வந்தபோது பலியாகி விட்ட செய்தி அஜித் ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பரத்குமார் நள்ளிரவில் டேங்கர் லாரி அஜித் சிகர்கள் ஆட்டம் போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அலறி அடித்துக்கொண்டு ஓடினோம்

அலறி அடித்துக்கொண்டு ஓடினோம்

இந்த நிலையில், உயிரிழந்த பரத்குமாரின் சித்தி ஆரோக்கியம், 'குடும்பத்தை விட ரசிகர் ஒன்றும் முக்கியம் கிடையாது என்றும் இளைஞர்கள் குடும்பத்தை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள்' எனவும் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பரத்குமாரின் சித்தி ஆரோக்கியம் அளித்த பேட்டி வருமாறு:- நாங்கள் எல்லாம் வேலைக்கு தான் போயிருக்கிறான் என்று நினைத்தோம். ஆனால் ஆயிரம் ரூபாய் டிக்கெட் எடுத்துக்கொண்டு சினிமாவிற்கு போயிருக்கிறான். எங்களுக்கு அங்கிருந்து போன் வந்த பிறகே அலறி அடித்துக்கொண்டு ஓடினோம். முதலில் சிறிய அடி என்று தான் சொன்னார்கள்.. ஆனால் உள்ளே போய் வந்த பிறகுதான் உயிர் போகும் அளவுக்கு அடிபட்டது தெரிந்தது.என் கண்ணால் பார்த்தேன்..

 யாரும் சோறு போட போவது கிடையாது

யாரும் சோறு போட போவது கிடையாது


அத்தனை இளைஞர்களுக்கும் குடும்பத்தினருக்கும் சொல்வது இதுதான்.. ரசிகர்களாக இருங்க.. குடும்பத்தை பாருங்க.. குடும்பத்தை விட ரசிகர் ஒன்றும் முக்கியம் கிடையாது. இருக்கலாம் ஓரளவுக்கு வச்சிக்கோங்க.. ரசிகர் வந்து சோறு போட போவது கிடையாது. நானும் கணவரை இழந்தவர்தான். எனது வீட்டுக்காரரும் விஜய் ரசிகராக இருந்தவர்தான். எங்களுக்கு வந்து யாரும் இப்போ சோறு போடவில்லை. நானே வீட்டு வேலை செய்து சாப்பிட்டுக்கிறேன்.

காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்

காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன்

ரசிகராக இருக்கலாம்.. ஆனால், அதற்காக காலத்திற்கும் சோறு போட மாட்டாங்க.. உங்கள் உயிரை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்களை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் காலில் விழுந்து கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு குடும்பத்தையும் நினைத்து பார்த்து அவர்களின் கஷ்டத்தை.. தம்பியை வாழ வைக்கணும்.. தங்கையை வாழ வைக்கணும் என யோசிங்க. உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு கண்ணீர் மல்க அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+