கடைசி நேரத்தில் வந்த மெசேஜ்.. வேண்டவே வேண்டாம்ங்க.. அதிமுக அணிக்கு விஜய் அமைச்சர் பதவி தராதது ஏன்?
சென்னை: எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையிலான அதிமுக அதிர்ப்தியாளர்களின் அணியினருக்கு, அமைச்சரவை விரிவாக்கத்தில் வாய்ப்புகள் வழங்காமல் தவிர்த்திருக்கிறார் விஜய். இதற்கான பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதனை நினைவுபடுத்தியே அவர்களை புறக்கணித்துள்ளார் விஜய் என்று தவெகவின் மேல்மட்டங்களில் உலா வருகிறது.
திமுக கூட்டணியில் ஜெயித்த காங்கிரஸ், அங்கிருந்து வெளியேறி தவெக பக்கம் சாய்ந்தபோது அக்கட்சிக்கு தோள் கொடுத்தார் விஜய். காங்கிரஸ் வெற்றிப்பெற்ற 5 எம்.எல்.ஏ.க்களும் வாங்கிய வாக்குகளில் திமுகவின் வாக்கு களும் கணிசமானவை. திமுகவை எதிரி என கடும் விமர்சனத்தை முன் வைத்துத் தான் அரசியல் செய்தார் விஜய். அதேபோல, காங்கிரசுக்கு விழுந்த திமுகவின் வாக்குகள், விஜய்க்கு எதிரான வாக்குகள். அப்படியிருந்தும் காங்கிரசை தவெகவுடன் சேர்த்துக்கொண்டு தற்போது அமைச்சரவையிலும் பங்கு கொடுத்துள்ளார் விஜய்.

அதேபோல, திமுக கூட்டணியில் திமுகவின் வாக்குகள் அதாவது விஜய்க்கு எதிரான வாக்குகளை வாங்கி ஜெயித்த விசிக, இடதுசாரிகள், மூஸ்லீம் லீக் கட்சிகளின் வெளி ஆதரவோடு தான் தனது பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்யால் முடிந்தது. திமுகவின் தோழமைக் கட்சிகளின் ஆதரவை பெற்றே ஆட்சியை தக்க வைத்தார் விஜய்.
ஆட்சியை காப்பாற்ற, ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள தனது அரசியல் எதிரியான திமுக ஆதரவுடன் ஜெயித்த கட்சிகளின் ஆதரவை பெற சமரசம் செய்து கொண்ட விஜய்யால், இந்த கட்சிகளின் ஆதரவு விசயத்தை ஜீரணித்து கொள்ள முடியவில்லையாம்.
அதனால்தான், தவெக அரசை அதிமுக ஆதரிக்க முன்வந்தால் கல்லாப் பெட்டி கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெறுவதால் ஏற்பட்டிருக்கும் மன உளைச்சல்களிலிருந்து விடுபடலாம் என திட்டமிட்டே, எடப்பாடி பழனிச்சாமியை பின்புற வாசல் வழியாக அணுகினர் தவெக தலைவர்கள். இதற்கு எடப்பாடி மறுத்துவிட்டார்.
அதன் பிறகே, எடப்பாடிக்கு எதிராக இருக்கும் வேலுமணி, சண்முகம் தரப்பை அணுகினர். ஏற்கனவே, திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாம் என்ற எடப்பாடியின் திட்டத்தை அறிந்த இவர்கள், அதனை எதிர்த்த சூழலில்தான், தவெகவின் இந்த ஆஃபர் வந்தது. அதனை எடப்பாடியிடம் வேலுமணி, சண்முகம் சொன்னபோது அதையும் ஏற்க மறுத்தார் எடப்பாடி.
அதன்பிறகே, தவெகவை ஆதரிப்பது எனவும் அமைச்சரவையில் இடம் பெறலாம் எனவும் முடிவெடுத்து எடப்பாடிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டனர் அதிர்ப்தியாளர்கள். அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்கிறோம் என்ற நம்பிக்கையும் உறுதியையும் விஜய் தரப்பில் கொடுத்த பிறகே, நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக அதிமுகவின் 25 அதிர்ப்தியாளர்களும் வாக்களித்தனர்.
ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிர்ப்தியாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்காமல் டிமிக்கி கொடுத்து விட்டார் முதல்வர் விஜய். இதனால், விஜய் மீது செம காட்டத்தில் இருக்கிறார்கள் அதிமுக அதிர்ப்தியாள ர்கள்.
அவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளாததற்கு, அதிர்ப்தி யாளர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம்; அது தவெக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று எடப்பாடி எச்சரித்ததை விஜய்யும் அவரது அமைச்சரவை சீனியர்களும் புறந்தள்ளவில்லை. இது ஒரு புறமிருந் தாலும் முக்கியமாக இது வரை வெளிவராத ஒரு காரணம் இருக்கிறது என்கிறார்கள் தவெகவினர்.
அதாவது, ''தவெகவுக்கு ஆதரவு தர நாங்கள் தயார் என்றும், தங்களிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர். அவர்களின் ஆதரவு தங்களுக்கு இருந்தால் வலிமையான பெரும்பான்மையை நீங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியும். வெளியிலிருந்து ஆதரவு தரும் சொற்ப எண்ணிக்கை கட்சிகளை நினைத்து நினைத்து தினமும் நீங்கள் கவலைப்படத் தேவையிருக்காது என தவெகவின் சீனியர்கள் மூல விஜய்க்கு தகவல் தந்தனர். இந்த யோசனை, விஜய்க்கும் தவெகவினருக்கும் நல்லதாகப்பட்டது.
அதேசமயம், அதிமுகவை பிளவுப்படுத்தி இவர்கள் நம்மை ஆதரித்தால், கட்சித் தாவல் தடை சட்டம் வராதா? என விஜய் கேட்டதற்கு, 3-ல் இரண்டு பங்கு ஆதரவுடன் ஒரு அணியாக வெளியே வந்தால் அந்த சட்டம் பொறுந்தாது. அந்த வகையில் அதிமுகவில் 47 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதில் 3-ல் 2 பங்கு எனில் 32 பேர் போதும். வேலுமணியும் சண்முகமும் தங்களிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதனால் 35 எம்.எல்.ஏ.க்களும் தவெகவை ஆதரிக்கும் போது சட்டச்சிக்கல் வராது என விஜய்க்கு சொல்லப் பட்டதால் விஜய்யும் ஏற்றுக்கொண்டார். அதனால்தான், அமைச்சரவையில் எத்தனை இடம் வேண்டும் என்பது பற்றியெல்லாம் விவாதங்கள் நடந்தது.
அப்படியிருக்கையில், ஏன் அவர்களை எடுத்துக்கொள்ளவில்லை? அமைச் சரவையை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்த நிலையில், அதிமுக அதிர்ப்தியாளர்களை எடுத்துக் கொள்வது குறித்து விவாதம் நடந்த போது, ''அவர்கள் நம்மிடம் பேச்சுவார்த்தையை துவக்கியபோது தங்களிடம் 35 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகத்தான் சொன்னார்கள். அதை ஏற்றுக் கொண்டு தான் அவர்களுக்கு ஓகே சொன்னோம். ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பில் அவர்களால் தங்களிடம் 25 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதைத்தான் நிரூபித்தார்கள். அந்த 25 பேரின் ஆதரவின் அடிப்படையில் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாய்ந்து, அவர்களுக்கு எதிராக சட்டச் சிக்கல் சர்ச்சை உருவாவதை நான் விரும்பவில்லை. கட்சி தாவல் தடை சட்டத்திற்கு பங்கம் இல்லாத அளவுக்கு அவர்களின் எண்ணிக்கை இருந்தால் இப்பவோம் அவர்களை நாம் ஆதரிக்கலாம். அதனால், இப்போதைக்கு வேண்டாம் என சொல்லித்தான், அதிமுக அதிர்ப்தியாளர்களை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள கடைசி நேரத்தில் தவித்தார் முதல்வர் விஜய்'' என்று விவரிக்கிறார்கள் தவெகவின் சீனியர்கள்.
- சிறப்பு நிருபர் எழில்












Click it and Unblock the Notifications