ரஞ்சனா நாச்சியாரை காப்பாற்ற இப்படியா.. போலீசிடம் நாடகமாடிய குடும்பம்? கைதுக்கு முன் என்ன நடந்தது
சென்னை: சென்னையில் அரசு பஸ்சில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை கீழே இறங்கும்படி திட்டி தாக்கியதாக வீடியோ பரவிய நிலையில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான ரஞ்சனா நாச்சியார் இன்று அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். இந்த வேளையில் வீட்டுக்கு சென்ற போலீசாரிடம் அவரது குடும்பத்தினர் நாடகமாடிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் கலை மற்றும் கலாச்சார பிரிவு செயலாளராக இருப்பவர் ரஞ்சனா நாச்சியார். இவர் சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இவர் சென்னை கெருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று குன்றத்தூரில் இருந்து போரூருக்கு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.
ஏராளமான மாணவர்கள் பஸ்சின் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனர். இதை பார்த்த ரஞ்சனா நாச்சியார் அந்த பஸ்சை நிறுத்தினார். அதன்பிறகு அவர் பஸ் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கியபடி சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பஸ் கண்டக்டர், டிரைவரை அவர் திட்டினார்.
அதோடு பஸ்சில் பயணித்த பிற பயணிகளை பார்த்து, ‛மாணவர்கள் இப்படி பயணிப்பதை கண்டிக்க கூடாதா'' என சாடினார். அதோடு பின்பக்க படிக்கட்டில் தொங்கிய சில மாணவர்களை வலுக்கட்டாயமாக அடித்து வேகமாக இறங்க வைத்தார். அதோடு ஒருமையில் திட்டினார். மேலும் அவர் அறிவு இருக்கா நாயே எனவும் அங்கிருந்தவர்களை திட்டினார். அதோடு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதமும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ வெளியானது. இந்த வீடியோவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. அதாவது படியில் பயணித்த மாணவர்களை பாதுகாக்க அவர் இப்படி செய்திருந்தாலும் கூட அவர் பயன்படுத்திய வார்த்தை மற்றும் மாணவர்களை அடித்தது தவறு என பலரும் கூறினர்.
இதற்கிடையே தான் சம்பவம் குறித்த பஸ் கண்டக்டர் நடராஜன் மாங்காடு போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை ஆபாசமாக திட்டுதல், அரசு பஸ்சை மறித்தல், தாக்குதல் நடத்தியது உள்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று காலையில் கெருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த வேளையில் அவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எப்ஐஆர் காட்டுங்கள், பிடிவாரண்ட் காட்டுங்கள் என அவர் போலீசாரிடம் கேட்டார். மேலும் தனது சொந்த காரில் போலீஸ் நிலையம் வருவதாகவும் அவர் கூறினார். ஆனால் போலீசார் அவரிடம் நைசாக பேசி வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர்.
இதற்கிடையே தான் இன்று காலையில் ரஞ்சனா நாச்சியாரை கைது செய்ய போலீசார் சென்றபோது அவரது குடும்பத்தினர் நாடகமாடியது தெரியவந்துள்ளது. ரஞ்சனா நாச்சியாரை கைது நடவடிக்கையில் இருந்து தடுக்கும் வகையில் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதாவது காலையில் போலீசார் ரஞ்சனா நாச்சியார் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
போலீசாரை பார்த்தவுடன் அவரது குடும்பத்தினர் கைது நடவடிக்கைக்காக தான் வந்துள்ளனர் என்பதை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வேளையில் ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இருக்கிறாரா? என போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு குடும்பத்தினர் இல்லை என தெரிவித்துள்ளனர். ஆனால் போலீசார் ரஞ்சனா நாச்சியார் வீட்டில் இருப்பதை அறிந்தே சென்றனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் பேச்சை நம்பவில்லை. மாறாக வீட்டில் இருந்த ரஞ்சனா நாச்சியாரை கைது செய்து அழைத்து சென்றது தெரியவந்துள்ளது.
-
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பூட்டி கிடக்கும் பனையூர் கட்சி ஆபீஸ்! தவெகவில் இணைய காத்துக் கிடக்கும் விஜயதாரணி டூ பாலகங்கா வரை! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்!












Click it and Unblock the Notifications