"மணிவண்ணன்"தான் அமித்ஷா.. நான்தான் மோடி.. கரெக்ட்டா இருக்கும் மச்சான்.. நடிகர் சத்யராஜ் வீசிய சரவெடி
சென்னை: பிரபல நடிகர் சத்யராஜின் பேச்சு ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இது தொடர்பான கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.
திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு பாஜக அளவுக்கு அதிகமாக கொந்தளித்தது.. அமித்ஷா முதல், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் வரை கருத்து தெரிவித்திருந்தனர்.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

பெண்ணை இழிவுபடுத்துவதில் திமுக காரர்களுக்கு நிகர் உண்டா? அதை முதலில் ஒழிங்க... வரலாற்றில் பெண்ணை அடிமைப்படுத்திய மதம் எதுன்னு போட்டி வைத்தால் இந்து மதம் எவ்வளவோ பரவாயில்லை என்று தெரியும். அப்போ மற்ற மதத்தை ஒழிப்பேன் என்பாரா? பொய் சொல்பவர் Liar" என்று நடிகை கஸ்தூரியும் சீண்டியிருந்தார்.
சனாதனம்: "சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான்... பாஜகவினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர். இந்தியா (I.N.D.I.A.) கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பாாஜகவினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்." என்று உதயநிதியும் பதிலடி கூறியிருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவுகள் குவிந்தன. அந்த வகையில், நடிகர் சத்யராஜும் ஆதரவு தெரிவித்திருந்தார்.. செய்தியாளர்களிடம் பேசியபோது, "உதயநிதி ஸ்டாலின் ரொம்ப தெளிவாக பேசியுள்ளார். அவரது சிந்தனை தெளிவுக்கும், கருத்திலயல் ரீதியான தெளிவுக்கும், துணிச்சலுக்கும் பராட்டுகள். அவர் ஒவ்வொரு விஷயத்தையும் கையாளும் விதம் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்'' என்றார்.
தீவிர மதப்பற்றாளர்: இதற்கு பிறகு நடிகை கஸ்தூரியின் பேச்சுக்கு, சத்யராஜின் மகள் டாக்டர் திவ்யா பதிலடி தந்திருந்தார். என்னை பொறுத்தவரை கஸ்தூரி ஒரு தீவிர மதப்பற்றாளராகவே தெரிகிறார். சமத்துவத்திற்கும் பெண்களுக்கு எதிரானதாக இருப்பதால் நான் சனாதனத்தை எதிர்க்கிறேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், நடிகர் சத்யராஜ் மீண்டும் சனாதன பேச்சை எடுத்துள்ளார்.. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நுற்றாண்டு நூலகத்தில் எழுத்தாளர் கே.ஜீவபாரதியின் "இயக்குனர் மணிவண்ணனும் நானும்" என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது... இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சத்யராஜ், நூலை வெளியிட அதன் முதல் பிரதியை மணிவண்ணனின் சகோதரி மேகலா பூபதி பெற்றுக்கொண்டார்.
மணிவண்ணன்: இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சத்யராஜ், தன்னுடைய நெருங்கிய நண்பர் மணிவண்ணனுடனான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். "அமித்ஷாவாக மணிவண்ணன் நடிக்க, மோடியாக தான் நடிப்பதற்கு திரைக்கதை தயார்.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? சனாதனம்..
எப்பவுமே நான், நிழல்கள் ரவி, வாகை சந்திரசேகர் எல்லாரும் வாடா போடா என்றுதான் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வோம். இப்படித்தான், பெரியார் படத்துக்காக, கேரளாவில் வைக்கம் போராட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன.
பிரதமர் கிடையாது: அப்போது ஒரே கேரவனில், நாங்கள் 3 பேரும் பேசிக் கொண்டிருந்தோம்.. அப்போது நிழல்கள் ரவி, டேய் மச்சான், நீ மோடியா நடிச்சால் கரெக்ட்டா இருக்கும்" என்றார். இத்தனைக்கும் மோடி அப்போது பிரதமர் கிடையாது. குஜராத் மாநில முதல்வராக இருந்தார். அப்பவே அந்த கேரக்டருக்கு என்னை பேசிவிட்டார்கள்" என்று நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications