மயில்சாமியா இது?.. நிர்மலா சீதாராமனின் "ஹிந்தி".. பீட்டர் + முகமது அலி + அனந்த ராமன்.. இப்ப புரியுதா
பிரபல நடிகர் மயில்சாமி, மொழிகள் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்
சென்னை: மதங்கள் குறித்து தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேன் என்று பிரபல நடிகர் மயில்சாமி ஆவேசமாக கூறியிருந்தது சோஷியல் மீடியாவில் 2 நாட்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. என்ன காரணம்?
திமுகவின் மூத்த தலைவரும், எம்பியுமான ஆ.ராசா, இந்துக்கள் குறித்த பேச்சின் சர்ச்சை இன்னும் ஓயவில்லை.. ராசாவின் பேச்சுக்களை, தினமும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, அதற்கு கண்டனங்களை பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மற்றொரு பக்கம் ஆ ராசா மீது நடவடிக்கை கோரி, தமிழகம் முழுவதும் போலீசில் புகார்களை தந்து வருகிறார்கள்.. முதல்வர் ஸ்டாலின், ராசாவின் பேச்சு பதிலளிக்க வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள். இந்தநிலையில், ஆ.ராசா நாமக்கல்லில் 2 மாதங்களுக்கு முன்பு பேசிய தனித்தமிழ்நாடு விவகாரமும் தற்போது அனலை கிளப்பி விட்டுள்ளது..

அமித்ஷா
அதில், 'தனி தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, திராவிட முன்னேற்ற கழகம் மாநில சுயாட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார். அதனால், பாஜக அமித்ஷாவுக்கு சொல்கிறேன், இந்திய பிரதமர் மோடிக்கும் சொல்கிறேன்... உங்களை பணிந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக் கொண்டே சொல்கிறேன்... அண்ணா வழியில் பயணம் செய்கிறார் முதலமைச்சர்... எங்களை பெரியார் வழிக்கு தள்ளி விடாதீர்கள். தனிநாடு கேட்க எங்களை விட்டுவிடாதீர்கள்... மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம்" என்றார் ஆவேசமாக.

அல்போன்ஸ்
இந்நிலையில், சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அவர் பேசியதாவது.. ''இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்துப் பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று மதத்தினரும் ஒன்றாக சேர்ந்திருப்பது தான் இந்தியா. உங்கள் ஓட்டுகளுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள்'.. சாதி, மதம் பேதம் பார்க்காமல் மற்றவர்களுக்கு தர்மம் செய்ய வேண்டும். 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது தான் சரியாக இருக்கும். எனக்கு பீட்டர் அல்போன்ஸூம் வேண்டும், முகமது அலியும் வேண்டும், அனந்த ராமனும் வேண்டும். இதில் ஒருவர் வேண்டாம் என பிரித்து பார்ப்பவர் மனிதனே கிடையாது.

கிறிஸ்தவர்
உண்மையை பேசும்போது நாம் பயப்பட வேண்டிய தேவையில்லை. நான் இப்போதும் சொல்கிறேன். இஸ்லாத்தையும், கிறிஸ்துவத்தையும், இந்து மதத்தையும் பிரித்து பேசுபவர்கள் மனிதர்களே கிடையாது. மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்திருப்பது தான் இந்தியா. உங்கள் ஓட்டுகளுக்காக தயவு செய்து மக்களை ஏமாற்றாதீர்கள். மக்கள் ஒருபோதும் ஏமாறமாட்டார்கள். உங்களுக்கு தான் ரிவீட் அடிப்பான். மதத்தை, தவறாக பேசினால் செருப்பால் அடிப்பேன்.. உலகத்தில் எங்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம் மொழி முக்கியமில்லை.. ஆனால் நீ இருக்கிற மொழியை மட்டும் விட்டுக்கொடுத்துவிடாதே.'' என்றார்.

சபாஷ் + சபா
மயில்சாமியின் இந்த பேச்சுக்கு பலரும் திரண்டு வந்து ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்... "சபாஷ்.. சரியான பேச்சு. இங்கே இந்தி படிக்க விரும்புபவர்கள் பிரச்சார் சபா மூலம் படிப்பதை யாரும் தடுக்கவில்லை... ஆனால், திணிக்க வேண்டாம்.. மயில் சாமி கருத்து வரவேற்கப்பட வேண்டியதே.. ஹிந்தி பேசும் வடநாட்டுக்கார ஆட்கள் தமிழ் கற்று கொள்ளட்டுமே.. தமிழும் ஆங்கிலமும் போதும் உள்ளூர் வெளிநாடு எல்லா இடங்களிலும் வாழலாம்.. உலகத்தைச்சுற்றி வர ஆங்கிலத்தை அனைவரும் கற்போம்.. தமிழ் வாழ்க என்று பதிவிட்டு வருகிறார்கள்.

மயில்சாமி நறுக்
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமியிடம், திமுக எம்பி ராசா இந்துக்களை அவதூறாக பேசி இருக்கிறாரே? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.. அதற்கு மயில்சாமி, "இல்ல.. அரசியல் பேச விரும்பவில்லை' என்றார்.. ஆனாலும் அந்த செய்தியாளர் மறுபடியும், அப்படின்னா ஏன் நீங்கள் தேர்தலில் நின்றீர்கள்? என்று கேட்டார்.. இந்த கேள்வியை கொஞ்சமும் எதிர்பாராத மயில்சாமி, நான் வெற்றி பெற தேர்தலில் நிற்கவில்லை.. கூட்டணிகள் சரியில்லாத காரணத்தால் அவற்றை எதிர்த்து நின்றேன் அவ்வளவுதான் என்றார்.

செருப்பால் அடிப்பேன்
அப்போதும் அந்த செய்தியாளர் விடவில்லை.. நபிகள் குறித்து பேசினால் எல்லாரும் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, ஏன் இந்து மதம் குறித்து பேசினால் மட்டும் வாய் திறக்க மறுக்கிறீர்களே என்று மீண்டும் கேள்வியை எழுப்பினார். விடாமல் அந்த செய்தியாளர் விரட்டி விரட்டி கேள்வி கேட்கவும்தான், இந்து முஸ்லீம் கிறிஸ்தவ மதத்தால் ஆனது.. எந்த மதத்தை எவன் வேண்டாம் என்றாலும் செருப்பால் அடிப்பேன் என்று பளிச்சென்று சொன்னார். இதற்கு பிறகு இன்னொரு கேள்வியை மயில்சாமியிடம் செய்தியாளர்கள் எழுப்பினார்கள்..

நிர்மலா பளீச்
உலகிலேயே எங்கு சென்றாலும் ஹிந்தி மொழி முக்கியம் என்றும், ஹிந்தி மொழி எதிர்ப்பால், தன்னால் ஹிந்தி படிக்க முடியவில்லை என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறாரே, அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.. இதற்கு மயில்சாமி, "இந்தி பேசி நான் என்ன செய்ய போறேன்? பிரதமர் ஆக போறேனா? பிரதமர் போஸ்டிங் தர சொல்லுங்க, வேணும்னா இந்தி பேசறேன்.. உலகத்தில் எங்கு சென்றாலும் உழைப்பு தான் முக்கியம் மொழி முக்கியமில்லை.. ஆனால் நீ இருக்கிற மொழியை மட்டும் விட்டுக்கொடுத்துவிடாதே" என்றார். இதுபோன்ற கேள்வி பதில்களால்தான், மயில்சாமி வீடியோ 2 நாட்களாக இணையத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications