Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ராதாரவி "கலைஞர்" என்றதுமே.. படார்னு திரும்பிய "கண்கள்".. ஒய்.ஜி. மகேந்திரனுடன் என்ன சலசலப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த ஒரு திரைப்பட விழாவில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சிலாகித்து பேசியிருக்கிறார் பாஜகவின் ராதாரவி.

மூத்த கலைஞர் நடிகர் ராதாரவி பல கட்சிகளில் பயணம் செய்துவந்தவர்.. தற்சமயம் பாஜகவில் உள்ளார்.. ஆனால், பிரச்சார நேரங்களில் தவிர, பாஜக கூட்டங்களில் பெரிதாக இவர் பங்கேற்கவில்லை என்றே தெரிகிறது.

வழக்கம்போல், சினிமாவில் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறார்.. எந்த மேடையில் பேசினாலும், 'கலைஞரிடத்தில் அரசியல் பயின்றவன்' என்பதை மறக்காமல் சொல்லி மகிழ்வார்.

Famous Actor Radharavi praises kalaignar karunanidhi and says about Sri Ramanujar

கலைஞர் கருணாநிதி: இப்படித்தான் வள்ளுவர் கோட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.. அப்போது பேசிய ராதாரவி, யாராக இருந்தாலும், அவர்களின் பெயர் சொல்லி குறிப்பிட்டு பேசுவதுதான் என்னுடைய பழக்கம். இதை நான் கலைஞரிடமிருந்து கற்றுக் கொண்ட பழக்கம் என்று கூறியிருந்தார்.

கருணாநிதி இறந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ராதாரவி, அரசியலின் மூத்த தலைவர் இறந்த செய்தியை என்னால் தாங்கி கொள்ளவே முடியவில்லை. அவருக்கு 'கலைஞர்' என்ற பட்டத்தை கொடுத்ததே என் அப்பா எம்.ஆர்.ராதாதான். இனி, எல்லோரும் ஒற்றுமையாக இருந்து கருணாநிதியின் கனவை நினைவாக்குவதே அவரது ஆன்மாவுக்கு செலுத்தும் உரிய மரியாதை" என்று கூறியிருந்தார். அந்த வகையில் நேற்று நடந்த ஒரு திரைப்பட விழாவிலும் கருணாநிதி பற்றி பேசியிருந்தார் பாஜகவின் ராதாரவி.

Famous Actor Radharavi praises kalaignar karunanidhi and says about Sri Ramanujar

ராமானுஜர்: HYAGREEVA CINE ARTS பட நிறுவனம் சார்பில் ஸ்ரீ இராமானுஜர் படம் தயாராகி உள்ளது.. கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து அந்த காலக்கட்டத்திலேயே ஆன்மீகத்தில் சமூக புரட்சி செய்தவர் ராமானுஜர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில், தயாரிப்பாளர் T.கிருஷ்ணன் என்பவரே, இராமானுஜராகவும் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ராதாரவி, ஒய்ஜி மகேந்திரன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இதில் நடிகர் ராதாரவி பேசியபோது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சிலாகித்து பேசியிருந்தார்.
ஒய்ஜி மகேந்திரன்: "இங்கு வந்ததுமே ஜீயரை பார்த்தேன்.. சினிமாவுக்கும் இவருக்கும் சம்பந்தம் கிடையாதே.. இவர் ஏன் இங்கே வந்தாரு என்று நினைத்தேன்.. சினிமாவை பற்றி அறவே தெரியாத நபர்.. அவரை நான் ஏன் வணங்கினேன் என்றால், பக்குவப்பட்டவர்.. அவரை பார்த்ததுமே ஆச்சரியம்.. இவர் நமக்கு பெரிய ஆசீர்வாதம்.. அதனால்தான் வணங்கினேன். நாத்திகம், ஆத்திகம் என்று யாரும் பேசாதீங்க.. நாத்திகம் இல்லாவிட்டால் ஆத்திகம் கிடையாது. ஆத்திகம் இல்லாவிட்ல் நாத்திகம் கிடையாது.

இராமானுஜர் 1027-ம் ஆண்டு பிறந்தவர். ராமானுஜர் பற்றி எழுதியதே கலைஞர் தான்.. அவரே எழுதிட்டாரே என்பதால், அந்த புத்தகத்தை படித்தேன்.. யார் இவர்? என்று படிக்க ஆரம்பித்தேன்.. அப்பவே சீர்திருத்த கருத்துக்களை பேசியிருக்கிறார்.. சாதி, மதம் பேதம் கிடையாது ராமானுஜருக்கு.. எல்லாரையும் சமமாக பார்த்தவர்..

ஒய்ஜி பேசும்போது சொன்னார், முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றார்.. நீ சொல்லவே தேவையில்லை.. அவங்க அப்பா ஏற்கனவே ராமானுஜரை பற்றி எழுதியிருக்கிறார்.. அதனால், முதல்வரும் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிப்பார்.. இந்த படத்தை அவர் பார்த்தால், ராமானுஜராகவே இந்த படத்தில் வாழ்ந்துள்ளவருக்கு பெரிய அவார்டு காத்திருக்கிறது" என்று மகிழ்ச்சி பொங்க வாழ்த்தி பேசினார் ராதாரவி.

Famous Actor Radharavi praises kalaignar karunanidhi and says about Sri Ramanujar

நடிகர் ராதாரவி: முன்னதாக ராதாரவி பேசும்போது, "சீர்த்திருத்தவாதியாக நடிப்பது மிகவும் கஷ்டமானது. ஒய்ஜி மகேந்திரன் பேசும்போது, நான் கேட்டுக் கொண்டதால்தான் கிருஷ்ணன் இந்த படத்தில் நடித்தேன் என்கிறார்.. நடிப்பு மட்டும் நான் சொல்லி நடித்தது, நீ சொல்லி நடித்தது என்று கிடையாது. அவங்க என்ன விளக்கு திரியா தூண்டிவிடுவதற்கு? என்று ராதாவி இப்படி சொன்னதுமே, மேடையில் உட்கார்ந்திருந்த ஒய்ஜி மகேந்திரன் டென்ஷன் ஆகிவிட்டார்..

தான் பேசியது குறித்து ஏதோ விளக்கம் சொல்ல முற்பட்டார்.. அதற்கு ராதாரவி, பொதுவாக, சொல்றேன்யா, நான் பேசும்போது குறுக்கே பேசாதய்யா என்றார்.. இதனால் மேடையில் சிறு சலசலப்பு ஏற்பட்டது. ஆனால், ராதாரவி ராமானுஜரை பற்றி பேசும்போதெல்லாம் கலைஞர் கருணாநிதியை பலமுறை குறிப்பிட்டு பேசியது, பலரையும் கவனிக்க செய்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+