ஆளுநர் ரவி பேச்சால் எழுந்த சர்ச்சை.. பளிச்னு ஸ்ட்ரைட்டாவே பதில் சொன்ன நடிகர் ராஜ்கிரண்!
நடிகர் ராஜ்கிரண் ஆளுநர் ரவியின் தமிழ்நாடு சர்ச்சைக்கு கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை: ஆளுநர் ரவியின் "தமிழ்நாடு" கருத்துக்கு, அரசியல்கட்சி தலைவர்கள், திரைப்பட கலைஞர்கள் என பலரும் திரண்டு வந்து எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.. அந்தவகையில் நடிகர் ராஜ்கிரண் சொன்ன கருத்து, பலரையும் ஈர்த்து வருகிறது..
முந்தைய ஆளுநர் போல, தற்போதைய ஆளுநர் ரவி இல்லை.. திமுக ஆட்சிக்கு வந்த நேரம்தான் இவரும் புதிதாக இங்கு பொறுப்பேற்றார். பதவியேற்றதில் இருந்தே ஒரே பரபரப்புதான்..
ஒரு மாநிலத்தின் ஆளுநரே என்றாலும், சட்டவிதிகளுக்கு பொருந்தக்கூடியவராகவே இருப்பதே அடிப்படை அம்சம்.. அதனால்தான், ஆளுநரை, "ஹெட் ஆஃப் தி ஸ்டேட்" என்கிறோம்.. ஆனால், சட்டமன்ற தீர்மானங்களை, கிடப்பில் போடுவதாக எதிர்க்கட்சிகள் விடாமல் விமர்சித்தே வருகின்றன.

"ஹெட் ஆஃப் தி ஸ்டேட்"
குறிப்பாக, திமுகவையும் முந்திக்கொண்டு, ஆளுநரின் ஒவ்வொரு விஷயத்திலும் திருமாவளவன் ஆவேசமாகி விடுகிறார்.. ஆளுநர் மாளிகை ஆர்எஸ்எஸ் கூடாரமாக மாறி வருகிறது என்று முதன்முதலாக ஓபனாக சொல்லியதுடன், தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று குரல் எழுப்பியதும் விசிகதான் என்பதை மறுக்க முடியாது.. சனாதனம், திருவள்ளுவர், ஜியு போப், என ஒவ்வொரு விஷயங்களையும் கடந்து, இப்போது தமிழ்நாடு என்ற விவகாரத்தை ஆளுநர் கையில் எடுத்துள்ளார்..

ஜியூ போப்
""நாம் பாரதத்தின் ஒரு பகுதி என்ற உண்மையை நீங்கள் அறிவீர்கள். அதில் தமிழ்நாடு ஒரு இடம் என்பது தெரிந்ததே. தமிழகம் என்று நாம் அழைப்பது மிகவும் பொருத்தமானது. காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது.நம் நாட்டின் பிற பகுதிகள் மிக நீண்ட காலமாக வெளிநாட்டினரால் பல அழிவுகளைச் சந்தித்தன. பல குழப்பங்கள் மற்றும் நெருக்கடிகள் ஏற்பட்டன. இருந்தபோதும் இந்த மண்ணில் எப்படியோ பல ஆயிரம் ஆண்டுகளாக ஒற்றுமை பராமரிக்கப்பட்டு வருகிறது. முழு பாரதத்தையும் நிலைநிறுத்தி அதற்குப் புத்துயிர் தருவது இந்த நம்பிக்கை தான். இப்போது அதை சிலர் பொய்யாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது."" என்று, சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன் வளாகத்தில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் இருந்து சென்று திரும்ப ஏற்பாடுகளை செய்த அமைப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சியில் ஆளுநர் கூறியிருந்தார். இந்த கருத்துக்கு கண்டனங்களும், எதிர்ப்புகளும் வழக்கம்போல் குவிந்து வருகின்றன.. "இது ஆளுநர் ரவி என்ற தனி மனிதரின் கோபம் அல்ல. பாரம்பரியக் கோபம். தனது முன்னோர்களின் கோபத்தை பிரதிபலிக்க வந்திருக்கிறார். தினந்தோறும் திராவிடம் பேசுபவர் நம்மை விட, அவர்தான். திராவிடம் இல்லாமல் அவர் பேசுவது இல்லை. இது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது" என்று சற்று காட்டமாகவே கூறியிருக்கிறது முரசொலியின் தலையங்கம்.

கமல்ஹாசன்
மூத்த தலைவர்கள் கனிமொழி, வைகோ, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கமல்ஹாசன், மற்றும் அமைச்சர் உதயநிதி, உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.. அந்தவகையில், "தமிழ்நாடு" என்பது ட்விட்டரில் டிரெண்டிங்கிலும் இருந்து வருகிறது... ஆனால், ஒரே ஒருவர் மட்டும், ஆளுநர் ரவியின் பேச்சை ஆதரித்துள்ளார்.. அவர்தான், பாஜகவிலேயே இருந்துகொண்டு அடிக்கடி "சேம்சைட் கோல்" போடும் மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி..

ராஜ்கிரண்
"பகுப்பாய்வில் அனைத்து இந்தியர்களும் ஒரே மாதிரியான டிஎன்ஏவை கொண்டுள்ளனர். தமிழ்நாடு என்பது தமிழை தாய்மொழியாக கொண்ட மக்களுக்கான மாநிலம் அல்ல என்பதை தெளிவுப்படுத்துவதற்காக தமிழக ஆளுநரை நாங்கள் ஆதரிக்கிறோம். திராவிடம் என்பது ஆதி சங்கரரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு சமஸ்கிருத வார்த்தையாகும். ஆரியன் என்பது போலியான ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட வார்த்தையாகும்" என்று கூறியுள்ளார்..

சலம்பல்கள்
கடந்த 2 நாட்களாகவே, இந்திய அளவில் ட்விட்டரில் "தமிழ்நாடு" என்ற பெயர் பேசுபொருளாகி, ஆளுநர் கருத்துக்கு எதிர்ப்புகள் கூடியபடியே உள்ளன.. அந்தவகையில், திரைப்பட மூத்த கலைஞரும், வெகுஜன மக்களுக்காக அடிக்கடி குரல் எழுப்புவருமான நடிகர் ராஜ்கிரணும் ஒரு கருத்தை சொல்லி உள்ளார்.. அதில், "வேறு ஏதேதோ பிரச்சினைகளை மடைமாற்றுவதற்காக எழுப்பப்படும் சலம்பல்களையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, நம் கவனத்தை சிதற விட்டுவிடக் கூடாது. என் நாடு தமிழ்நாடு. இந்திய தேசத்தின் வளநாடு" என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார் ராஜ்கிரண்.. இதற்கு நெட்டிசன்கள் திரண்டு வந்து தங்கள் கமெண்ட்களை வலிய பதிவு செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications