பிரபல "கவர்ச்சி நடிகை"யின் சகோதரி ஷோபா சிக்கினார்.. லாட்ஜ்ஜூக்குள் நுழைந்த போலீஸ்.. குமுறும் குரல்கள்
பிரபல கவர்ச்சி நடிகை அல்போன்சா சகோதரி ஷோபா மோசடி வழக்கில் சென்னையில் கைதாகி உள்ளார்
சென்னை: 10 மாத காலமாக சென்னை போலீசாருக்கே டிமிக்கி கொடுத்து வந்த, பிரபல நடிகையின் சகோதரி தற்போது கைதாகி உள்ளார்.. லாட்ஜ் ஒன்றில் பதுங்கியிருந்த அவரை, நம்முடைய சென்னை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.
பிரபல நடிகை அல்போன்சாவின் சகோதரி ஷோபா வசந்த்.. இவர் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாகவே பிசினஸ் செய்து வருகிறார்.
பல வருட காலமாக, "பிளாஷ் கன்சல்டேஷன்" என்ற பெயரில் தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.. இதற்காக நிறைய கவர்ச்சி விளம்பரங்களையும் செய்திருக்கிறார்.

கன்சல்டேஷன்
இந்த நிறுவனம் மூலம், வெளிநாடுகளில் பலருக்கு வேலைவாங்கி தருவதாக சொல்லி உள்ளார்.. அதாவது, சிங்கப்பூர், கனடா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் 3 ரூபாய் மாத சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக விளம்பரங்களை செய்திருக்கிறார். இந்த விளம்பரத்தை பார்த்த பலருக்கும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு போக வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. அதனால், பலர் ஷோபாவிடம் நேரடியாகவே போனை போட்டு விசாரித்தார்கள்.. தங்களுடைய மகன், மகள், உறவினர்களுக்கு வேலை வேண்டும் என்றும் ஷோபாவிடம் கேட்டனர்.. இப்படி தன்னை அணுகும் அனைவரையும், பேச்சாலேயே மயக்கிவிடுவாராம் ஷோபா..

கன்வின்ஸ்
துளி சந்தேகம்கூட அவர்களுக்கு வந்துவிடாதவாறு, "ஈஸியாக கன்வின்ஸ்" செய்து, அவர்களுடைய மனதில் அதிகமான நம்பிக்கையை விதைப்பாராம்.. அந்த பேச்சை நம்பி, இவரிடம் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி உள்ளனர் பொதுமக்கள். ஆனால், அதற்கு பிறகுதான் ஷோபா தன்னுடைய வேலையை காட்ட துவங்கியதாக புகார்கள் வெடித்தன.. அம்பத்தூரை சேர்ந்த அஷ்ரப் அகம்மது என்பவர், தன்னுடைய மகனுக்கு, சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதற்காக மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை, 2019-ல் ஷோபாவிடம் தந்தாராம்.. அந்த வளசரவாக்கம் ஆபீசுக்கே நேரில் சென்று பணத்தை தந்திருக்கிறார்..

எஸ் ஆன ஷோபா
6 மாசத்தில் வேலை கிடைத்துவிடும் என்றாராம் ஷோபா.. ஆனால், வேலை கிடைக்கவில்லை.. பணத்தை திருப்பி தருமாறு கேட்டால், அந்த பணத்தையும் தரவில்லை.. இவரைபோலவே மேலும் பலர், ஷோபாவிடம், தாங்கள் கொடுத்த பணத்தை பற்றி கேட்டுள்ளனர். நாளுக்குநாள் தொந்தரவுகள் அதிகமாகவும், டக்கென வளசரவாக்கம் ஆபிசை ஓவர்நைட்டில் மாற்றிக்கொண்டு, நொளம்பூருக்கு சென்றுவிட்டாராம் ஷோபா.. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, அடுத்து என்ன செய்வது என்று யோசித்துள்ளார்கள்.. பிறகு, எல்லாரும் சேர்ந்து ஒரு வாட்ஸ் அப் குழுவை அமைத்து, ஷோபாவை அவருக்கே தெரியாமல் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

ஓவர்நைட் சேஞ்ச்
கடைசியாகத்தான், நொளம்பூர் ஆபீசை கண்டுபிடித்துள்ளனர்.. மொத்த பேரும் நேரடியாக கிளம்பி, நொளம்பூர் ஆபீசுக்கு சென்றுவிட்டனர்.. அப்போதும், பல்வேறு காரணங்களை சொல்லி பணத்தை தராமல் ஷோபா இழுத்தடித்திருக்கிறார். இதனால் விழிபிதுங்கி நின்ற ஷோபா, "கடந்த வருடம் மார்ச் மாதம் எல்லாருக்கும் கண்டிப்பாக வேலை கிடைக்க போகிறது" என்று ஷோபா சொல்லி உள்ளார்.. இந்த அளவுக்கு அவர் உறுதியாக சொல்லவும், வேறு வழி இல்லாமல், அவர் சொன்னதை கடைசியாக நம்பியிருக்கிறார்கள்.. பிறகு மார்ச் மாதம் நொளம்பூர் ஆபீசுக்கு சென்றுள்ளார்கள்..

நடிகை எங்கே
அப்போதுதான், அந்த ஆபீஸையும் மாற்றிக்கொண்டு, எஸ்கேப் ஆகியிருந்தார்.. செல்போன் முதல் எல்லா தடயங்களையும் ஆஃப் செய்துவிட்டு எஸ்கேப் தலைமறைவாகியிருந்தார்.. இதற்கு பிறகுதான், பாதிக்கப்பட்டவர்கள், கடந்த மே மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை வாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவில் ஷோபா மீது புகார் தந்தனர். இந்த புகாரின்பேரில், போலீசாரும் அவரை தேடி வந்தனர்.. 10 மாதமாகவே ஷோபா எங்கிருக்கிறார் என்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை.. இப்போதுதான் சிக்கி உள்ளார்.. கேளம்பாக்கத்தில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தாராம்.. அங்கு சென்று சுற்றுவளைத்து, அவரை கைது செய்துள்ளார்கள் நம் போலீசார்..

லாட்ஜில் ஷோபா
இந்த விஷயம் கசிந்ததுமே, ஷோபால் ஏமாற்றப்பட்ட மேலும், 20க்கும் மேற்பட்டோர் சென்னை கமிஷனர் ஆபீசுக்கு படையெடுத்து வந்துவிட்டனர்.. தன் மகனுக்கு வேலை வாங்கித் தருவதாக சொல்லி 7 லட்ச ரூபாயை ஷோபா பெற்று மோசடி செய்து விட்டதாக ரஜினி ராணா என்ற பெண் கதறி அழுகிறார். பி.டெக் படித்த தன்னுடைய மகனுக்கு துபாயில் 3 லட்ச ரூபாய் மாத சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 15 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக ஆவடியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் புலம்புகிறார்.. இப்படியே பலரையும் மோசடி செய்து, பல கோடி ரூபாய் ஏமாற்றியுள்ளாராம் ஷோபா.. எனவே, இவரால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்கிறார்கள் போலீசார்.. ஷோபாவிடம் விசாரணை நடக்கிறது.

வசந்த் ஷோபா
கைதாகி உள்ள ஷோபாவுக்கு 46 வயதாகிறதாம்.. தன்னுடைய கணவர் வசந்தனுடன் கேளம்பாக்கத்தில் வசித்து வருகிறாராம்.. இதுவரை 17 பேர் ஷோபா மீது புகார் தந்துள்ளனர்.. இந்த 17 பேரிடம் மட்டும் ரூ.74 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தருவதாக சொல்லி மோசடி செய்திருக்கிறார்.. 17 பேரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணையை வைத்து விசாரித்துள்ளனர்... அது போலி என்று பிறகுதான் தெரியவந்துள்ளது..

பிளாஸ் கன்சல்டன்சி
மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரி உத்தரவின்பேரில், துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கலாராணி, சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே, வளசரவாக்கத்தில் பிளாஸ் கன்சல்டன்சி என்ற பெயரில் வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்திய நிலையில், அதைமூடிவிட்டுதான், நொளம்பூரில் இன்னொரு ஆபீஸ் திறந்தார்.. ஆனால், தன்மீது பணம் தந்தவர்களுக்கு சந்தேகம் அதிகமாகிவிட்டதால்தான், அந்த ஆபீஸையும் காலி செய்துவிட்டாராம்..

டாக்குமெண்ட்டுகள்
பிறகு பாதிக்கப்பட்டர்கள் போலீசுக்கு சென்று, போலீசாரும் தன்னை தேடுவதை அறிந்ததும், யாருக்கும் தெரியாமல் ஓடி ஒளிந்துள்ளார்.. ஆனால், அம்பத்தூரை சேர்ந்த அஷ்ரப் அகமது என்பவர் கொடுத்த புகார் அடிப்படையில் ஷோபாவை தேடி வந்தநிலையில், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்படுவார் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இவரது வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலகத்திலும் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.. அங்கு, வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்புவதற்காக தயாரித்து வைக்கப்பட்ட போலி ஆவணங்களை பறிமுதல் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications