"நடிகை அம்பிகா".. தில் பெண் + திடீர் ட்வீட்.. "தெரியாமல் மார்பில் கை பட்டுடுச்சுங்க".. கதறும் டிரைவர்
ஜர்னலிசம் மாணவியின் துணிச்சலுக்கு நடிகை அம்பிகா பாராட்டு தெரிவித்துள்ளார்
சென்னை: ஜர்னலிசம் மாணவியின் துணிச்சலுக்கும், விடாமுயற்சிக்கும் நடிகை அம்பிகா, பாராட்டு தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து ஒரு ட்வீட்டையும் அம்பிகா பகிர்ந்துள்ளார்.
நேற்று முதல் ஒரு சம்பவம் சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. அந்த மாணவி ஜர்னலிசம் படித்து வருகிறார்.. தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, பழைய மகாபலிபுரம் சாலையில் தன்னுடைய தோழியுடன் ஊபர் ஆட்டோவில் சென்றுள்ளார்.. அப்போது அந்த ஆட்டோ டிரைவர் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது..

ஈஸ்ட் கோஸ்ட்
இதனால் அதிர்ந்து போன மாணவி, "அபாய அலாரம்" எழுப்பியிருக்கிறார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அந்த டிரைவர், ஆட்டோவில் இருந்து எகிறி குதித்து தப்பி ஓடியுள்ளார்.. இந்த சம்பவத்தை ட்விட்டரில் மாணவி விவரித்திருந்தார்.. அதில், "ஈஸ்ட் கோஸ்ட் மெட்ராஸிலிருந்து நானும் எனது நண்பரும் ஹோட்டலுக்கு திரும்பியபோது, ஐபிஸ் ஓஎம்ஆர் ஹோட்டலுக்கு அருகில், செல்வம் என்ற உபெர் ஆட்டோ ஓட்டுநர் எனது வலது மார்பகத்தை அழுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்" என்று பதிவிட்டுள்ளார்..

வலது மார்பகம்
அத்துடன் மேலும் சில ட்வீட்களை பதிவிட்டு, இது தொடர்பாக புகார் தருவதற்கு போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது என்ன நடந்தது என்ற முழு விவரத்தையும், விலாவரியாக பதிவிட்டுள்ளர்.. இந்த சம்பவம் குறித்து, காவல்துறையிடம் புகார் அளித்தபோது, பெண் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளித்தால் பெண் போலீசாரை அனுப்பாமல், மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்கு ஆண் போலீஸ் ஒருவரை அனுப்பி வைத்தார்களாம். செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும் மாணவிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குற்றச்சாட்டு
காவல் நிலையம் வெளியிலேயே நின்றுகொண்டு, காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான போட்டோக்களையும், சம்பந்தப்பட்ட ஊபர் ஆட்டோ டிரைவரின் போட்டோவையும், அந்த ஊபர் ஆட்டோவின் போட்டோவையும் மாணவி, ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்ல, இந்த ட்வீட்கள், போட்டோக்கள் அனைத்தையுமே ஊபர் நிறுவனத்துக்கும், காவல் துறையினரை tag செய்து, புகார் பதிவு செய்துள்ளார்..

சபாஷ் + தில்
இதையடுத்து, இந்த ட்வீட், இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. பாதிக்கப்பட்ட பெண் குறித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறையினரை tag செய்து இணையவாசிகளும் கமெண்ட்களை பதிவு செய்தனர்.. இந்த விஷயம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், மாணவியின் இந்த பதிவு சம்பந்தப்பட்ட ஊபர் நிறுவனம் கவனத்திற்கு சென்றது.. இதையடுத்து, அந்த ஆட்டோ டிரைவர் மீது நடவடிக்கை எடுப்பதாக ஊபர் நிறுவனமே மாணவியின் ட்விட்டர் பதிவுக்கு கமெண்டில் கருத்து தெரிவித்துள்ளது...

ஜர்னலிசம்
மேலும், காவல் ஆணையர் அலுவலகமும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மாணவிக்கு பதில் அளித்துள்ளது. "ஆட்டோ ஓட்டுநர் மீது செம்மஞ்சேரி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது... இதையடுத்து, அந்த டிரைவரை அடுத்த சில மணி நேரங்களிலேயே போலீசார் கைது செய்துவிட்டனர்.. இந்த சம்பவம் கடந்த 2 நாட்களாக பேசப்பட்ட நிலையில், ஒரு பக்கம் ஊபர் நிறுவனம், மறுபக்கம் காவல்துறை என இரு தரப்பிலும் புகார்களை விடாமல் தந்ததுடன், பாலியல் சீண்டல் குறித்து பகிரங்கமாகவும், துணிச்சலாகவும் பதிவிட்ட ஜர்னலிசம் மாணவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன..

நடிகை அம்பிகா
மாணவியின் இந்த விடாமுயற்சிக்கும், துணிச்சலுக்கும் நடிகை அம்பிகாவும் பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்... உபெர் ஆட்டோ டிரைவரின் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், அடுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அம்பிகா கேட்டுக் கொண்டுள்ளார்.. அம்பிகா இப்படி ட்வீட் பதிவிட்டதுமே பலரும் திரண்டு வந்து, "உங்களை போல பிரபலங்கள், இளம்பெண்களை தட்டிக்கொடுப்பது நல்ல விஷயம்.. இதனால் அந்த பெண்பிள்ளைகளுக்கு தைரியமும், துணிச்சலும் அதிகமாகும்" என்று பாராட்டி வருகின்றனர்.

கூகுள் பே
இதனிடையே, கைதான டிரைவர் செல்வம் இதுகுறித்து ஒரு விளக்கம் அளித்துள்ளார்.. ஆட்டோவில் சவாரிக்கு அந்த ஏற்றும்போதே, தன்னிடம் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி இல்லை என்று அந்த பெண்களிடம் சொன்னாராம்.. அதற்கு அந்த பெண்களும், சரி என்று சொல்லி பணம் தருவதாக ஒப்புக்கொண்டு ஏறிவிட்டு, இறங்கிய பின்பு பணம் இல்லை என்றார்களாம்.. மேலும், பேசிகொண்டிருந்தபோதே தன்னிடம் இருந்து செல்போனை பிடுங்கி கூகுள் பே, போன் பே இருக்கிறதா என்று அந்த பெண்கள் பார்த்தபோது, அவர்களிடம் இருந்து போனை திரும்பி பிடுங்கியபோது, தெரியாமல் கை மார்பில் பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.

மார்பில் கை
இவரது வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்துள்ளனர்.. இதையடுத்து அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தனர்.. அதில், ஒரு பெண் ஆட்டோவிற்கு வெளியில் நின்று கொண்டிருந்தபோது, இன்னொரு பெண் தன்னிடம் ஆட்டோ டிரைவர் அத்துமீறியதாக கூறி வெளியே ஓடி வந்ததும் பதிவாகியுள்ளது. மேலும், சம்பவம் நடந்த இடத்தில், ஏராளமானோர் சுற்றி வளைத்து தட்டி கேட்டதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.. இதையடுத்து, மாணவிகள் தந்த புகாரும் உறுதியாகி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications