Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரபல நடிகை பகீர்.. "மாஜி"க்காக காரில் வெயிட்டிங்.. வண்டிக்கார தெரு வாசற்படியிலேயே.. இப்ப புது கேஸ்

நடிகை சாந்தினி, மணிகண்டன் குடும்பத்தினர் மீது போலீசில் புகார் தந்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சாந்தினி இன்னொரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.. இது தொடர்பாக போலீசில் புகார் தரவும், மாஜி அமைச்சரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடைபெற உள்ளது.

கல்யாணம் செய்து கொள்வதாக தன்னை மணிகண்டன் ஏமாற்றிவிட்டதாகவும், அவரை நம்பி 3 முறை அபார்ஷன் செய்து கொண்டேன் என்றும், நடிகை சாந்தினி 2 வருடங்களுக்குமுன்பு போலீசில் புகார் தந்திருந்தார்..

அத்துடன் இது தொடர்பாக சில ஆதாரங்களையும் அளிக்கவும்தான், இந்த விஷயம் சூடுபிடித்தது.அடையாறு மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மணிகண்டனை விசாரிப்பதற்குள், எஸ்கேப் ஆகிவிட்டார்..

டிஸ்மிஸ்

டிஸ்மிஸ்

ஆனால், கோர்ட்டிற்கு சென்று அவர் தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது.. எத்தனையோ முறை ஜாமீன் கேட்டும் அவருக்கு தரப்படவில்லை.கோர்ட் கேஸ் நடந்து கொண்டிருக்கும்போதே மணிகண்டனை காணவில்லை.. முன்ஜாமீன் மனு கோர்ட்டில் டிஸ்மிஸ் ஆகும்வரை, மணிகண்டன் சீனிலேயே வரவில்லை.. அவரை அப்போதிருந்தே போலீசார் தேடி வந்தனர்.. தனிப்படைகள் சென்னைக்கும், சேலத்துக்கும், ராமநாதபுரத்துக்கும், மதுரைக்கும் தனித்தனியாக பறந்தது.. தீவிரமாகவும் தேடி வந்தது. இறுதியில் பெங்களூரில் கைது செய்துவிட்டனர்.

 சிட்டிங் எம்எல்ஏ

சிட்டிங் எம்எல்ஏ

இருந்தாலும், மணிகண்டன் எப்படி ஒருமாத காலத்துக்கும் தலைமறைவாக இருக்க முடியும்? இதற்கு யாரோ ஒருவர் பின்னணியில் இருந்து உதவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.. அப்போதுதான் அந்த எம்எல்ஏ குறித்த தகவல் கசிந்தது.. அவர் அப்போதைய ஒரு சிட்டிங் எம்எல்ஏ.. முக்கிய கட்சி அதுவும் தேசிய கட்சியை சேர்ந்தவர்.. அதிலும் இவர் நெல்லையை சேர்ந்த தென்மாவட்ட எம்எல்ஏ என்று சொல்லப்பட்டது.. ஒருவேளை அந்த தகவல் உறுதியானால் அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கூடும் என்றும் சொன்னார்கள்..

 வண்டிக்கார தெரு

வண்டிக்கார தெரு

ஆனால், அந்த பிரமுகர் மீது கை வைத்தால் மத்திய அரசுடன் மோதலில் ஈடுபடுவதாக அர்த்தமாகிவிடும் என்பதால், அந்தத் திட்டம் இறுதியில் கைவிடப்பட்டதாம்... பிறகு மணிகண்டன் ஜாமீனில் வெளிவந்தார்.. இதனிடையே, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, மணிகண்டனும், சாந்தினியும் சமரசம் செய்து கொண்டனர்... அதனடிப்படையில் மணிகண்டன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஹைகோர்ட் ரத்து செய்தது.இதோடு விவகாரம் முடிந்துவிடும் என்று பார்த்தால், 4 நாட்களுக்கு மன்பு, சாந்தினி திடீரென ராமநாதபுரம் வண்டிக்கார தெருவுக்குள் நுழைந்தார்.. அங்கேதான் மணிகண்டன் வீடு உள்ளது..

 வாசற்படியில் நடிகை

வாசற்படியில் நடிகை

ஆனால் சாந்தியை வீட்டிற்குள் விடாமல், மணிகண்டன் உறவினர்கள் திருப்பி அனுப்பினர்... இதனால், மணிகண்டன் எப்படியும் வீட்டிற்குள்ளிருந்து வெளியே வருவார் அல்லது வெளியில் இருந்து வீட்டுக்குள் செல்லக்கூடும் என்பதால், அந்த வீட்டு வாசற்படியிலேயே காரை நிறுத்திவிட்டு, காருக்குள் ரொம்ப நேரமாக உட்கார்ந்திருந்தார்.. அப்போது செய்தியாளர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டனர்.. அதற்கு சாந்தினி, "என்னுடைய மற்றும் அவரது நலன் கருதி 4 மாதங்களுக்கு முன்பு வழக்கை திரும்ப பெற்றேன்...

 காருக்குள் நடிகை

காருக்குள் நடிகை

அப்போது மணிகண்டன் என்னிடம், என்னால் தான் உன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது, அதனால் உன்னை பார்த்து கொள்கிறேன் என்று சொன்னார்.. என்னை பார்த்து கொள்வதாக சொல்லவும்தான் அந்த கேஸை திரும்ப பெற்றேன்.. இப்போது கேஸை வாபஸ் வாங்கியதுமே என்னை கவனித்து கொள்வதில்லை.. 3 மாதமாக என்கிட்ட பேசுவதுமில்லை.. எங்கோ தலைமறைவாகிவிட்டார். அவரை சந்திப்பதற்காக நேற்று முன்தினம் மதுரைக்குகூட சென்றேன்... என்னை பார்த்ததுமே உடனே அங்கிருந்து போய்விட்டார் என்று கூறியிருந்தார்.

வாசற்படியில்

வாசற்படியில்

இதையடுத்து, காரில் இருந்து இறங்கி மறுபடியும் மணிகண்டன் வீட்டிற்குள் செல்ல சாந்தினி முயன்றபோது, மணிகண்டனின் அம்மாவும், அவரது உறவினர்களும் சாந்தினியை அடித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.. இதையடுத்து, சாந்தினி, அவர்கள் மீது அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார்.. அந்த புகாரின்கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், நாளை மறுநாள் மணிகண்டனின் அம்மா மற்றும் அவரது உறவினர்களை போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளனர்.. கேஸை வாபஸ் வாங்கியதுமே, மணிகண்டனை சந்திக்க நிறைய முயற்சி செய்துள்ளார் சாந்தினி.. ஆனால், மணிகண்டன் அவரை சந்திக்காமல் அவாய்ட் செய்து வரவும்தான், அவர் வீட்டு வாசற்படியிலேயே காத்திருக்க வேண்டியதாயிற்று கண்ணீர் மல்க சொல்கிறார் சாந்தினி..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+